Advertisment

 எஸ்.பி.க்கு கார், அவரது இரண்டு மனைவிகளுக்கு டிசைன் டிசைனாக அள்ளிக் கொடுத்த முருகன்...

திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த 2ஆம் தேதி ரூபாய் 13 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

Advertisment

இந்தநிலையில் திருவாரூரைச் சேர்ந்த முருகன் பெங்களூரு நீதிமன்றத்திலும், சுரேஷ் என்ற கொள்ளையன் செங்கம் நீதிமன்றத்திலும் சரண் அடைந்தனர். சுரேஷை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் சுரேஷ் பல தகவல்களை சொல்லியுள்ளான் என்று தனிப்படை போலீசார் தெரிவிக்கின்றனர்.

murugan

திருச்சி தனிப்படை போலீஸ்காரர் ஒருவர் கூறியபோது, முருகன் கொள்ளையடித்து வரும்போதெல்லாம் திருவாரூர் போலீசார் சிலருக்கு பணம், நகைகளை வழங்கி, அவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளான். இதனால் அவன் மேல் திருவாரூரில் எந்த வழக்குகளும் இல்லை.

Advertisment

சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூரில் எஸ்.பி.யாக இருந்த ஒருவருக்கு முருகன் நெருக்கமாக இருந்துள்ளான். எஸ்.பி. குடும்பத்தினருடனும் நெருக்கமாக பழகிய முருகன், அவருக்கு ரூபாய் 18 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கி கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அந்த எஸ்.பி.க்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். அவர்களுக்கு விரும்பியநகைகளைடிசைன் டிசைனாகமுருகன் வாங்கி கொடுத்துள்ளான். இருப்பினும் முருகனை விசாரணை செய்ததால்தான் மேலும் உண்மைகள் வெளிவரும்.

இந்த கும்பலிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது. மேலும் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற அவர், இந்த கொள்ளை கும்பல் மதுரையில் உள்ள நகைக்கடையில் கொள்ளை, பஞ்சாப் நேஷ்னல் பேங்க் நகைக்கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது என்று தெரிவித்தனர்.

jewelry lalitha jewellery Murugan Robbery thief
இதையும் படியுங்கள்
Subscribe