Advertisment

பிளாக்கில் துக்ளக் வாங்கிய போது சிஸ்டம் கெட்டுபோக வில்லையா..? - பேராசிரியர் சுப.வீரபாண்டியன்!

துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில செய்திகள் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது காவல்துறையினரிடம் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, " 25 வயதில் பத்திரிக்கை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் அதன் மீது நாட்டம் கொண்டவர்களுக்கு ஏற்படும். 40 வயதில் பத்திரிக்கை தொடங்கிய நபர்களும் இருக்கிறார்கள். ஆனால் 91 வயதில் பத்திரிக்கை தொடங்கிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஐயா பெரியார் ஒருவராகத்தான் இருக்க முடியும். 70 வயது, 75 வயதில் புறப்பட்டு விடலாம் என்ற எண்ணம் பெரும்பாலனவர்களுக்கு வரும் நிலையில், ஐயா பெரியாருக்கு பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் இரண்டு பத்திரிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒன்று ஐயாவின் உண்மை, மற்றொன்று துக்ளக். உண்மை நாளிதழின் அட்டை படத்தில் புத்தர் படம் அச்சிடப்பட்டு வெளியானது. துக்ளக் இதழில் இரண்டு கழுதைகள் பேசிக்கொள்வது போன்று அட்டைப்படம் வெளியிடப்பட்டது. அவரவர் எண்ணங்களுக்கு ஏற்பத்தான் படங்கள் வந்து சேரும். பெரியாருக்கு புத்தரை போட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவர்களுக்கு கழுதையை போட வேண்டும் என்று தோன்றியுள்ளது. பெரியாருக்கு புத்தர் பெரியவராக இருந்திருக்கிறார். அவ்வளவு தான் நான் சொல்ல முடியும்.

Advertisment

jk

ஆனால் புத்தருக்கும் தெரியாது, கழுதைக்கும் தெரியாது தங்கள் படம் அட்டை படத்தில் வந்திருக்கிறது என்று. ஒருவேளை அவ்வாறு தெரிந்திருந்தால் ஐயாவின் ஏட்டில் வந்திருக்கிறோமே என்று புத்தர் மனம் மகிழந்திருப்பார். இந்த ஏட்டில் வந்துவிட்டோமே என்று கழுதை அவமானப்பட்டு இருக்கும். உண்மை நாளிதழ் எத்தனை விதமான கட்டுரைகளை தொடங்கத்தில் இருந்து வெளியிட்டுள்ளது என்றால், அதை எல்லாம் பார்த்தால் நமக்கு வியப்பாக இருக்கும், இங்கர்சாலில் ஆரம்பித்து அனைத்து அறிவயல் பூர்வமான கட்டுரைகளையும் குறைந்த விலையில் விற்பனை செய்துள்ளது. அன்றைய மதிப்பில் வெறும் 25 பைசாவிற்கு தான் உண்மை நாளிதழ் விற்பனை செய்யப்பட்டது. அப்போது பிளாக்கில் எல்லாம் அந்த நாளிதழ் விற்பனை செய்யப்படவில்லை. பிளாக்கில் விற்றால் சிஸ்டம் கெட்டுபோகும் என்று நமக்கு தெரியும். எனவே நாம் நேர்மையானவர்கள், எனவே 25 பைசா உண்மை நாளிதழை உண்மையான 25 பைசாவுக்கே விற்பனை செய்தோம். இந்த வரலாறை எல்லாம் ரஜினிக்கு குருமூர்த்தி சொல்லியிருப்பார் என்று என்னிடம் பேசிய மேடையில் பேசிய கவிஞர் சொன்னார். அதற்கு ஆசிரியர், குருமூர்த்திக்கும் இந்த வரலாறு தெரியாது என்று கூறினார். இந்த வரலாறு எல்லாம் தெரிந்திருந்தால் தான் அவர்கள் அறிவாளிகளாக இருந்திருப்பார்கள் இல்லையா? நாம் யாரையும் குறைந்து மதிப்பிடவில்லை. அறிவாளியாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான் பேசுகிறோம்" என்றார்.

Advertisment

subavee
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe