மத்திய அமைச்சரவையில் தமிழகம்? பாஜகவினர் எதிர்ப்பு!

மத்திய அமைச்சரவையை ஆகஸ்டில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார் பிரதமர் மோடி. இந்த விரிவாக்கத்தின் போது அமைச்சர் பதவியை பிடித்துவிட பாமக அன்புமணியும், அதிமுகவின் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாரும் பகீரத முயற்சி எடுத்து வருகின்றனர்.

ops-eps

ரவீந்திரநாத்தை அமைச்சரவையில் இணைத்துக்கொள்வது குறித்து ஏற்கனவே சில யோசனைகளை ஓபிஎஸ்சிடம் தெரிவித்துள்ளார் அமீத்ஷா. கடந்த மாதம் அமீத்ஷாவை சந்தித்த ஓபிஎஸ், அதனை மீண்டும் வலியுறுத்தி விட்டு சென்னை திரும்பியிருந்தார், இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு பாமக தரப்பில் முன்முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில், அன்புமணிக்கு எதிராக உள்ள சி.பி.ஐ. வழக்கில், கீழ் கோர்ட்டில் பதியப்பட்ட குற்றப்பத்திரிகையை டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்திருக்கிறது. இதனை பாசிட்டிவ் அம்சமாக பார்க்கும் பாமகவினர், அன்புமணி அமைச்சராவதில் இனி பிரச்சனை இருக்காது என சொல்லி வருகின்றனர்.

இதனையறிந்துள்ள தமிழக பாஜக தலைவர்கள், ‘’தமிழகத்தில் பாஜக வெற்றிபெற கூட்டணி கட்சிகள் அக்கறை காட்டவில்லை. இதனால் தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு சீட் கூட இல்லாத நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவியை தருவது சரி அல்ல‘’ என டெல்லிக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

cabinet ministers ops pmk Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe