Advertisment

தையல் கடையிலிருந்து ஒரு தமிழ் பேராசிரியர்...

மார்ச் 12 – வரலாற்று ஆய்வாளர் மா.ராசமாணிக்கம்.

நல்லது யார் சொன்னாலும் கேட்டுக்கொள்ளவேண்டும், யார் சொன்னார், எதற்காக சொன்னார் என ஆராய்ச்சி செய்யக்கூடாது, சந்தேகிக்கூடாது என்கிற கோட்பாட்டில் வாழ்க்கையை தொடங்கியவருக்கு வாழ்க்கையில் வளர்ச்சியே கிடைத்தது. அவர் மறைந்தும் இன்றளவும் பட்டபடிப்பு படிக்கும் மாணவர்கள் அவர் எழுதிய நூல்களை தான் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் இயக்கங்களும் அவர் எழுதிய நூலைத்தான் இன்றும் சான்றாக காட்டுக்கிறார்கள் அவது வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ராசமாணிக்கம்.

Advertisment

ஆந்திரா மாநிலம் சித்தூரில் வசித்த மாணிக்கம் – தாயம்மாள் தம்பதியின் மகனாக ராஜா பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 7 பேர் ஆனால் பிறந்த சில ஆண்டுகளிலேயே அதில் 5 பேர் இறந்துவிட்டனர். இறுதியில் அந்த தம்பதியரின் மகன்காக வளர்த்தது ராஜாவும், அவரது அண்ணன் இராமகிருஷ்ணனும் தான்.

மாணிக்கம் அரசாங்கத்தின் வருவாய்த்துறையில் நில அளவையர் ( சர்வேயர் ) துறையில் அதிகாரியாக பணியில் இருந்ததால் அடிக்கடி இடமாறுதல் செய்யப்பட்டனர். ராஜாவுக்கு 9 வயதாகும்போதே அதாவது 1916ல் அவரது குடும்பம் மதுரைக்கு வந்தது. மதுரை வந்த இரண்டு ஆண்டுகளில் ராஜாவின் தந்தை மாணிக்கம் இறந்துப்போனார். இதனால் குடும்பம் நிலைக்குலைந்தது. வாரிசு அடிப்படையில் மாணிக்கத்தின் வேலை அவரது மகன் இராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இவரும் ஊர் ஊராய் பணி மாறுதலில் அனுப்பிக்கொண்டே இருந்தது அரசாங்கம்.

maa.rajamanikkanar

Advertisment

1921ல் திண்டுக்கல்லில் இயங்கிய கிருஸ்த்துவ மிஷனரி நடத்திய பள்ளியில் சேர்க்கப்பட்டார். தமிழ் வழியில் முறையாக பாடங்களை கற்க துவங்கினார். நன்னிலம், தஞ்சாவூர், திண்டுக்கல் என அடுத்தடுத்து பணி மாறுதல் கிடைக்க அங்கு குடும்பம்மே சென்றது. இதனால் ராஜாவின் படிப்பு பாதிக்கப்பட அவரது அண்ணன் அவரை குடும்ப சூழ்நிலை கருதி தையல் கடையில் காஜா பையனாக வேலைக்கு சேர்த்துவிட்டார்.

ராஜாவின் படிப்பு ஆர்வத்தை கண்ட தஞ்சாவூரில் இருந்த தமிழாசிரியர் அவரை படிக்க வைக்க வேண்டியதன் அவசியத்தை அவரது அண்ணனிடம் எடுத்துக்கூறி தொடர்ந்து படிக்கவைத்தார். பள்ளி படிப்பு மீண்டும் துவங்கிய சமயத்தில் கரந்தை தமிழ்சங்க முன்னோடிகளான கரந்தை கவியரசு வெங்கடாஜம், உமாமகேஸ்வரன், உ.வே.சா, ராகவையங்கார் போன்றோர் மூலம் தமிழ்ழை நன்றாக கற்றார்.

அந்த தமிழ் பத்தாம் பாரம் என்கிற பத்தாம் வகுப்பு மட்டும்ம படித்த ராஜாவுக்கு, தஞ்சாவூர் ஒரத்தநாடு உயர்நிலைப்பள்ளியில் கணக்காளராக பணியில் சேர்ந்தார். அந்த பணி அவருக்கு பிடிக்கவில்லை. அவரின் தந்தையின் நண்பர் 1928ல் சென்னை வண்ணாரப்பேட்டையில் இயங்கிய தியாகராயர் பள்ளியில் தமிழாசிரியராக பணி கிடைக்க செய்தார். அந்த பணியில் விரும்பி ஏற்றுக்கொண்டார். அதன்பின் ராஜா என்பது ராசமாணிக்கம்மானது. 1928 முதல் 1936 வரை சுமார் 8 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். அங்கு பணியாற்றும்போதே தனது 23வது வயதில் 1930 செப்டம்பர் 9ந்தேதி கண்ணம்மா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்விலும் இணைந்தார்.

pallava history book

பணியாற்றிய சமயத்திலேயே மாணவர்களுக்கான பாடல்நூல்களை தொகுத்து எழுதினார். நாற்பெரும் வள்ளல்கள், ஹர்சவர்தன், மூவேந்தர், ஆப்பிரகாம்லிங்கம், முசோலினி என பெருந்தலைகள் பற்றிய புத்தகங்களை எழுதினார். அப்போது அவரது கல்வி பள்ளிக்கல்வி மட்டும்மே. ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே படிக்கவும் செய்தார். 1936ல் பட்ட படிப்புகளை படித்து முடித்தார். பணியில் தமிழாசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார்.

பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, சிந்துசமவெளி வரலாறு, பெரியபுராண ஆராய்ச்சி போன்ற நூல்கள் இவர் எழுதினார். தமிழர் திருமண நூல் என்கிற நூலை எழுதினார். அதில் தமிழர் திருமணம் ஆடம்பரமானதல்ல, செலவற்ற திருமணம் தான் ஆதிக்காலம் முதல் தமிழர்கள் செய்து வந்தனர் என ஆய்வு குறிப்புகளோடு எழுதினார். அதோடு, அதில் ஐதீக முறைகளை எதிர்த்தார். திராவிட கழகத்தோடு அவருக்கிருந்த நெருக்கம்மே அவரை வெளிப்படையாக எழுத வைத்தது.

Chola

1947ல் சென்னை விவேகானந்தர் கல்லூரியில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். 1953 வரை அந்த பணியில் இருந்தார். அங்கிருந்து மதுரை தியாகராய கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக பதவி உயர்வில் சென்றார். 1959ல் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் இணை பேராசிரியராக பதவி உயர்வில் வந்தவர் சுமார் 8 ஆண்டுகள் அந்த பணியில் இருந்தார்.

இவர் கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றியபோது சைவசமய வளர்ச்சி, பத்துப்பாட்டு ஆராய்ச்சி போன்ற நூல்கள் எழுதப்பட்டன. ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.

சென்னை பல்கலைகழகத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது 1967 மே 26ந்தேதி மாரடைப்பால் காலமானார்.

இவர் மறைவுக்கு பின் இவரது சேக்கியார், சோழர் வரலாறு உட்பட 20 நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. இவர் வரலாற்று ஆசிரியர் மட்டும்மல்ல சிறந்த புதின எழுத்தாளருமானவார். நாட்டுக்கு நல்லவை, தமிழரசி போன்ற புதினங்களையும் எழுதியுள்ளார் ராசமாணிக்கம்.

history naam thamizhar tamil culture
இதையும் படியுங்கள்
Subscribe