Skip to main content

என்ன நடக்கிறது தயாரிப்பாளர் சங்கத்தில்??? நடிகர் விஷால் அதிரடி கைது...

Published on 20/12/2018 | Edited on 20/12/2018
vishal

 

நேற்று மதியம் 12 மணியளவில் சென்னை தி. நகரிலுள்ள தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக கூறி அழகப்பன், ரித்திஷ், எஸ்.வி. சேகர், சுரேஷ் காமாட்ஷி ஆகியோர் அடங்கிய ஒரு குழு திடீரென தயாரிப்பாளர் சங்கத்திற்குள் வந்து  போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து விஷால் தரப்பை சேர்ந்த கதிரேசன் சமரசம் செய்ய முயற்சித்தார். இதில் சமாதானமடையாத அவர்கள் கதிரேசன் விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக்கூறி தயாரிப்பாளர் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டனர். மேலும் அவர்கள் முதல்வரை சந்தித்து முறையிடப் போவதாகவும், தமிழ் ராக்கர்ஸ்-ஐ பிடிப்பதாகக் கூறிய விஷால் அதில் ஒரு பார்ட்னராக இருக்கிறார் என்றும் கூறிய அவர்கள், கடந்த நிர்வாகத்தில் சேமித்து வைக்கப்பட்ட 7 கோடி வைப்புநிதி என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பினர். 
 

இதைத்தொடர்ந்து இன்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால். போடப்பட்டுள்ள பூட்டை அகற்றும்படி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அதை மறுத்தனர். நான் பூட்டை உடைக்காமல் போகமாட்டேன் எனக்கூறிய விஷால் பூட்டை நீங்களே உடையுங்கள் எனவும் தெரிவித்தார். காவல்துறையினர் அதற்கான அரசாங்க நடைமுறை உள்ளது எனக்கூற வாக்குவாதம் முற்றியது. விஷால் தொடர்ந்து தனது தரப்பு நியாத்தைக் கூறிக்கொண்டே இருந்தார். காவல்துறையினரும் எதிர் வாதத்தை முன் வைத்தனர். அப்போது விஷால் யாரோ போட்ட பூட்டிற்கு ஏன் இத்தனை பேர் காவல் இருக்கிறீர்கள். இந்த பூட்டு அரசு உத்தரவுபடி போடப்பட்ட பூட்டு இல்லை, இதற்கு முறையான அனுமதியில்லை. அப்படியிருக்கும் போது ஏன் இத்தனை பேர் பாதுகாப்பிற்கு இருக்கிறீர்கள். நாங்கள் பாதுகாப்பு கேட்கும்போதுகூட இத்தனை பேர் வரவில்லையே, பின் எதற்கு இத்தனை பேர் எனவும் கேட்டார். 
 

ஆனால் காவல்துறையினர் இவை அனைத்திற்கும் மறுப்பு தெரிவித்துக்கொண்டே இருந்தனர். சிறிது நேரத்தில் உதவி ஆய்வாளர் அங்கு வந்தார். பின் விஷாலை கைதுசெய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் உதவி ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்திவந்தார். தற்போது பதிவுத்துறை அதிகாரிகள் அந்த பூட்டை திறந்துள்ளனர். 
 

இதற்குமுன் ஒழுங்குமுறை குழுவின் நடவடிக்கைகள் சரியில்லை என்றும், அவர்கள் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர் என்றும் அவ்வப்போது சிலர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர். விடுமுறை தினங்களில் தேர்தலுக்கு பின்னான சில மாதங்களிலேயே பிரச்சனைகள் தொடங்கிவிட்டன. அவ்வப்போது நடந்துவந்த தயாரிப்பாளர் சங்க கூட்டங்களிலும் கூச்சல், குழப்பங்கள் ஏற்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

ரத்னம் பட ப்ரமோஷன்; வீதி வீதியாக சென்று ஆதரவு கோரும் இயக்குநர் ஹரி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதயொட்டி அப்படத்தின் இயக்குநர் ஹரி இன்று வேலூர் விருதம்பட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார் அப்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் எனக்கு சென்டிமென்ட்டான ஊர் இங்கிருந்து தான் திரைக்கதைகளை எழுதுவேன். எனக்கும் வேலூருக்குமான நெருக்கம் அதிகமாக உள்ளது. ரத்தினம் என்னுடைய 17 வது படம் நடிகர் விஷாலை வைத்து இயக்கும் மூன்றாவது படமாகும் இப்படம் வெற்றி பெறும். வழக்கமாக எனது படம் பல மாவட்டங்களை சார்ந்திருக்கும். வட மாவட்டங்களை மையகப்படுத்தி படம் ஒன்று இயக்க திட்டமிட்டேன்.

அதன்படி ஆந்திரா - தமிழக மாவட்ட எல்லையான வேலூர் மாவட்டத்தில் இப்படத்தை இயக்கி உள்ளேன். மாநில எல்லைகளின் பிரச்சினை இந்த படத்தில் காட்டி இருப்பேன். இளைஞர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் குடும்பப் பாங்காகவும் அமைந்துள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. பழைய படத்திற்கு ஆதரவு அளிக்கும் போது எங்களை மென்மேலும் ஊக்குவிக்கிறது. மீண்டும் நாங்கள் தரமான படங்கள் இயக்குவதற்காக எங்களை பணி செய்ய வைக்கிறீர்கள்” என்றார்.

Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

ரத்னம் ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை இடம் பெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, “படத்துக்கு தேவை என்பதால் மட்டுமே சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இது படத்தின் தேவையை கருதியே பயன்படுத்துகிறோம். மேலும் பொது மக்களுக்கு மிக நெருக்கமாக ரியாலிட்டியுடன் எடுக்க வேண்டும் என்பதால் இத்தகைய போக்கை கடைபிடிக்கிறோம். எனது கடந்த படமான யானை படத்துக்கு இங்கு வந்திருந்தேன். படம் வெற்றி பெற்றது இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். ரத்தினம் படம் தமிழகத்தில் 750 ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக நடிகர்கள் சினிமாக்கு வருவது சந்தோசம் தான்.

என்னுடைய படங்களில் குடும்ப செண்டிமெண்ட் கட்டாயமாக இருக்கும். இதுவே நமது கலாச்சாரமாக எண்ணி அனைத்து படத்திலும் அதை வலுவாக வைத்துள்ளேன். கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அதை பார்க்கும்போது எனக்கும் ஆசையாக உள்ளது எனது படத்தையும் ரீலீஸ் செய்ய வேண்டும் என்று இதற்கு தயாரிப்பாளர் முடிவு செய்ய வேண்டும். மீண்டும் போலீஸ் கதையாம்சம் கொண்ட படத்தை இயக்க திட்டம் வைத்துள்ளேன்” என்றார்.

லோகேஷ் யுனிவர்ஸ் போன்று ஹரி யுனிவர்ஸ் வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, “அது அவருடைய ஸ்டைல். எனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை” என்று பதிலளித்தார்.

வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து பிரமோஷன் தேடுவது குறித்து கேட்டதற்கு, “தேர்தல் சமயத்தில் வேட்பாளர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்களை சந்திக்கிறார்களே அதுபோலத்தான் நாங்களும் ஒரு படைப்பை உருவாக்கி அதனை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல இது போன்ற பிரமோஷனை நாடுகிறோம்” என்றார்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.