யூதர்கள் கொண்டாடக்கூடிய 'ஹனுக்கா' என்ற பண்டிகையின் கொண்டாட்ட நிகழ்வை ஒட்டி கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டாய் கடற்கரையில்  நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் 2 பேர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 12 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். இரு காவல்துறை அதிகாரிகள் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பதற்றமான சூழலை உருவாக்கி இருக்கிறது.
Advertisment
அதேசமயம் இந்த கொடூர சம்பவம் நடந்த இடம் முழுவதுமாக நியூ சவுத் வேல்ஸ் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் குடிபெயர்ந்து வாழ்ந்து வந்த சாதாரண பழ வியாபாரியான அகமது அல் அகமது, துப்பாக்கி ஏந்திய நபரிடம் இருந்து பல உயிர்களை காத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.நா அதிகாரி கண்ணன் நக்கீரனின் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். 
Advertisment

ஒரு அமைதியான நாடு என்று  பார்க்கப்பட்ட  ஆஸ்திரேலியாவில் ஒரு துப்பாக்கி சூடு சிட்னி நகரத்தை தாண்டி உலகம் முழுக்க ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உங்களுடைய முதற்கட்ட பார்வை என்ன?

 

153
sydney Photograph: (incident)
இது நாமெல்லாம் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய ஒரு கொடுமையான நிகழ்வு.  போண்டாய் கடற்கரை என்பது பல சுற்றுலா பயணிகள் விரும்பிப் போகும் இடம். அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரம் யூதர்கள் கூடினார்கள். எதற்கு கூடினார்களென்றால் அவர்கள் அவர்களுடைய ரொம்ப புனித பண்டிகையான 'ஹனுக்கா' நம்முடைய தீபாவளி தீபாவளி மாதிரியான பண்டிகை. அதை தொடங்குவதற்காக அவர்கள் கூடினார்கள். இந்த ஹனுக்கா திருவிழாவினுடைய முக்கியத்துவம் அவர்களுடைய முதல் கோவிலை கிரேக்கர்களிடமிருந்து மீட்டதை நினைவு கூறும் ஒருநாள். அது அவங்களுக்கு ரொம்ப புனிதமான நாள். கிரேக்க கடவுள்கள் எல்லாம் கொண்டுவந்து வச்சிட்டாங்க. அதையெல்லாம் அப்புறப்படுத்தி இவர்களுடைய யூத மதத்தையும் நம்பிக்கையையும் இவர்களுடைய நடைமுறைகளையும் இவர்கள் தொடக்கத்திலிருந்தே இதை எதிர்ப்பவர்கள் பல இடங்களில் இருந்திருக்கிறார்கள். இவர்கள் அவர்களை ஆண்ட கிரேக்கர்கள் எதிர்த்தார்கள்.அதன்பின் அவர்களோடு தொடர்ந்து போர் செய்து அனுப்பின பிறகு கோவிலை மீண்டும் இவர்கள் கைப்பற்றுகிறார்கள்.
Advertisment
அது சாலமன் கட்டிய கோவில் அந்த கோவிலைக் கைப்பற்றிய பிறகு அதனுடைய புனித தன்மை எல்லாம் போய்விடுகிறது. அதை மீண்டும் அவர்கள் புனிதமாக்குகிறார்கள். அந்த கோவிலில் அவர்கள் அவர்கள் கிட்ட இந்த கோவில் திருப்பி வரும்பொழுது ஒருநாள் மட்டும் எரியக்கூடிய ஒரு புனித எண்ணெய் ஆலிவ் ஆயில் விளக்கு ஒரு நாள் மட்டுமே எரியும். அதை ஒரு அற்புதமா அவர்கள் நினைக்கிறார்கள்.  அதை கொண்டாடுகிற விதத்தில் அதாவது இது வந்து யூத மதத்தையும் நம்பிக்கையையும் எதிர்ப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் இதையெல்லாம் மீறி யூதர்கள் தங்களுடைய நம்பிக்கையையும் தங்களுடைய மீளும் ஆற்றலையும் தங்களை அந்த கோவிலை மீண்டும் அர்ப்பணிக்கிற ஒரு திருவிழாதான் இந்த 'ஹனுக்கா'. நம்முடைய தீபாவளி மாதிரி அதாவது இருள் விலகி ஒளி வரும் ஒரு விழா.
குறிப்பதற்காக ஒன்பது விளக்குகளை ஏற்றுவார்கள். ஒரு விளக்கை எடுத்து மீதி எட்டையும் பொருத்திட்டு இந்த விளக்கையை வைப்பார்கள். அதனுடைய தொடக்க நாளில் அவர்கள் அங்கு குழுமியிருந்தபோது இந்த துப்பாக்கிசூடு நடந்தது. இதில் நமக்கு என்ன இது ஒரு துரதிர்ஷ்டமான ஒரு நிகழ்வு. இதைச் செய்தவர் உயிரோடு இல்லை. இங்க நமது ஹைதராபாத்தில் டோலி சவுக்கி என்ற  ஒரு இடத்தில் இருந்து  1998ல் படிக்க சென்றுள்ளார். அவர் பெயர் சஜித் அக்ரம். இந்த துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமானவர். அவர்தான் இதைப் செய்தது. அவர் இந்தியப் பிரஜை. அவரை பதில் தாக்குதலில் அவர் இறந்து போய்விட்டார். அவருடைய மகன் நவீத் அக்ரம் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் இருக்கிறார். அவர் மீது 15 குற்றச்சாட்டுகளை சொல்லியுள்ளனர். பயங்கரவாதம், பல கொலைகள் என அந்த நாட்டு அரசு அவர் மீது வழக்கு குற்றம் சாட்டி இருக்கிறது.
156
sydney Photograph: (hero)
இது ஒரு பக்கம். ஆஸ்திரேலியா ஒரு அமைதியான நாடு. அந்த நாடு வந்து நமது நாடு மாதிரி ஒரு இரண்டரை மடங்கு பெரிய நாடு பூகோள ரீதியாக. ஆனால் அங்க இருக்கிற மக்கள் தமிழ்நாட்டில் இருக்க மக்களை விட ரொம்ப குறைவானவர்கள். 2.8 எட்டு கோடி பேர் தான் இருக்கிறார்கள். அதாவது இரண்டு கோடியே 80 லட்சம் பேர் தான் இருக்கிறார்கள். அதுல யூதர்கள் லட்சத்து 14 ஆயிரம் பேர்தான். அதனால் அவர்கள் ரொம்ப சொற்பம். அங்க நிறையக் குடியேறிகள் இந்தியர்கள், இலங்கைத் தமிழர்கள் பல நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா இவ்வளவு பெரிய நாடா இருக்கறதுனாலயும் ஒரு அமைதியான ஒரு நாடா இருக்கறதுனாலயும் பல பேர் குடியேறி வருகிறார்கள்,  பக்கத்தில் இருக்க நியூசிலாந்தில்  இருந்து வருபவர்கள் இருக்கிறார்கள்.மலேசியாவில் இருக்கக்கூடிய தமிழர்கள் பலர், ஆஸ்திரேலியாவை தங்களுடைய மறு தாயகமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு இடம் அந்த இடத்தில் இப்படி ஒரு ஒரு அசம்பாவிதம் நடந்திருச்சு. இதற்கு முன்னாடி இந்த மாதிரி நடந்திருக்கான்னா ஒரு பள்ளிவாசலில் இந்த மாதிரி ஒரு பெரிய தாக்குதல் நடத்தி பலபேர் மடிந்துவிட்டார்கள். அது இதற்கு நேர் எதிரான தாக்குதல். இந்த  தாக்குதலில் இருக்கக்கூடிய ரொம்ப மனதை நெகிழ வைக்கும் ஒரு நிகழ்ச்சி என்னன்னா ஒரு அகமது அல் அகமது என்ற சிரியன் துப்பாக்கி ஏந்திட்டு இருந்தவர்களை பிடித்து அவர்தான் தடுத்தார். இவ்வளவு பெரிய ஒரு உன்னத மனசு அவருக்கு எப்படி வந்திருக்கும். ஒரு நம்பிக்கை என்பது காப்பாற்றிய அந்த சிரியன் மாதிரியும் சில பேரை உருவாக்குகிறது.