Advertisment

'தமிழர்களை நாங்க தப்பா நினைச்சிருந்தோம், இப்போ உங்க மனசை புரிஞ்சுக்கிட்டோம்!'- நெகிழ்ந்து பேசிய கேரள இளைஞர் 

kerala young

"எல்லாருக்கும் வணக்கம், நான் பேசும் தமிழில் எதாவது பிழை இருந்தால் முதலில் மன்னித்துவிடுங்கள். என் பெயர் ஸ்ரீஜித், நான் கேரளாதான், பாலக்காடு என் ஊர்.

Advertisment

முன்னெல்லாம் கேரளாவில் தமிழ்நாட்டு மக்கள் என்று சொன்னாலே ஒரு மாதிரி பார்ப்பார்கள். அவர்களுக்கு படிப்பு குறைவு என்று நிறைய பேர் அவர்களை தவறாக நினைத்திருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக நான் வெள்ள நிவாரண மையத்தில்தான் இருக்கிறேன். தற்போதுகூட தமிழகத்தில் இருந்து இரண்டு சக்கர வாகனத்திலிருந்து, லாரியில் வரை டன் டன்னாக நிவாரண பொருட்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது.

Advertisment

ஜல்லிக்கட்டு போராட்டம் போதெல்லாம் தமிழர்கள் உங்களுடைய பவரை காண்பித்தீர்கள். ஆனால், இப்போது கேரள மக்களாகிய எங்களுக்காக உங்களுடைய அன்பான மனசை வெளிப்படுத்தியுள்ளீர்கள். தற்போதும் லோடு லோடாக எதாவது நிவாரணப்பொருட்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கு பின் எந்த அமைப்பு இருந்தது என்றெல்லாம் எங்களுக்கு தெரியாது. இருந்தாலும் அங்கிருக்கும் தமிழர்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் கூட எங்கள் மனதில் இருக்கிறது.

இப்போது வெள்ளம் எல்லாம் வடிந்துவருகிறது. நிவாரண மையங்களைவிட்டு எல்லோரும் வீட்டுக்கு திரும்பும் நிலை வந்துவிட்டது. எல்லா பிரச்சனைகளும் ஓய்ந்து, சரியாகி வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் செய்த இந்த விஷயங்களுக்கு ரொம்ப நன்றி. இனி தமிழநாட்டுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் நாங்கள் வந்து உடன் நிற்போம்.

குறிப்பா பாலக்காட்டு மக்களுக்கு தமிழர்களுடைய உதவி நன்றாக தெரியும். தினசரி பாலக்காடு வழியாகத்தான் அத்தனை தமிழ்நாடு வாகனங்களும் கேரளாவுக்கு லோடு வந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் லோடு வந்துகொண்டேதான் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் அன்பிற்கு நன்றி. நாங்க எல்லோரும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்." என்று கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழக மக்கள் செய்த நிவாரண உதவிகளுக்காக நன்றி தெரிவித்துள்ளார்.

kerala flood
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe