Skip to main content

வீடே இல்லாதவர்களிடம் பத்திரத்தை கேட்டால் எப்படி கொடுக்க முடியும்..? - திருமாவளவன் கேள்வி!

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி சிஏஏ சட்டத்தால் தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு என்ன பிரச்சனை வந்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக எதிர்கட்சியினர் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள்.

அந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த யாராவது ஒருவர் இந்திய சுதந்திரத்துக்காக போராடி சிறை சென்றார்கள், தியாகம் செய்தார்கள் என்று சான்று காட்ட முடியுமா? ஒரே ஒரு ஆள் போனார் வீர சவார்க்கர், அவர் வீர சவார்க்கர் அல்ல கோழை சவார்க்கர். அரசியலில் எல்லாம் இப்படிதான். கோழைகளுக்கு எல்லாம் அஞ்சா நெஞ்சம் என்று பெயர் வைப்பார்கள். மாவீரன் என்று அழைப்பார்கள். நோஞ்சானை கொன்றாலே அவன் மாவீரன் ஆகிவிடுவான். அந்த மாதிரி செல்லூலார் சிறையில் நீங்கள் சொல்கின்ற படி மட்டும் நடக்கிறேன்,வேறு எதையும் செய்யவில்லை என்று கூறி சரண்டர் கடிதம் எழுதி கொடுத்துவிட்டு வெளியே வந்த ஆள்தான் இவர். இவருக்கு பெயர்தான் வீர சவார்க்கர் என்று வைத்துள்ளார்கள். அந்த வகையில் இந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து வெள்ளையர்களை எதிர்த்து போராடினார்கள், சிறை சென்றார்கள் என்று ஒருவரையாவது காட்டமுடியுமா? மாறாக விடுதலைக்காக போராடிய காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே, இவர்களுக்கு தேச பக்தன். 

 

hj


பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வந்த ஒரு சதவீத முஸ்லிகள் கூட நல்லவர்கள் இல்லையா, எந்த அடிப்படையில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் என்ற முடிவுக்கு வந்தீர்கள். இந்திய அரசியலமைப்புக்கு எதிராக இந்த குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டுள்ளது.  மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிக்க கூடாது. இது இந்த அரசாங்கத்தின் முஸ்லிம் விரோத போக்கு என்பது வெளிப்படையாக தெரிகின்றது. இந்த சட்டம் இந்திய முஸ்லிம்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்துகின்றது. இந்த சிஏஏ சட்டம் மதத்தின் அடிப்படையில் இருப்பதால் இந்திய அரசியலமைப்பையே கேள்விக்குறி ஆக்குகிறது.  சிஏஏ சட்டம் இப்படி இருக்கிறது என்றால் அடுத்து என்பிஆர். இந்த என்பிஆர் சட்டத்தை பற்றி இன்னும் எடப்பாடியே தெளிவில்லாமல் இருக்கின்றாரோ என்ற அச்சம் நமக்கு எழுகின்றது. அவருக்கே இது பாதிப்பை ஏற்படுத்தலாம். அவருடைய தாயாரும், தந்தையாரும் உயிருடன் இருந்தால் அவர்களின் பிறப்பு சான்றிதழை காட்ட வேண்டும்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது இந்தியாவில் இருக்கும் இந்தியர்கள், வெளிநாட்டினர் உள்ளிட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆகும். அவர்கள் கேட்கும் இந்த பிறப்பு சான்றிதழை நம்மால் கொடுக்க முடியவில்லை என்றால் நம்முடைய பதிவில் டி என்று போட்டு விடுவார்கள். டி என்றால் சந்தேகத்துக்குரிய குடிமகன் என்று பொருள். அப்படி பட்ட நபர்களை கணக்கீடு செய்துவிட்டு போய் விடுவார்கள். ஆனால், ஒருவாரம், பத்து நாள் கழித்து அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வரும். அங்கே உங்களிடம் ஆவணங்களை கேட்பார்கள். நீங்கள் ஆதார் கார்டை கொடுத்தாலும், ரேஷன் கார்டை கொடுத்தாலும், வாகன ஓட்டுநர் உரிமத்தை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாறாக இதற்கு முன்னால் நிலம் வாங்கிய, விற்ற பத்திரம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்பார்கள். அந்த பத்திரங்கள் அனைவரிடமும் இருக்குமா என்றால் அனைவரிடமும் இருக்காது. அரசாங்கம் கொடுத்த புறம்போக்கு பத்துக்கு பத்து இடத்தில் காலங்காலமாக வாழ்ந்து வருபவர்களிடமும் நீங்கள் பத்திரத்தை கேட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்" என்றார்.

 

Next Story

சீமான் கேட்ட சின்னம் மதிமுகவிற்கு; கிட்டத்தட்ட க்ரீன் சிக்னலில் விசிக

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Seeman asked for the symbol for Mdmk; Almost at the green signal for vck

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தி இருக்கும் இந்த நிலையில், விசிகவிற்கு பானை சின்னம் கொடுக்க வேண்டும் என கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. முன்னதாக மதிமுகவும் பம்பரம் சின்னம் வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. ஆனால், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக தேர்தல் ஆணையம் மறுத்திருந்த நிலையில் தற்போது அண்மை செய்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அவர்கள் கேட்ட பானை சின்னம் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக 38 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலின் போதே துரை வைகோ மூன்று சின்னங்களை வலியுறுத்தி இருந்தார். அதில் முதல் சின்னமாக பம்பரம் சின்னத்தையும், இரண்டாவதாக தீப்பெட்டி சின்னம், மூன்றாவதாக கேஸ் சிலிண்டர் சின்னத்தை கேட்டிருந்தார். ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், மாற்று சின்னத்தை பெற மதிமுக முயன்று வருகிறது.

துரை வைகோ மாற்றாக கேட்டிருக்கும் தீப்பெட்டி சின்னத்தையும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கேட்டுள்ளார். மதிமுக அங்கீகாரம் இல்லாத கட்சியாக இருந்தாலும் பதிவுபெற்ற அரசியல் கட்சியாக இருப்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் தீப்பெட்டி சின்னம் கிடைக்கும் என மதிமுக வட்டாரம் எதிர்பார்த்து காத்துள்ளது.

அதேபோல சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருக்கும் விசிக இரண்டு தொகுதியில் போட்டியிடும் நிலையில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனைத் தவிர சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் பானை சின்னம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் பானை சின்னம் கேட்டவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் திருமாவளவனுக்கு பானை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. அதேபோல் விழுப்புரத்தில் போட்டியிடும் விசிகவின் வேட்பாளர் ரவிக்குமாரை தவிர வேறு யாரும் பானை சின்னம் கேட்காததால் விழுப்புரம் தொகுதிக்கும் பானை சின்னம் கிடைக்க வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

மதிமுகவுக்கு தற்போது கிடைக்கப் போவதாக இருக்கும் தீப்பெட்டி சின்னத்தை இதற்கு முன்பே நாம் தமிழர் கட்சி கேட்டிருந்ததாகவும், கிடைக்காமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

'நீதிமன்றத்தின் உத்தரவை மக்கள் மன்றம் புறக்கணிக்கும்' - திருமா கருத்து

Published on 12/12/2023 | Edited on 12/12/2023

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும், எதிர்ப்பும் கிளம்பியது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.  வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

 

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து என்ற தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்தேன். காஷ்மீருக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மன்றம் புறக்கணிக்கும் என்பது உறுதி' என தெரிவித்துள்ளார்.