அமெரிக்காவில் சுனில் ஆரோரா! வேகமெடுக்கும் தேர்தல் ஆணைய பணிகள்!

Sunil Arora

அமெரிக்காவில் இருக்கும் தனது மகளைப் பார்த்து வருவதற்காக கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார் இந்தியதலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா. அமெரிக்கா மற்றும் இந்தியாவில் கரோனா லாக்-டவுன் பிரகடனப்படுத்தப்பட்டதால் அமெரிக்காவிலேயே சிக்கிக் கொண்டார் அவர். அதே சமயம், சிறப்பு விமானத்தின் மூலம் இந்தியாவுக்கு அவரை அழைத்து வர பிரதமர் அலுவலகம் முயற்சித்துள்ளது. அது குறித்து சுனில் அரோராவிடம் பேசியிருக்கிறார்கள் பிரதமர் அலுவலக அதிகாரிகள்.

அப்போது, அதிக சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டாம்; ஏப்ரல் வரை அமெரிக்காவில் இருக்க வேண்டும் என முடிவு செய்து விடுமுறையில்தான் இங்கு வந்திருக்கிறேன். விடுமுறை முடிந்ததும் அன்றைய சூழல்களுக்கேற்ப முடிவு எடுக்கிறேன் என்றதால், அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியை மத்திய அரசு கைவிட்டது.

தற்போது, அவரது விடுமுறை முடிந்திருந்தாலும் ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என்பதில் தெளிவில்லாத போக்கு இருப்பதால், காணொலி காட்சி மூலம் தேர்தல் ஆணையத்தின் அலுவலகப் பணிகளைத் துவக்கியிருக்கிறார் சுனில் அரோரா.

election commission sunil arora
இதையும் படியுங்கள்
Subscribe