Skip to main content

ஆட்சியில் இருப்பவர்களை ஒரு பிடி பிடிக்கவே அரசியலுக்கு வந்தேன் - டி.ஆர் தடாலடி பேட்டி!

Published on 21/11/2019 | Edited on 22/11/2019

திரைப்பட விநியோகஸ்தர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் அரசியல் தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். அப்போது மக்கள் நலனுக்காக ரஜினி - கமல் இணைந்து செயல்பட தயார் என கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "ரஜினியும் கமலும் தனக்கு கலைத்துறையில் மூத்தவர்கள். அரசியலில் அவர்களை விட கொஞ்சம் நான் மூத்தவன்" என கூறினார். மேலும் அனுபவம் மட்டுமே அரசியலில் வெற்றியை தராது, அதிர்ஷ்டமும் வேண்டும் எனவும் அவர் கூறினார்.
 

g



இடையில் ஒரு நிருபர் நீங்கள் அரசியலில் நிலைக்கவில்லையே என்று வினவினார். இதனை கேட்டு சற்றே கோபமடைந்த டி.ராஜேந்தர், " நான் அரசியலுக்கு வந்து முதல்வராவேன், ஆட்சியை பிடிப்பேன் என்று கூறிக்கொண்டு இருக்கவில்லை. மாறாக ஆட்சியில் இருப்பவர்களை ஒரு பிடி பிடிக்கவே அரசியலுக்கு வந்தேன். அப்படிப்பட்ட நான் பல பதவிகளில் இருந்துள்ளேன். இதில் அமைச்சர் பதவிக்கு நிகரான மாநில சிறுசேமிப்பு துறை தலைவர் பதவியை, ஈழத்தமிழர் பிரச்சனைக்காக ராஜினாமா செய்துளேன். அப்படிப்பட்ட என்னை அரசியலில் நிலைக்காதவன் என்று சொல்வதில் எனக்கு வருத்தம் இல்லை"  என்றார்
 

Next Story

''முகத்துல தான் வைத்திருப்பேன் தாடி... எதையுமே மறைக்க மாட்டேன் மூடி''-டி.ஆர் பேட்டி

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

TR

 

உடல்நலக்குறைவு காரணமாக உயர் சிகிச்சை பெறுவதற்காக திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் இன்று அமெரிக்கா சென்றார். இதற்கு முன்பே சென்னை உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரை தமிழக முதல்வர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

 

இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த டி.ஆர்.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''நான் உயர் சிகிச்சைக்காக இப்போதுதான் அமெரிக்கா போகிறேன். அதற்காக இப்பொழுதுதான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருக்கிறேன். நான் வாழ்க்கையில எதையுமே மறைச்சதில்லை. நான் முகத்துலதான் வைத்திருப்பேன் தாடி, நான் எதையுமே மறைச்சு வைக்கமாட்டேன் மூடி. இப்போதுதான் அமெரிக்கா போகிறேன். அதற்காக இப்பொழுதுதான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருக்கிறேன் ஆனால் அதற்குள்ளேயே நான் அமெரிக்கா போயிட்டேன் அங்கே போயிட்டேன் இங்கே போயிட்டேன்னு தப்பும் தவறுமா செய்திகள் வெளியாகிறது. நானே சினிமா கதையாசிரியர். வித விதமா கதை எழுதி வசனம் எழுதி, திரைக்கதை எழுதி யார் யாரோ என்ன என்னவோ பண்ணாங்க... ஆனால் இறைவனைமீறி, விதியை மீறி, கர்மாவை மீறி எதுவும் நடக்காது. நான் ஒரு சின்ன நடிகன், சாதாரண சின்ன கலைஞன், லட்சிய திமுக எனும் சின்ன கட்சியை நடத்துபவன். ஆனா என் மேல பாசம் வைத்து, பரிவு வைத்து பல பேர் செய்த பிரார்த்தனை, ஆராதனை காரணமாகத்தான் இன்று நான் இங்கு நின்னுகிட்டு இருக்கேன். எனது ரசிகர்களுக்கும், எனது மகன் சிம்பு ரசிகர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும், கட்சியை தாண்டி  எனக்காக பிரார்த்தித்த அனைவரும் எனது நன்றி'' என்றார். 

 

 

Next Story

'சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்கிறோம்'- நடிகர் சிம்பு அறிக்கை!

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

'We are taking him abroad for treatment' - Actor Simbu information!

 

இயக்குநர் டி.ராஜேந்தர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 19ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், அவர் நல்ல முறையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.  

 

இந்நிலையில் டி.ராஜேந்தரின் மகன் சிலம்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' தந்தைக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அழைத்துச் செல்கிறோம். வயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் உயர் சிகிச்சை தரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் முழு சுயநினைவுடன், நலமாக உள்ளார். சிகிச்சை முடிந்தவுடன் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கு, அனைவரின் அன்புக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.