Skip to main content

தமிழ் கேர்ள்ஸ் கலக்கும் மியூசிக்கலி ஆப் பிறந்த கதை இதுதான்!  

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
musically

 

 

 

ஒவ்வொரு காலகட்ட இளைஞர்களுக்கும் ஏற்றாற்போல நாம் பயன்படுத்தும் சமூகவலைதளங்கள் மேம்பட்டுக்கொண்டே செல்கின்றன. இமெயில் (e-mail), பிளாக் (blog), ஃபேஸ்புக் (facebook), வாட்சப் (whatsapp), இன்ஸ்ட்டா (instagram) என்று அந்ததந்த சமயத்தில் பிரபலமான சமூக வலைதளங்கள் மாறிக்கொண்டே வந்து தற்போது மியூசிக்கலியில் வந்து நிற்கிறது. தமிழகத்தில் பலர் காலையில் விழித்தவுடன் பயன்படுத்தும் ஒரு செயலியாக மாறியிருக்கிறது மியூசிக்கலி. அப்படி அந்த செயலியை பயன்படுத்தவில்லை என்றாலும், வேறொரு சமூக தளத்தில் நாம் உலா வந்துகொண்டிருக்கும்போது நம் கண்ணில் மாட்டிவிடும் ஒரு விஷயமாக இருக்கிறது. விதவிதமான பாடல்கள் அல்லது வசனம் பின்னே ஓட, அதற்கு ஏற்றாற்போல் முகபாவனை கொடுப்பது, அல்லது நடனமாடி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது... இதுதான் அந்த செயலியின் செயல்பாடு. தற்போது வாட்ஸப்பிற்கு அடுத்தபடியாக அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்ட செயலி என்ற நிலையில் இருக்கிறது மியூசிக்கலி. இந்த செயலி முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காகவே உருவாக்கப்பட்டது. நம்முடைய முகபாவனை பார்ப்பவர்களை கவரும்படி இருந்தால் அந்த வீடியோ நாம் எதிர்பார்க்காத அளவிற்கு வைரலாகிறது.

 

zhu

 

 

 

இந்த கணினிமயமான உலகில் பல சமூகவலைதளங்கள் மனிதர்களை ஆட்சி செய்துகொண்டு இருக்கின்றன. அப்படி ஆட்சி செய்யும் சமூகவலைதள நிறுவனங்கள் பல அமெரிக்காவைச் சேர்ந்தவையே. 'இந்த உலகில் பலரால் பயன்படுத்தப்படும் எந்த ஒரு பொருள், செயலி, சமூகவலைதளம் என்று எதுவாக இருந்தாலும் பெரும்பாலும் அது அமெரிக்காவைச் சேர்ந்ததாகவே இருக்கிறது. ஏன் நம் நாட்டை சேர்ந்த ஒன்றாக இல்லை?' என்று சீனாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜு தனக்குள் கேள்வி எழுப்பியிருக்கிறார். முதலில் இவர் பொழுதுபோக்குக்காக செயலியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. உலகில் இருக்கும் பல மாணவர்களுக்குக் கல்வி அறிவை வளர்க்கும் வகையில் ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்றே நினைத்துள்ளார். அலெக்ஸ் ஜுவும் அவருடைய நண்பரான லுயூ யாங்ஆகிய இருவரும் சேர்ந்து நண்பர்களிடம் பணம்பெற்று இந்த வேலையைத் தொடங்கி ஒரு கல்வி தொடர்பான செயலியை உருவாக்கினார்கள். முதலில் ஐஓஎஸ்ஸில் வெளியிடப்பட்ட இந்த செயலி உப்புமா படமாக தோல்வியை சந்தித்தது. 

 

musically 1

 

ஒன்றும் புரியாமல் அமெரிக்காவில் லோக்கல் டிரெயினிலில் சென்றுகொண்டிருக்கும்போது மீண்டும் ஒரு ஐடியா அலெக்சிற்கு பிறக்கிறது. இக்கால இளைஞர்கள்தான் நம்முடைய பயன்பாட்டாளர்கள், குறிப்பாக அமெரிக்க இளைஞர்கள்தான் என்ற தீர்மானத்திற்கு வந்தார். அமெரிக்காவில் ஒன்று பிரபலமாகிறது என்றால் அது உலகம் முழுவதும் பிரபலம்தான். அதனால், தன்னிடம் இருக்கும் குறைவான பணத்தைக்கொண்டு மீண்டும் அவருடைய நண்பருடன் சேர்ந்து ஒரு செயலியை உருவாக்குகிறார்கள். இளைஞர்களுக்கு வீடியோ வெளியிடுவதும், இசை கேட்பதும்தான் முக்கிய தேவையாக இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டவர், அதே ஐடியாவில் உருவாக்கி 2014ஆம் ஆண்டு வெளியிட்டதுதான் இந்த மியூசிக்கலி செயலி. இளைஞர்களுக்கு நல்ல கல்வி அறிவை வளர்க்க வேண்டும் என்று வெளியிடப்பட்ட முந்தைய செயலியைப்போல் அல்லாமல் தடாலடியாக இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனது. அதிக டவுன்லோட் செய்ததில் வாட்ஸப்பிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் இது 2017 ஆம் ஆண்டில் சுமார் 200 மில்லியன் பயன்பாட்டாளர்களை வைத்திருக்கிறது. இந்த ஆண்டு பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

 

 

 

உலகிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும் செயலிகள் வரிசையில் தன் நாட்டைச் சேர்ந்த செயலிதான் முதலிடத்தில் இருக்கவேண்டும் என்று நினைத்த அலெக்ஸ், "நான் நினைத்ததுபோன்று உலகை ஆள வேண்டும் என்றால் அதற்கு என்னுடைய பயன்பாட்டாளர்கள் 2010ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த ஸ்மார்ட் குழந்தைகளாக இருக்கவேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் பிறந்ததில் இருந்து ஸ்மார்ட் போனுடனே பழகிவருகிறார்கள். அதனால்தான்  மியூசிக்கலியை அப்படி வடிவமைத்தேன். என்னுடைய ஆடியன்ஸும் அவர்கள்தான்" என்று கூறியுள்ளார்.

Next Story

டப்ஸ்மாஷ்...… மியூசிக்கலி...… டிக்டோக்… பெண்கள்தான் டார்கெட்! #புரோக்கரின் பகீர் வாக்குமூலம்!

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
  "டப்ஸ்மாஷ்,… மியூசிக்கலி,… டிக்டோக்… பெண்கள்தான் எங்களின் டார்கெட்'’என்று சமீபத்தில் கைது செய்யப்பட்ட பிரபல புரோக்கர் கொடுத்த பகீர் வாக்குமூலம் போலீசாரையே திடுக்கிட வைத்துள்ளது. சென்னையில் 60-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்களை நடத்திவரும் ஹைடெக் புரோக்கர் பூங்கா வெங்கடேசனையும் கூட்ட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மோமோ, கிகியை தொடர்ந்து வைரலாகும் புதிய சேலஞ்ச்!

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
birdbox


கார் ஓடிக்கொண்டிருக்கும்போது, காரிலிருந்து இறங்கி கிகி என்ற பாடலுக்கு நடனமாடி அதை காரை ஓட்டிகொண்டிருக்கும் நன்பர் வீடியோ பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிடுவதுதான் கிகி சேலஞ்ச். இந்த சென்ற ஆண்டில் சமூக வலைதளத்தில் மிக வைரலான ஒரு சேலஞ்ச். அமெரிக்காவில் எங்கோ ஒரு மூலையில் ஒருவர்  கிகி பாடலுக்கு சாதாரனமாக நடனமாடி வீடியோவாக பதிவிட, அதில் அமெரிக்க நட்சத்திரங்கள் சிலர் நாமினேட் செய்யப்பட்டனர். அவர்களும் அந்த சேலஞ்சுகளை ஏற்றுக்கொண்டு மிகவும் கடினாமான முறையில் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவாக பதிவிட்டனர். அமெரிக்க நடிகர் வில் ஸ்மித் புத்தபேஸ்ட் நகரத்திலுள்ள பெரிய பாலத்தின் மேல் ஏறி இந்த பாடலுக்கு நடனமாடினார். அது மிகப்பெரிய வைரலானது. அதன்பின்தான் அனைவரும் காரிலிருந்து இறங்கி பாடலுக்கு நடனமாடினார்கள். 
 

