Skip to main content

சமூக மாற்றம் தேவை! - பேராசிரியர் சுந்தரவள்ளி பேச்சு!

Published on 05/03/2021 | Edited on 06/03/2021
c

 

சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பேராசிரியர் சுந்தரவள்ளி நடப்பு அரசியல் குறித்து அதிரடியாக சில கருத்துகளை முன்வைத்தார். அவரின் பேச்சு பின்வருமாறு, "நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கும் யாரும் அடிமையில்லை என்ற வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் புரட்சியாளர் அம்பேத்கர். இந்த மேடையை ஒரு சனாதனத்துக்கு எதிரான ஒரு களமாக அமைத்துக்கொள்ளவே நான் விரும்புகிறேன். எப்போதும் சனாதனவாதிகளுக்கு எதிராக சமரசம் செய்யாத இருவர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்றால் ஒருவர் பெரியார், மற்றொருவர் அம்பேத்கர். ஆனால், இந்தியாவில் வேறு இருவரை மட்டும் தான் அவர்களுக்குப் புடிக்கும். ஒன்று அதானி, மற்றொன்று அம்பானி. இவர்கள் இருவரும் தான் அவர்களின் செல்லப்பிள்ளைகள். மற்றவர்கள் அனைவரும் சந்தில் நின்று கொண்டு இருக்கிறார்கள். சமூக மாற்றம் முதலில் தேவை. அதனால் தான் அம்பேத்கர் போன்றோர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். பார்ப்பனியம் ஒரு பூனை குட்டியைப் போன்றது. மதிலில் இருந்து குதித்தாலும் பூனை சேதாரம் இல்லாமல் தன்னுடைய கால்களை ஊன்றி தன்னைக் காத்துக்கொள்ளும். அதுதான் பார்ப்பனியம். ஆனால் தற்போது சிலர் வாருங்கள் மனு பற்றி விவாதிப்போம் என்று குரல் கொடுக்கிறார்கள். இது எல்லாம் காலத்தின் கோலம். 


வட மொழியை, சமஸ்கிருதத்தை தெளிந்து கற்றவர் வில்லியம்ஸ் ஜோன்ஸ். எனவே மனு தொடர்பாக நீங்கள் விடும் கதை எதுவும் இங்கே எடுபடாது. என்னையும் வில்லியம்ஸ் ஜோன்ஸ் என்று சொன்னால் கூட சொல்லுவார்கள். அப்போதைய சூழ்நிலையில் தன்னுடைய மக்களின் விடுதலைக்காக 18 மணி நேரம் தொடர்ந்து பாடுபட்ட ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது அம்பேத்கர் மட்டுமே. உயர்கல்விக்காக அமெரிக்காவுக்குச் சென்ற முதல் இந்தியர் அண்ணல் அம்பேத்கர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பதவியைத் தூக்கிப்போட்டு விட்டு வீட்டிற்கு வந்தவர். இந்தியாவில் அவருக்கு இணையான ஒரு தலைவர் வேறு யாரும் இருக்கிறார்கள் என்றால், அப்படி யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. எங்கள் ஐயா அமெரிக்காவில் சமஸ்கிருதத்தைப் படித்துவிட்டு இங்கே வந்து அவர்களை ஓட ஓட அடித்து விரட்டினார் என்பதுதான் வரலாறு. அதற்குப் பிறகு தான் மனுவை அவர் எரித்தார். மனித குலத்துக்கு எதிராக இருப்பதை மனிதர்கள் ஒன்று சேர்ந்து அடித்து நொறுக்குவது தான் சமூகநீதி. அதைத்தான் அண்ணல் அம்பேத்கர் செய்தார். அதனால் தான் அவர்களால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். அவர்கள் தவிக்கட்டும், அதுதான் நமக்கு வேண்டும். அப்போதுதான் நமக்கான விடியல் பிறக்கும்" என்றார்.


 

Next Story

காவிகளுக்கு அஞ்சும் விளையாட்டு வீரர்கள்; பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறி வருகிறது - சுந்தரவள்ளி

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

Sundaravalli  Interview

 

சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி அவர்களை சந்தித்து மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டங்களைப் பற்றி பல கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

பாலியல் வன்கொடுமை அடிப்படையில் பாஜக எம்பியான பிரிஜ்பூஷன் சரண்சிங்கை கைது செய்யக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி, தான் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று கூறிய பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்களே?

இந்தியாவிற்காக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீராங்கனைகள் வீதியில் இறங்கி பிரிஜ்பூஷண் சரண்சிங்கை கைது செய்யக் கோரி பல நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் பிரிஜ்பூஷண் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு சென்று போஸ் கொடுத்து வருகிறார். இது போன்ற செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது என்று உலக நாடுகள் பட்டியலிட்டு வருகிறது. இந்தியாவிற்கு செல்லும் படித்த பெண்கள் அல்லது சுற்றுலா செல்லும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் பயப்படும் வகையில் தற்பொழுது இந்தியா காவிகளுடைய ஆட்சியில் மிக மோசமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலையில் தான் இங்குள்ள பெண்கள் வாழ வேண்டிய நிலை உள்ளது.

 

புகார் கொடுத்தவர்கள் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். புகார் கொடுத்தவுடன் கைது செய்ய முடியாது என்று அண்ணாமலை கூறி வருகிறாரே அது பற்றி உங்கள் கருத்து என்ன?

காவல்துறை முதல் நீதிமன்றம் வரை அனைத்து இடத்திற்கும் சென்று புகார் அளித்து உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து அதற்கு நீதி கிடைக்காததனால் தான் மல்யுத்த வீராங்கனைகள் இத்தனை நாள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் பாஜகவில் இருக்கின்ற கே.டி.ராகவன் தொடங்கி எடியூரப்பா வரை அனைவரது பெயரிலும் பாலியல் வழக்கு உள்ளது. ஆனால் இந்த பாஜக இவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? பாஜகவில் நெடுநாட்களாக இருந்த காயத்ரி ரகுராம் அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல் அவரை கட்சியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அவரை தரக்குறைவாகப் பேசியவர் தான் இந்த அண்ணாமலை. புகார் அளித்தவர்களில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் உள்ள ஒரு வீராங்கனை ஆவார். அவர் அளித்த புகாரின் பேரில் உடனடியாக போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்வது தானே சட்டம். ஆகவே, இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக பல யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க விசயமாகப் பார்க்கப்படுகிறது.

 

உலக மல்யுத்த அமைப்பு இதற்கு கண்டனம் தெரிவித்து குறிப்பிட்ட நாளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளதே?

உலக மல்யுத்த அமைப்பு இந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆதரவு தந்திருப்பதை நாம் மிகவும் நல்ல விஷயமாகத் தான் பார்க்க வேண்டும். மேலும், விவசாயத் திட்டத்திற்கு எதிராக ஒரு வருடத்திற்கும் மேலாக பஞ்சாபில் போராடிய விவசாயிகள் இந்த மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், மல்யுத்த வீராங்கனைகள் பதக்கங்களை கங்கையில் வீச முயன்றபோது அவர்களை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்க மோடிக்கு 5 நாள் கெடு கொடுப்போம் என்று கூறி சமாதானம் செய்துள்ளனர். ஆதலால், மோடி அரசின் மீது மக்களுக்கு எப்போதோ நம்பிக்கை போய்விட்டது. இதுபோன்ற செயல்கள் மீண்டும் அதிகரிக்குமானால் அடுத்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மக்களால் மோடி தூக்கி எறியப்படுவார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 

மற்ற விளையாட்டுகளைப் போல தான் இந்த மல்யுத்த விளையாட்டும். ஆனால், மற்ற விளையாட்டு வீரர்கள் எங்களுக்கு குரல் ஏதும் கொடுக்கவில்லையே என்ற ஏக்கம் மல்யுத்த வீரர்களுக்கு இருக்கிறதே?

