கூகுள் நிறுவனத்தின் சார்பில் அதன் முக்கிய பங்களிப்பாளர்களுடனான சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. கூகுள் நிறுவனத்தின் இந்திய, தென்னிந்திய அளவிலான முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற அந்த சந்திப்பில் அவர்கள் பல தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
ஆங்கிலத்திற்கு அடுத்ததாக கூகுள் பயன்படுத்தப்படும் மொழிகளில் இந்திய அளவில் இந்தியும் தமிழும் முக்கிய மொழிகளாக இருப்பதாகத் தெரிவித்த அவர்கள் தமிழில் யூ-ட்யூப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தனர். இதனால் கூகுளின் பார்வையும் கவனமும் தமிழ் யூ-ட்யூப் படைப்பாளர்களின் மீது படர்ந்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
அவர்கள் பகிர்ந்த விவரங்களின்படி நிறுவனமாக அல்லாமல் தனி மனிதர்களாக யூ-ட்யூபில் சிறப்பாக செயல்பட்டு புகழ்பெற்றவர்களில் தமிழக அளவில் முதலிடத்தில் இருப்பவர் 'வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி' புகழ் டேடியான ஆறுமுகம். இவருக்கு அடுத்ததாக 'பிளாக் ஷீப்' சேனலின் விக்னேஷ்காந்த்தும் மூன்றாவது இடத்தில் சினிமா விமர்சன சர்ச்சைக்கு புகழ் பெற்ற 'ப்ளூ சட்டை' மாறனும் இருக்கிறார்கள். இது கூகுள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் பகிர்ந்த தகவலாகும்.