அமெரிக்காவில் ஒருவிஷயம் ட்ரெண்டானால் அது கண்டிப்பாக உலகளவில் பிரபலமடைந்து, பலர் அதை பின்பற்றுவார்கள். அப்போது, அப்படிதான் நடந்தது. அமெரிக்காவில் எங்கோ மூலையில் தொடங்கப்பட்ட இந்த கிகி சேலஞ், விஸ்வரூபம் எடுத்து உலகம் முழுவதும் பரவியது. இந்த சேலஞ்சை செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டால்தான் கௌரவம் என்ற அளவுக்கு பார்க்கப்பட்டது. பலர் வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். அதேபோல, அதை செய்ய முயற்சித்தபோது பலர் படுகாயம் அடைந்தனர். சிலர் உயிரை விடும் அளவுக்கு சென்றனர். இதுபோன்று விளையாட்டு வினையான பின்பே அதன் தாக்கம் குறைய தொடங்கியது. 
 

 இந்த கிகி சேலஞ்சை தூக்கி சாப்பிடும் விதமாக தற்போது பேர்ட் பாக்ஸ் சேலஞ்ச் என்றொரு விஷயம் அமெரிக்க மக்களிடம் வைரலாகி வருகிறது. கடந்த வருடம் டிசம்பர்- 13ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸில் வெளியாகி, 4.5 கோடி கண்டு கழித்த படம்தான்  ‘பேர்ட் பாக்ஸ்’. இந்த படத்தில் பிரபல நடிகை சாண்ட்ரா புல்லக் நடித்திருக்கிறார். இதில் சாண்ட்ரா தனது இரண்டு குழந்தைகளுடன் பாதுகாப்பான இடம் தேடிப் பயணிக்கிறார். கண் திறந்து பார்ப்பவர்களைத் தீய சக்தி அழித்து விடும் என்ற நிலை. இதனால் அவர்கள் மூவரும் கண்களைத் திறக்காமலேயே காடு, மலை, ஆறு தாண்டிப் பயணிக்கின்றனர். இந்த திகில் பயணமே பேர்ட் பாக்ஸ் படம்.
 

இந்த படத்தை பார்த்தவர்கள், இந்த படத்தில் வருவது போன்று கண்களை மூடிக்கொண்டு வெளியே செல்கின்றனர். சிலர் குழந்தைகளுக்கும் இதுபோன்று கண்களை மூடிவிடுவதால் அவர்கள் கீழே விழுந்து காயப்படுகிறார்கள். சிலர் கண்களை கட்டிக்கொண்டு உயிர்போகும் காரணங்களை செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு நெட்ஃபிலிக்ஸ் எச்சரிக்கை எடுத்துள்ளது. 
 

 ''நாங்கள் இதைச் சொல்ல வேண்டியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. தயவு செய்து யாரும் பேர்ட் பாக்ஸ் சேலஞ்சை மேற்கொண்டு உங்களைக் காயப்படுத்திக் கொள்ள வேண்டாம். இது எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை. உங்களின் அன்பை மதிக்கிறோம். ஆனால் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை விரும்பவில்லை'' என்று ட்விட்டரில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த விஷயம் அமெரிக்காவில் வைரலாகிவிட்டதால், மேலும் பல நாடுகளில் வைரலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.