Advertisment

'ஸ்டாப் ஆன்டி செமிட்டிசம்'-கட்டுப்படுத்த மறந்ததால் நிகழ்ந்த கோரம்

157

protest Photograph: (humanity)

யூதர்கள் கொண்டாடக்கூடிய 'ஹனுக்கா' என்ற பண்டிகையின் கொண்டாட்ட நிகழ்வை ஒட்டி கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டாய் கடற்கரையில்  நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் 2 பேர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 12 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். இரு காவல்துறை அதிகாரிகள் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பதற்றமான சூழலை உருவாக்கி இருக்கிறது.

Advertisment

அதேசமயம் இந்த கொடூர சம்பவம் நடந்த இடம் முழுவதுமாக நியூ சவுத் வேல்ஸ் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.நா அதிகாரி கண்ணன் நக்கீரனின் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisment
153
sydney Photograph: (incident)

மேலைநாடுகளில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் யார் வேண்டும் என்றாலும் துப்பாக்கி வாங்கலாம். உங்களுக்கு குற்றவியல் பின்னணி இல்லை என்றால் துப்பாக்கி வாங்க வேண்டுமென்று நினைத்தால் வாங்கிக் கொள்ளலாம்.  பொதுவாக அந்த மாதிரி துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை உங்களுக்கு எதற்கு தருகிறார்கள் என்றால் அங்கு வனவிலங்குகள் எல்லாம் இருக்கும். அந்த விலங்குகளுக்கு எதிராக நீங்க துப்பாக்கி வச்சிக்கறதுக்குதான். வேற எதற்காகவும் இல்லை. பள்ளிவாசல் தாக்குதல் நடந்ததற்கு பிறகு டஸ்னியாலயும் ஒரு பெரிய தாக்குதல் நடந்துச்சு. இந்த இரண்டு தாக்குதலுக்கு பிறகு இந்த துப்பாக்கி வாங்குகிற விதிகள் எல்லாம் பெரிய கெடுபிடி ஆயிடுச்சு. 

ஆட்டோமேட்டிக், செமி ஆட்டோமேட்டிக் வெப்பன்ஸ் நீங்க வாங்க முடியாது. தொடர்ந்து சுடுற மாதிரி இருக்கும் அதற்கு பேர்தான் ஆட்டோமேட்டிக் வெப்பன். நீங்க லோட் பண்ணி லோட் பண்ணி சுட வேண்டும். குற்றவியல் பின்னணி இருக்கக்கூடாது. துப்பாக்கி சூடு நடத்திய சஜித் அக்ரம் ஆஸ்திரேலிய பிரஜையே இல்லை. அவர் துப்பாக்கி வாங்கி இருக்ககிறார். இதை மாற்ற வேண்டும் அப்படின்னு சில பேர் சொல்றாங்க. 100 பேருக்கு 14 துப்பாக்கிகள் இருக்கின்றன ஆஸ்திரேலியாவில். நம்ம ஊர்ல எல்லாம் ஒரு துப்பாக்கிக்கு நீங்க உரிமம் வாங்குவது என்பதையே நீங்கள் மறந்து விடலாம். அவ்வளவு மிகப்பெரிய காரியம். அங்கு அப்படி கிடையாது நீங்க எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் நீங்க வாங்கிட்டு வந்து வீட்டில் வைத்துக்கொள்ளலாம்..

அமெரிக்காவில் 100 பேருக்கு 120 துப்பாக்கிகள் இருக்கிறது. அங்க அடிப்படை உரிமை. ஃபண்டமெண்டல் ரைட்.  பேச்சு சுதந்திரம் மாதிரி எழுத்து சுதந்திரம் மாதிரி நீங்கள் கேரிங் ஃபயர் ஆர்ம்ஸ் உங்களுடைய அடிப்படை உரிமை. எவ்வளவோ துர்சம்பவங்கள் நடந்த பிறகும் கூட அவர்களால் அது தொடர்பாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அதனால் எல்லார் கிட்டயும் துப்பாக்கி இருக்கு. சர்பியா மான்டனிகரோ யுகோஸ்லாவியாவில இருந்து பிரிந்த நாடுகள். அதில் ஒவ்வொரு நாட்டுக்கும் 100 பேரில் 39 பேர் துப்பாக்கி வச்சிருக்காங்க. சவுதி அரேபியாவுக்கு பக்கத்தில இருக்க எமன் அங்கு போர் நடந்துட்டு இருக்கு. அங்கு 100 பேருக்கு 52 துப்பாக்கிகள் இருக்கின்றன. இந்த விஷயத்தில் நம் நாடு எவ்வளவோ பரவாயில்லை.

 'ஆன்டி செமிட்டிசம்' என்றால் யூத வெறுப்பு. உண்மையில் யூதர்கள் மட்டுமே செமிட்ஸ் கிடையாது அரபுகளும் செமிட்ஸ்தான். ஆனால் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஆன்டி செமிட்டிசம் என்று சொல்வது யூதர்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்லா மாறிடுச்சு. இந்த ஆன்டிசெமிட்டிசம்  உலகம் முழுக்க பெரிய பரவலாக எழும்பி இருக்கிறது காரணம் பாலஸ்தீனம்-காசா பிரச்சனை. அந்த தாக்குதலுக்கு பிறகுதான் பல இடங்களில் யூத கோவில்களில் தாக்குதலும், யூதர்கள் சாப்பிடும் இடங்களில் அவர்களுக்கு தொந்தரவும், யூதர்களை பற்றி மிக குறைவாக மதிப்பிடுவதும் நடக்குது.

அக்டோபர் 7, 2023 அந்த ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு ரெண்டு நாள்ல சிட்னியில் கடற்கரையில் ஒரு பெரிய பேரணி நடக்கிறது. அந்த பேரணியை அந்த நாட்டு அரசு அனுமதிக்கிறது. அந்த பேரணியில் போகிறவர்கள் கோஷத்தை எழுப்புகிறார்கள். இரண்டு தடவை பாலஸ்தீனியர்கள் அந்த மாதிரி எழுச்சி கிளர்ச்சி செய்து பல பேர் இறந்திருக்காங்க. அவங்க பக்கமும் சரி இஸ்ரேலிய பக்கமும் சரி இறந்திருக்காங்க.  யூத அரசுக்கு எதிராக நீங்கள் உலகமயமாக்கல் கொண்டுவர வேண்டும் என்ற ஒரு கோஷம் எழுப்புறாங்க. அந்த கோஷத்தை ஆஸ்திரேலிய அரசு அனுமதிக்கிறது. ஒரு வரையறை இல்லாமல், தார்மீக பொறுப்பில்லாமல் பேசுகிறார்கள். அதை கட்டுப்படுத்தும் ஒரு அரசாக ஆஸ்திரேலிய அரசு இல்லை என்று   நிறைய பேர் குறை சொல்லி வருகிறார்கள்.

Australia gun shoot humanist sydney
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe