தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திராவிட வெற்றிக் கழகத்தின் முதன்மை செயலாளர் வல்லம் பசீர் தன்னுடைய அரசியல் பார்வைகளை நக்கீரனின் அரசியல் சடுகுடு நிகழ்ச்சில் பகிர்ந்துகொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/26/181-2025-12-26-15-30-37.jpg)
என்டிஏ கூட்டணியில் வேற வழி இல்லாமல் பாஜகவிற்கு 70 சீட்டுகள் கொடுக்கும் இடத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். கடந்த முறை போட்டியிட்ட இடங்களை விட கூடுதலான இடங்கள் தான் பாஜக இந்த முறை போட்டியிடும். அதுதான் பாஜகவினுடைய கணக்கும் கூட. அந்த கணக்கை நேரடியாக கேட்டால் உங்களுக்கு என்ன வாக்கு சதவீதம் என கேட்டுருவாங்க. அதனால்தான் நாங்கள் எல்லோரையும் பார்த்துக்கிறோம் எனச் சொல்வதால் 70 சீட்டை ஈஸியா வாங்கிட்டு போயிடலாம் என பாஜக பார்க்கிறது.
தேமுதிகவுக்கு ஆறு சீட்டு என ஒரு கணக்கு வெளியாகி இருக்கிறது. பிரேமலதா விஜயகாந்த் ரொம்ப தெளிவாக சொல்லிட்டாங்க நாங்கள் மாநாடு கூட்டி இருக்கிறோம். அந்த மாநாட்டில் தான் எங்கள் முடிவை அறிவிப்போம் எனச் சொல்லிருக்காங்க. முடிவே அறிவிக்காத தேமுதிக, கூட்டணிக்கு வந்துவிட்டதாக ஒரு கணக்கு காட்டப்படுகிறது. டி.டி.வி.தினகரனை வைத்து அவருக்கு 6 சீட்டு என ஒரு கணக்கு காட்டப்படுகிறது. ஓபிஎஸ்க்கு மூன்று சீட்டு என ஒரு கணக்கு காட்டப்படுகிறது.
இதெல்லாம் யாரை ஏமாற்றுகிற வேலை? ஊடகத்துறைக்கு திட்டமிட்டு செய்திகள் கொடுக்கப்படுவது அது ஒரு லாபி. அந்த லாபியை பாஜகவே செய்திருக்கு என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இல்லையென்றால் இந்த செய்தி எப்படி கசிந்து வந்தது. பாஜகவை திட்ட முடியாமல் ஊடகங்களை டி.டி.வி.தினகரன் திட்டுகிறார். ஏன் நீங்க பாஜகவை திட்டாமல் ஊடகங்களை திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். செய்தி கொடுத்தவர்களை விட்டுட்டீங்க. செய்தி போட்டவர்களை திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். எந்த முன்னேற்றமும் இல்லாமல் தான் பியூஷ் கோயலுடைய சந்திப்பு அமைந்திருக்கிறது.
அதிமுக தரப்பிலயே ஒரு டீம் பெரிய அப்செட்டில் இருக்கிறது. ஏனென்றால் பாஜக கேட்கும் இந்த 70 சீட்டுகளில் நேற்றைக்கு பேசிய மிக முக்கியமான விஷயம் முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய தொகுதிகள் பல இருக்கு. அவர்கள் முதல் கோரிக்கை என்ன வைக்கிறார்கள் என்றால் தொண்டாமுத்தூரில் நாங்கள் போட்டியிடுறோம் என பாஜக கோரிக்கை வைக்கிறது. தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி. எஸ்.பி. வேலுமணிக்கே இப்படி ஒரு நெருக்கடி வந்துவிட்டது. அதே மாதிரி செல்லூர் ராஜ் தொகுதியை, திருமங்கலம் தொகுதியை பாஜக கேட்கிறது. இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு மிகப்பெரிய நெருக்கடி வந்துவிட்டது. பியூஷ் கோயலை போட்டால் இலகுவாக எல்லாம் நடக்கும் அதிமுக எதிர்பார்த்தது. ஆனால் அதைவிட கூடுதலான சிக்கல் இப்போது உருவாகி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/26/183-2025-12-26-15-30-13.jpg)