Advertisment

இந்தியாவின் பெயரை கூட இந்துராஷ்டிரா என்று மாற்றுவார்கள் - திருமா பேச்சு!

திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில்திருமாவளவன் பேசியதாவது, "மதவாத சங் பரிவார் கும்பல் தங்களுடைய அரசியல் ஆதாயத்துக்காக திருவள்ளுவரை கையில் எடுத்துள்ளனர். திருவள்ளுவர் சிலை மீது சாணி அடித்துள்ளார்கள். அவருக்கு காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள். அதனை கண்டிக்கும் விதமாக தான் இந்த கண்டன கூட்டம் நடைபெற இருக்கிறது. திருவள்ளுவருக்கு எந்த காவிச்சாயமும் பூச முடியாது. எந்த மதத் சாயமும் அடிக்க முடியாது. அவ்வாறு யாரேனும் முயன்றால் அவர்கள் நிச்சயம் தோற்று போவார்கள். அவர்களின் முயற்சி தோல்வியில் தான் முடியும். அது மதவாத இயக்கங்களுக்கு விரைவில் புரிய வரும். சாணி அடிப்பதால் திருவள்ளுவரின் புகழை குறைத்துவிட முடியாது. அவ்வாறு செயவது என்பது அவர்களுக்கு இடைக்கால மகிழ்ச்சியை தரும் என்பது தவிர வேறு எதையும் தர போவதில்லை. அதனால் அதை பற்றிய கவலை எப்போதும் இல்லை. ஆனால், கவலை என்னவென்றால் தமிழக அரசு கூட இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தயங்குகிறதே என்பதுதான். அப்படி கைது செய்யப்பட்டவர்கள் கூட சில மணிநேரங்களில் வெளியே வந்துவிடுகிறார்கள். இப்படி தமிழக அரசு வலு குன்றி இருக்கிறதா அல்லது மதவாத சக்திகளுக்கு அடிபணிந்து கிடக்கிறதா என்று வருத்தமாக இருக்கிறது. சிவனை யார் பார்த்தது, அவருடைய உருவம் எப்படி வந்தது. ஒரு கற்பனை. அதுபோலவே திருவள்ளுவர் இப்படி இருந்தார் என்று யார் சொல்வது. தமிழ்நாட்டில் வள்ளுவர் என்ற சாதி உண்டு. அவர்கள் பூணூல் அணிவார்கள். அப்படி பார்ப்பனருக்கு முன்பே வள்ளுவன் பூணூல் அணிந்திருந்தார்கள்.

Advertisment

hg

வள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவன் என்பதில் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்கள். உலகத்தில் பிறப்பால் உயர்வு தாழ்வு இருக்கிறது என்று வேறு எந்த மதத்திலும் சொல்ல வில்லை. எனவே இந்து மதத்தில் அவை அடைப்பது என்பது எல்லோரும் ஒன்றே என்ற வள்ளுவனின் கோட்பாடுகளுக்களுக்கு எதிரானது. அயோத்தி விவகாரம் தொடர்பாக விரிவாக பேச வேண்டி இருக்கிறது. ராமர் கோயில் கட்ட வேண்டாம் என்று நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் சட்டத்தின் படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அவ்வாறு இந்த விஷயத்தில் நடக்கவில்லை. சர்ச்சைக்குரிய இடம் பொதுவானது, வேறு இடங்களில் நீங்கள் கோயிலை கட்டிக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தால் அது நல்ல தீர்ப்பு என்று சொல்லலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. ராமர் கோயில் கட்டிய பிறகு இந்தியாவின் பெயரை கூட இந்துராஷ்டிரா என்று மாற்றுவார்கள். சொல்ல முடியாது அவர்களின் அடுத்த இலக்கு தாஜ்மஹாலாக கூட இருக்கலாம்" என்றார்.

Advertisment

thiruma valavan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe