கடனில் உள்ள அபார்ட்மெண்ட் வீட்டை லீசுக்கு விடுவதாக ஏமாற்றி சுமார் 15 பேரிடம் 2 கோடிக்கு அதிகமாக பணத்தை ஒரு நபர்  ஏமாற்றிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

முன்னதாக இந்த சம்பவத்தில் நடுத்தர வயதுடைய நபர் ஒருவர் பவ்வியமாக கவரில் வைத்த பணக்கட்டை பெறும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. அதில் ''பணத்தை பிரித்து பாருங்க'' எனச் சொல்ல  ''நோ நோ பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கமேல நம்பிக்கை இருக்கும்மா. நான் ரியல் எஸ்டேட்டில் பல தொகைகளை பார்த்தவன். பார்வையிலேயே கணக்கிட்டு விடுவேன். சோ ஓபன் பண்ணி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை'' எனப் பேசும் காட்சிகள் இருந்தது. யார் அந்த நபர்? பலரை ஏமாற்றியது எப்படி? என்ற தகவல்கள் தற்போது வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

052
''The house is for lease, will you come....''- 2 crores of money; 15 people get the same 'Vibhuti' Photograph: (chennai)

சென்னை போரூர் அடுத்துள்ள கருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவத்ஸ் (43). மாங்காடு மற்றும் ஆவடி பகுதியில் இரண்டு அபார்ட்மெண்ட்கள் இருந்துள்ளது. அவை வங்கிக் கடனில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீவத்ஸ் பேஸ்புக் மற்றும் நோ புரோக்கர், ஓஎல்எக்ஸ் உள்ளிட்ட விற்பனைத் தளங்களில் வீடு லீசுக்கு உள்ளது என புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும் லீசில் எடுக்க விருப்பம் தெரிவித்து அவரைத் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு வீட்டை காட்டிய ஸ்ரீவத்ஸ் 'உங்களுக்கு வீட்டை தருகிறேன்... உங்களுக்கு வீட்டை தருகிறேன்...' என பலரிடம் எட்டு லட்சம், பத்து லட்சம் என பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

Advertisment

இப்படிபணம் கொடுத்தவர்களில் ஒருவர் அவருக்கே தெரியாமல் 5 லட்சம் ரூபாய் பணம் பெறுவதை வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் தான் ''நோ நோ பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பார்வையிலேயே கணக்கிட்டு விடுவேன்'' என்ற காட்சி சிக்கியது. முன்பணம் பெற்றுக்கொண்ட ஸ்ரீவத்ஸ் ஒரு தேதியை குறிப்பிட்டு அந்த தேதியில் வீட்டை காலி செய்து விடுவார்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பிடுவார். அந்த குறிப்பிட்ட தேதி நெருங்கும் சமயத்தில் செல்போனை ஸ்விச் ஆப் செய்வதை ஸ்ரீவத்ஸ் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

059
''The house is for lease, will you come....''- 2 crores of money; 15 people get the same 'Vibhuti' Photograph: (chennai)

ஒன்று... இரண்டு... மூன்று... என இப்படி  விபூதி அடிக்கப்பட்டோர் லிஸ்ட் 15ஐ தாண்டியது. ஒரு கட்டத்தில் அவர் வசித்து வரும் வீட்டை ஏமாற்றப்பட்டவர்கள் தேட ஆரம்பித்த நிலையில் தங்கியிருந்த வீட்டை ஸ்ரீவத்ஸ் காலி செய்துவிட்டு தப்பியது தெரிந்தது. தாங்கள் ஒருவர் தான் பாதிக்கப்பட்டோம் என நினைத்திருக்க பல்வேறு தரப்பினரும் ஸ்ரீவத்ஸ்-ஐ தேடியபோது தான் இவ்வளவு பேர் ஏமாற்றப்பட்டது அவர்களுக்கே புரிந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அந்த வீட்டில் இருந்து சாமான்களை ஏற்றிச் சென்ற வாடகை லாரிகளின் எண்களை கண்டுபிடித்து விசாரித்த போது மாங்காடு பகுதியில் புதிய வாடகை வீட்டில் இருந்த ஸ்ரீவத்ஸை பிடித்தனர்.

053
''The house is for lease, will you come....''- 2 crores of money; 15 people get the same 'Vibhuti' Photograph: (chennai)

தாங்கள் கொடுத்த தொகை குறித்து கேட்டபோது ''நீங்கெல்லாம் காசே கொடுக்கல... ஏமாத்துறாங்க.. போங்க கிளப்புங்க.. காசு கொடுத்ததை முடிஞ்சா ப்ரூவ் பண்ணு போ...'' என அலட்சியமாக பேசியதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பணம் வராது என அறிந்த ஏமாற்றப்பட்டவர்கள் மவுலிவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசாரிடம் ஸ்ரீவத்ஸை ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

055
''The house is for lease, will you come....''- 2 crores of money; 15 people get the same 'Vibhuti' Photograph: (chennai)

இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்துவிட்டு கைக்குழந்தையோடு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''இவரை நம்பி 7 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் அமௌன்ட் கொடுத்திருக்கிறோம். அதற்கான பத்திரம்தான் வாங்கி இருக்கிறோம். இரண்டு நாளுக்கு முன்னாடி போன் செய்தோம். ஆனால் போன் சுவிட்ச் ஆஃப்பில் இருந்தது. அதன் பிறகு நேற்று காலையிலேயே போய் பார்த்தபோது இல்லை. தலைமறைவாகி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அதன் பிறகு தான் நிறைய பேர் இதேபோல வந்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். 

வெறும் பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டு எங்களிடம் என்னென்ன ப்ரூப் இருக்கிறதோ பத்திரம், அவருடைய ஈபி பில், ஆதார் கார்டு என்னவெல்லாம் எங்களால் கேதர் பண்ண முடியுமோ அதை எல்லாம் கொடுத்தோம். நீங்க வீட்டுக்கு போங்க எங்களால் முடிந்ததை நாங்கள் பண்ணுகிறோம் என்று காவல்துறையினர் அனுப்பி விட்டார்கள். அதன் பிறகு நிறைய பேர் வந்தார்கள். அதனால் எங்களை மொத்தமாக ஆவடி ஸ்டேஷனுக்கு போக சொல்லி விட்டார்கள். இன்று தான் கேஸ் ஃபைல் பண்ணி இருக்கிறார்கள். அதன் பிறகு இன்று தான் அந்த ஆளு மாங்காட்டில் இருக்கிறான் எனத் தேடி கண்டுபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறோம். விசாரிக்கிறேன் என்று மட்டும் தான் போலீசார் சொல்கிறார்கள். ஆனால் காசு திரும்ப வாங்கித் தருவதற்கான எந்த முயற்சியும் இல்லை'' என்றார்.

056
''The house is for lease, will you come....''- 2 crores of money; 15 people get the same 'Vibhuti' Photograph: (chennai)

அதேபோல பாதிக்கப்பட்ட சுரேஷ் என்ற நபர் பேசுகையில், ''லீசுக்கு ஒரு வீட்டுக்கு போகிறோம் என்றால் வீட்டினுடைய டாக்குமெண்ட் வீடு யார் பெயரில் இருக்கிறது அதை தான் பார்க்க முடியும். 7 லட்சத்துக்கும் அக்ரிமெண்ட் போட்டாச்சு. தெளிவாக சொல்லிவிட்டான் எனக்கு கேஷ் மட்டும் கொடுங்க. கொடுத்த பணத்தை அப்படியே வீட்டில் குடியிருப்பவரிடம் கொடுத்து அவரை வெளியேற்றிவிட்டு வீட்டை உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னான். அடுத்து இரண்டு நாள் கழித்து செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆனதும் நாங்கள் வீட்டுக்கு போனோம். அங்க போய் பார்த்தால் என்னை போல 15 பேர் வந்து நிற்கிறார்கள்'' என்றார்.

057
''The house is for lease, will you come....''- 2 crores of money; 15 people get the same 'Vibhuti' Photograph: (chennai)

அதேபோல இன்னொரு ஏமாற்றப்பட்ட நபர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''எங்கள் அண்ணன் 11 லட்சம் அதற்கு பே பண்ணியிருக்கிறார். பாருங்கள் 14 மணி நேரம் நின்று சேல்ஸ் வேலை பார்க்கிறோம். ஒவ்வொருவர் கிட்டையும் ஒவ்வொரு அமோன்ட் ஏமாத்திருக்கிறான். போலீசார் அவனிடம் என்னென்ன வேலை பார்த்திருக்கிறீர்கள் என கேட்கும்போது பார்கவுன்சிலில் எனக்கு ஆல்ரெடி நல்ல லாயர் சப்போர்ட் இருக்கிறது என்று சொல்கிறான். பணத்தை சில பேரிடம் கேஷ் ஆக வாங்கி இருக்கிறான். சில பேரிடம் அக்கவுண்டில் வாங்கி இருக்கிறான்.

பணத்தை கையில் வாங்கிய வீடியோவை காட்டி போலீசார் கேள்வி எழுப்பிய போது அதற்கு அந்த ஆள் சொல்லும் பதில் 'எனக்கு புத்தகம் கொடுத்தார்கள்' என்று சொல்கிறான். நாங்கள் ஏன் அவனுக்கு புத்தகம் கொடுக்க வேண்டும். போலீஸ் முன்னாடியே திமிராக பேசுகிறான். நான் பார்க்கிறேன் காவல்துறையுடன் வாகனத்தில் வரும் பொழுது செல்போனில் பேசிக்கொண்டே வருகிறான். போலீசார் எப்படி அவனிடம் செல்போனை கொடுக்கிறார்கள்'' என்றார்.

058
''The house is for lease, will you come....''- 2 crores of money; 15 people get the same 'Vibhuti' Photograph: (chennai)

அதேபோல் இன்னொருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நான்கு லட்சம் ரூபாய் அக்ரிமெண்ட் போட்டு இருக்கேன். எங்களை மட்டும் அல்ல இரண்டு பிளாட்டை காண்பித்து மட்டும் 10 பேரை ஏமாற்றி இருக்கிறான்.  3 கோடிக்கு மேல் பெரிய ஸ்கேம் பண்ணி இருக்கான். மூன்று நாட்களாக போன் சுவிட்ச் ஆஃப். இன்று அவனை சேஸ் பண்ணி பிடித்து இங்கு காவல்துறையினரிடம் ஒப்படைத்தால் ஓப்பனா சொல்லுகிறான் என்ன ஆக்சன் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறான்'' என்றார்.

இப்படி 15 பேருக்கும் ஒரே விபூதியை அடித்து விட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. லீசுக்கு வீடு பார்க்கும் எண்ணமுள்ளோர் கவனமாக இருக்க வேண்டும் என்பதே ஸ்ரீவத்ஸ் நமக்கு கொடுக்கும் எச்சரிக்கை.