துப்பாக்கிச் சூட்டில் தங்கம் வென்றவர், வில்வித்தையில் தங்கம் வென்றவர், பிரபல கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உட்பட சிலர் இந்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதே சமயத்தில் மக்களால் கொண்டாடப்படும் மற்ற வீரர்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்காதது, நமக்கு அரசியல் வேண்டாம் எனவும், மீறி இதுபோன்ற செயலுக்கு ஆதரவு தெரிவித்தோமேயானால் தமக்கு வாய்ப்பு தர மறுக்கப்படுமோ என்ற அச்சத்தில் தான் இருப்பார்கள். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தான் பெண்கள் இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு பதக்கங்களை வென்று வருகின்றனர். மல்யுத்தம் என்ற விளையாட்டு மட்டுமல்ல. மற்ற விளையாட்டுகளில் கூட பெண்கள் கவனிக்கப்படுவதில்லை. மீறி சில பெண்கள் அவ்வப்போதும் இந்த மாதிரி விளையாட்டுகளில் கலந்துகொள்ள நினைத்தாலும் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என நினைத்து மற்ற வீரர்களும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

 

 

Next Story

“அண்ணாமலை சொல்வதெல்லாம் பொய்” - முனைவர் சுந்தரவள்ளி விமர்சனம்

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Sundaravalli Interview

 

தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகள் பலவற்றையும் குறித்த தன்னுடைய கருத்துகளை நம்மோடு சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி பகிர்ந்து கொள்கிறார்.

 

தமிழ்நாடு பட்ஜெட்டில் பெரும்பாலும் நிறைகள் தான் இருக்கின்றன. சாமானியர்களுக்கான சமூகநீதி பட்ஜெட் இது. விவாதங்கள் நடக்கும்போது இந்த பட்ஜெட் இன்னும் செழுமையடையும் என்று நம்புகிறேன். பெண்களுக்கான இலவச பஸ் திட்டத்தை எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தன. ஆனால், அது இன்று பெண்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வைத்திருக்கிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, பெண்கள் உயர்கல்வி பெறும் சதவீதத்தை உயர்த்தியுள்ளது. 

 

மத்திய அரசு விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மகாராஷ்டிராவில் விவசாயிகள் போராடி வருகின்றனர். பாஜக ஆட்சியில் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற நாடாக இந்தியா மாறி வருகிறது. இந்த நிலைமையில் அண்ணாமலை தமிழ்நாடு அரசை விமர்சித்து வருகிறார். தேர்தலில் பாஜக தனியாக நிற்க வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன். அப்போதுதான் அவர்கள் நோட்டாவுக்குக் கீழ் என்பதை மீண்டும் உணர்வார்கள். அதிமுகவோடு கூட்டணி வைத்ததால் தான் பாஜகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர். 

 

நேற்று அரசியலுக்கு வந்து இன்று தமிழ்நாட்டில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடுகிறார் அண்ணாமலை. தான் ஒரு கடன்காரனாக இருக்கிறேன் என்று அண்ணாமலை சொல்வதெல்லாம் பொய். இவருக்கு அமர்பிரசாத் ரெட்டி என்பவர் கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டுவந்து கொடுக்கிறார். எனவே எங்களிடம் இவர் யோக்கியன் போல் நடிப்பது எடுபடாது. பணம் கொடுத்து தேர்தலை சந்திக்கக் கூடாது என்கிறார் அண்ணாமலை. ஆனால், வரவிருக்கும் கர்நாடக தேர்தலுக்காக பல கோடிகள் செலவு செய்ய பாஜக தயாராகி வருகிறது. காசு கொடுத்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் கட்சி தான் பாஜக.

 

ஒரு கட்சித் தலைவர் எப்படி இருக்கக்கூடாதோ அப்படி இருப்பவர் அண்ணாமலை. கோவையில் கடையடைப்பு நடத்த வேண்டும் என்று பாஜக மாவட்டத் தலைவர்கள் முடிவெடுத்தபோது அதற்கு எதிராக கோர்ட்டில் பேசியவர் அண்ணாமலை. ஆனால், சிலிண்டர் வெடிப்பு நடந்த இடத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று பஜனை பாடினார். கோபத்தால் அந்த நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் கலந்துகொள்ளவில்லை. பாஜகவில் இருக்கும் ஒரு சிலரையும் வெளியேற்றிவிட வேண்டும் என்று துடிக்கிறார் அண்ணாமலை. அரசியலில் ஒரு அமாவாசை தான் அண்ணாமலை.

 

சமீபத்தில் அண்ணாமலையை அதிமுக நன்றாக வைத்து செய்துவிட்டது. அவருக்கு இப்போது உட்கட்சி உட்பட எங்குமே மரியாதை இல்லை. அதனால் அரசியலில் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் அவர் முழித்துக் கொண்டிருக்கிறார்.