Advertisment

பாடகி சுசித்ராவின் நிலை என்ன?

பிரபல திரைப்பட பாடகி சுசித்ரா, ’யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட படங்களில் நடித்த கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டார். திரைப்படங்கள், விழாக்கள் என்று பரபரப்பாக இருந்தார் சுசித்ரா. கடந்த 2017ம் ஆண்டில் திடீரென சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் இருந்து, ’சுச்சி லீக்ஸ்’ என்ற பெயரில் தனுஷ், விஜய் டிவி டிடி, ஹன்சிகா, த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, சின்மயி, ராணா, ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரின் அந்தரங்க வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியானதால் திரையுலகம் அதிர்ந்தது. இதையடுத்து, தனது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து, அதிலிருந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்கள்’’ என்று சுசித்ராவே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Advertisment

’இது ஹேக்கர்களின் வேலை அல்ல,சுசித்ராவேதான் வெளியிட்டுள்ளார்,அவருக்கு மனநிலை சரியில்லை’ என்றும் அப்போது தகவல் பரவியது. இந்த விவகாரம்தொடர்ந்த நிலையில், இதை யாரும் பெரிதுபடுத்தவேண்டாம் என்று சுசியின் கணவர் கார்த்திக் வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் இந்த விவகாரம் தொடர்ந்த நிலையில், சுசித்ராவிடம் இருந்து கார்த்திக் விவாகரத்து பெற்றார்.

s

விவாகரத்திற்கு பின்னர் தனது குடும்பத்தினரை விட்டு விலகி, அடையாறில் உள்ள வீட்டில் சுசித்ரா தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போய்விட்டதாக, அவரது தங்கை சுஜிதா, அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சுசித்ராவை தேடி வந்த போலீசார், சென்னை தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து சுசித்ராவை மீட்டனர். மீட்பின்போது, ‘’என்னை மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் குடும்பத்தினர் நடத்துகிறார்கள். அதனால்தான் வீட்டினருடம் இருந்து விலகி தனியாக வாழ்ந்தேன். இப்போது அங்கேயும் இருக்கப் பிடிக்காததால்தான் ஓட்டலில் தங்கியிருந்தேன்’’ என்று கூறியதாக ஒரு தகவல் வந்தது. காவல்துறையினர் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

Advertisment

‘போக்கிரி’ போன்ற படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவரும் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ரேடியோ ஜாக்கியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான சுசித்திராவின் நிலை என்ன என்று அவரின் ரசிகர்கள் கவலையுற்றிருக்கின்றனர்.

IIT

metoo suchitra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe