Advertisment

ராத்திரியானா தங்க தமிழ்ச்செல்வன் வீட்லயே தங்கமாட்டாருங்க...

மீடியாக்கள் எந்த கேள்வி கேட்டாலும் சிரிச்சுக்கிட்டே பதில் சொல்றாரு. மேடையில் சரளமா பேசுறாரு. ஒரு ஈர்ப்பு சக்தி இவர்ட்ட இருக்குப்பா'' இப்படிப்பட்ட இமேஜ் தான் அ.ம.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனைப் பற்றி மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு முன்புவரை இருந்தது. தேர்தல் படுதோல்வியால் அ.ம.மு.க. கலகலத் தது, தினகரனும் வெல வெலத்துப் போனார். கட்சியின் முக்கியப் புள்ளிகள் பலர், அ.தி. மு.க.ஆட்சி இருக்கப் போகும் இரண்டு வருட காலத்தைக் கணக் குப் போட்டு, எடப்பாடி முன்னிலையில் ஆளும் கட்சிக்கு ஜம்பாகி வருகின்ற னர். தினகரனின் முக்கிய தளபதியாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், தேனி எம்.பி. தொகுதியில் டெபாசிட்டை பறிகொடுத் ததும் ரொம்பவே அப்செட்டானார்.

Advertisment

ammk

மே 23-க்கு முன் தினகரனைவிட ஹை டெசிபலில் எடப்பாடியின் அ.தி.மு.க.வுக்கு எதிராக முழங்கியவர்தான் தங்க தமிழ்ச்செல்வன். இப்போது அந்த தங்க தமிழ்ச்செல்வன்தான் அண்ணன் எடப்பாடி என்றார். தினகரன் அழிஞ்சு போயிருவார் என பிளிறினார். இது தினகரனை ரொம்பவே டென்ஷனாக்கியதில், ராத்திரியானா தங்க தமிழ்ச்செல்வன் வீட்லயே தங்கமாட்டாருங்க. இங்க அண்ணா நகர்ல வீடு இருந்தும் மாரிஸ் ஓட்டல்லதான் தங்குவாரு. ராத்திரி பத்து மணிக்கு மேல அவர்ட்ட யாரும் பேசமுடியாது'' என்றார் தினகரன். இதற்கு எதிரடியாக தினகரன் மீதும் அ.ம.மு.க. நிர்வாகிகளிடமிருந்தே விமர்சனம் எழுகிறது.’

ammk

Advertisment

அ.ம.மு.க.வின் சென்னை நிர்வாகி ஒருவர் நம்மைத் தொடர்பு கொண்டார். கட்சி அலுவலக வாசலில் டி.வி. கேமராக்கள் முன் சளைக்காமல் சிரித்துப் பேசும் தினகரன், கட்சி அலுவலகத்திற்குள் மா.செ.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோரை சந்திக்கும்போதும், வீட்டில் சந்திக்கும் போதும் தினகரனிடம் அந்த சிரித்த முகத்தைப் பார்க்க முடியாது. எரிச்சலான முகத்துடன்தான் பேசுவார். ஆண் நிர்வாகிகளிடம் கோபத்தைக் காட்டும் தினகரன், கட்சிப் பணிகளில் பெண் நிர்வாகிகளை கவனமா நியமிப்பார். அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, கட்சியின் மற்ற நிர்வாகிகளோ, தொண்டர்களோ அந்த நேரத்தில் தன்னிடம் குறுக்கிடுவதை அனுமதிக்க மாட்டார்.

admk

தினகரனால் பதவி பெற்ற பெண்களில் சிலர், கட்சியை ஆட்டிவைப்பது வழக்கம். தினகரனிடம் இதுபற்றி புகார் சொன்னால் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார். தொடர்ந்து அவர்கள் பற்றி குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டிருந்தால் கோபமாகிவிடுவார். வடதமிழ்நாட்டில் வெள்ளைக் காரர்களை எதிர்த்து புரட்சி நடந்த மாவட்டத்தில் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண், கணவரை விவாகரத்து செய்தவர். சினிமா நடிகைகள் இரண்டு பேரின் பெயரைக் கொண்டவர். தினகரன் முன்னிலையில் வந்து அ.ம.மு.க.வில் சேர்ந்தார். அடுத்த சில நாட்களில், புயல் வீசிய பூமியில் நிவாரணப் பணிகளுக்காக தினகரன் சென்றபோது, பத்து நாட்களும் அந்தப் பெண் நிர்வாகியும் புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். தினகரன் காருக்குப் பின்னால் அவர் கார் செல்லும். எனினும், கட்சி நிர்வாகியாகக் காட்டிக்கொள்ளாமல், டெல்லி பத்திரிகையாளர் என்ற பெயரில், தினகரன் தங்கியிருந்த ஓட்டலில் வேறொருவர் பெயரில் அதே தளத்தில் தங்கவைக்கப்பட்டார்.

dmk

கடந்த ஜனவரியில் வடமாவட்டத்தில் கட்சி நிர்வாகி ஒருவர் வீட்டு விசேஷ நிகழ்ச்சி ஒரு பெரிய ஓட்டலில் நடந்தது. அதே ஓட்டலில் தின கரனுக்காக ரூம் ஒன்றும் போடப்பட்டிருந்தது. தினகரனை பெருமளவில் தொண்டர்கள் காத் திருந்து வரவேற்றனர். அவர்களிடம் முகம் கொடுத்துப் பேச நேரமோ, சூழலோ தினகரனுக்கு வாய்க்கவில்லை. அதே இடத்தில் தங்கியிருந்த அந்தப் பெண் நிர்வாகியிடம் கட்சி நிர்வாகம் பற்றிப் பேசவேண்டிய அவசரத்தில் அவர் இருந்தார். அந்தப் பெண் நிர்வாகிக்கு, கட்சியின் மா.செ. மூலம் ஸ்பெஷல் முக்கியத்துவம் கொடுப்பதை ஜீரணிக்க முடியாமல் மாவட்டத்தின் மற்ற மூத்த நிர்வாகிகள் வெறுப்படைந்து விட்டனர்'' என்று விவரித்தார்.

வடக்கு மாவட்டம் ஒன்றின் அ.ம.மு.க. முக் கியப் புள்ளி ஒருவர் நம்மிடம்... திருவண்ணாமலைக்கு எப்ப வந்தாலும் வழக்கமா ஒரு ஓட்டலில் தங்குவார் தினகரன். ஆனா கடந்த டிசம்பர் மாதம் ஊருக்கு அவுட்டோர்ல இருக்கும் ஒரு ஓட்டலில் ரூம் போடச் சொன்னார். அதேநாள் ராத்திரிதான் தினகரனின் ஆஸ்தான சாமியார் மூக்குப் பொடி சித்தர் மரணமடைந்தார். எந்தவொரு காரியமாக இருந்தாலும் மூக்குப்பொடி சித்தரிடம் நேரில் வந்து ஆலோசனை கேட்டு, அதன்படியே செயல்படக்கூடியவரான தினகரன், தனது ஆஸ்தான சாமியார் இறந்த அன்று திருவண்ணா மலையிலேயே தங்கியிருந்தும், அஞ்சலி செலுத்த ஏன் வர வில்லை என்பது கட்சியின ருக்கே குழப்பமாக இருந்தது. ஆனால், தினகரன் எது பற்றியும் குழம்பவில்லை. திருவண்ணாமலையில் தங்கியிருந்தாலும் அவருக்கு பக்கத்து மாவட்ட கட்சி நிர்வாகப் பணிகள் முதன்மையாக இருந்ததால், அது குறித்து அந்த நிர்வாகியுடன் ஆலோசனைகளில் இருந்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்ட நேரம் அது. சென்னையை ஒட்டிய மாவட்டத்தில் தினகரன் தங்கியிருந்த ஓட்டலில் பறக்கும் படை சோத னை நடத்தியது. தனது அறையில் சோதனை நடத்த முயன்றதாக, வழக்கத்திற்கு மாறான உஷ்ணத்துடன் மீடியாக்களிடம் அதனைப் பகிர்ந்தார் தினகரன். கட்சி விவகாரம் தொடர்பா ஆண் நிர்வாகிகள் போலவே நேரம் காலம் பார்க்காமல் செயல்படும் சில பெண் நிர்வாகிகளையும் சோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது என்ற கவனம்தான் இதற்கு காரணம்'' என்றார் அந்த நிர்வாகி. தனது கட்சியில் இருந்த சினிமா தயாரிப்பு புள்ளி ஒருவரிடம் தொடர்ச்சியாக கட்சி நிதி கேட்ட தினகரன், திரைத்துறை சார்ந்த விருப்பங்களையும் அந்த தயாரிப்புப் புள்ளியிடம் வெளிப்படுத்தியதால், டார்ச்சர் தாங்கமுடியவில்லை என ஓட்டம் பிடித்த அந்த சினிமா பார்ட்டி, இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லையாம்.

தினகரனின் மறுபக்கம் குறித்த இந்த செய்திகளை நம்மிடம் பேசிய நிர்வாகிகள்,அ.ம.மு.க.வைத் தொடங்கியபோது கட்சிக் கொடியை அறிமுகப்படுத் திய மேடையில் அவருடன் இருந்த மேலூர் சாமி தற்போது உயிருடன் இல்லை என்பதையும், செந்தில்பாலாஜியும் தங்கதமிழ்ச் செல்வனும் மாற்று முகாம்களுக்கு சென்றுவிட்டதையும் சுட்டிக் காட்டி, தினகரன் தனிமரமான தற்கான ரகசியம் இதுதான்'' என்றனர். இது குறித்து, தினகரனின் கருத்தறிய முயற்சித்தோம். இதழ் அச்சேறும்வரை அவரோ அவர் சார்பிலோ எந்தக் கருத்தையும் பெற இயலவில்லை. தினகரன் தனது கருத்தைத் தெரிவித்தால் அதனை வெளியிட நக்கீரன் தயாராக இருக்கிறது.

அதே நேரத்தில், அ.ம.மு.கவி லிருந்து விலக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வனுக்கு சொந்த மாவட்டத்திலேயே அ.தி.மு.க. நிர்வாகிகள் பழைய பகையுடன் எதிர்ப்பு காட்டினர். தேனி 4 ஆவது வார்டு செயலாளர் ஐயப்பனிடம் கேட்டபோது, அவரு வந்தாருன்னா கோஷ்டிப்பூசலும் அதிகமாகும். ஜாதி அரசியலும் தலை தூக்கும். இதனால் கட்சியும் வளராது, உள்ளாட்சித் தேர்தலிலும் தேறாது'' என்றார். அ.தி.மு.க. மாவட்ட மாணவரணித் தலைவரான மனோஜோ, ஓ.பி.எஸ். தர்மயுத்தம் ஆரம்பித்தபோதே இந்தப் பக்கம் வாங்கன்னு டி.டி.எஸ்.சை கூப்பிட்டேன். ஆனா அவரோ டி.டிவி. பக்கம் போயிட்டாரு. இப்ப எங்க தலைமைகள் என்ன முடிவெடுத்தாலும் கட்டுப் படுவோம்''’ என்கிறார்.

இதற்கிடையே கடந்த 27 ஆம் தேதி மதியம், தேனி அ.தி.மு.க. மா.செ. சையதுகான், மா.து.செ. முறுக்கோடை ராமர் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் 60 பேர் தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் விடுதியில் கூடி, "தங்க தமிழ்ச்செல்வனை அ.தி.மு.க.வில் சேர்க்கக்கூடாது' என தீர்மானம் நிறைவேற்றி ஓ.பி.எஸ்.சுக்கும் இ.பி.எஸ்.சுக்கும் அனுப்பிவிட்டனர். ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமாரும் தங்க தமிழ்ச் செல்வனை கட்சியில் சேரவிடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டினார். அ.ம.மு.க.வைச் சேர்ந்த ஆண்டிப்பட்டி வைகை சேகரிடம் கேட்டபோது, “""எந்த ஒரு தனிநபரையும் நம்பி கட்சி இல்லை'' என்கிறார்.

எல்லாவற்றிற்கும் விளக்கம் பெற தங்க தமிழ்ச் செல்வனை தொடர்பு கொண்டோம்.’எனக்குத் தெரியாமலேயே இந்த மாவட்டத்தில் மகேந்திரனை வைத்து கூட்டம் நடத்தினார் தினகரன். ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நிற்க விரும்பிய என்னை வம்படியா தேனி எம்.பி. தொகுதியில் நிற்கச் சொன்னார் தினகரன். அதனாலதான் எனக்கு டெபாசிட் போச்சு' என சொல்லிக்கொண்டிருந்தபோதே தொடர்பு துண்டித்தது. அதன்பின் தொடர்ச்சியாக நாம் முயற்சித்த போது, "நாட் ரீச்சபிள்' என்றே வந்தது. அவரோ தி.மு.க.வை ரீச் பண்ணிவிட்டார் என வியாழன் மாலையில் செய்திகள் வெளியாயின.

ஈ.பா.பரமேஷ்வரன், சக்தி, து.ராஜா

stalin ammk admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe