Skip to main content

மருதுபாண்டியர்கள் வெட்டிய ஊரணிக்கு சாட்சியாய் நிற்கும் கல் மண்டபங்கள்

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

Stone halls witnessing the excavation by the Maruthupandi brothers

 

 

இறைப்பணியாய் தாகம் தீர்த்தவருக்கு நினைவு மண்டபமும் ஊரணியும் செய்துகொடுத்த மருதுபாண்டியர்கள். இதுகுறித்து கொல்லங்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் புலவர் கா.காளிராசா கூறியதாவது; சிவகங்கை சீமை என்றாலே சிவகங்கை அரண்மனை, காளையார் கோவில் கோபுரம் போன்றவை முதன்மையானவை. இந்த கோபுரத்திற்காக மருது சகோதரர்கள் இன்னுயிர் நீத்தமை அனைவரும் அறிந்ததே. சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் 1772ல் இறந்ததால் அவர் நினைவாக காளையார்கோவில் சிவன் கோவிலில் 152.1/2 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தை மருதுபாண்டியர்கள் அமைத்தனர்.

 

தாகம் தீர்த்த மொட்டையன் சாமி:

 

கோபுரம் கட்டுமானப்பணிக்கு மானாமதுரையில் இருந்து காளையார் கோவிலுக்கு மக்கள் வரிசையாக நின்று கைமாற்றி செங்கற்கற்களை கொண்டு வந்துள்ளனர். அப்பணியின்போது கொல்லங்குடி புதிதாக உருவான ஊராக இருந்ததால் குடிநீர் ஊரணி வசதியில்லை கொல்லங்குடி பகுதியில் குரு காடி பட்டியை சேர்ந்த மொட்டையன் என்பவர் இறைத்தொண்டாக தண்ணீர் பந்தல் வைத்திருந்தார். கோபுரம் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களுக்கும் தாகம் தீர்க்க தண்ணீர் வேண்டுவோருக்கும் தண்ணீரை சுமந்து வந்து வழங்கி தாகம் தீர்த்துள்ளார். இச்செய்தி மருது சகோதரர்களுக்கு கிடைக்க அவரைக் காண வந்துள்ளனர். ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்த மொட்டையன், மருது சகோதரர்கள் தன்னைக் காண வரும் செய்தியை அறிந்து அச்சப்பட்டதாகக் கூறுவர்.

 

சமத்துவம் பேணிய மருது சகோதரர்கள்:

வரிசையாக  மக்கள் செங்கற்கற்களை கை மாற்றும் பணியில்  ஈடுபட்டிருந்த இடத்தில் மொட்டையன் சாமியை மருது சகோதரர்கள் கண்டு மக்கள் தொண்டை மகேசன் தொண்டாக செய்த அவரை பெருமை செய்யும் விதமாக உமக்கு கொடையாக என்ன வேண்டும் எனக்கேட்க கொல்லங்குடிக்கு குடிநீர் ஊரணி வெட்டித் தரக் கேட்டுள்ளார்.  

 

மருது சகோதரர்கள் கல்மண்டபமும் ஊரணியும் அமைத்து தந்தனர்:

 

கொல்லங்குடி ஊருக்கு குடிதண்ணீர்  ஊரணியை வெட்டித் தந்ததோடு  கொல்லங்குடியிலும் மொட்டயன் சாமி பிறந்த குருகாடிப்பட்டியிலும் அவருக்கு பெருமை செய்யும் விதமாக கல் மண்டபங்களை கட்டி வைத்ததோடு நிலபுலங்களை வழங்கி சிறப்பித்தனர். இன்றும் இந்நிகழ்வின் சாட்சியாக கொல்லங்குடியிலும் குருகாடி பட்டியிலும் மண்டபங்கள் இருப்பதோடு கொல்லங்குடி குடிநீர் ஊரணி மருது ஊரணி என அழைக்கப்படுகிறது.

 

ஆங்கில இந்திய பேரரசு காலத்தில் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் விவர நூலில் இச்செய்தி பதிவாகியுள்ளது. இக்கல் மண்டபங்களை மொட்டையன் சாமி வழித்தோன்றல்கள் இன்றும் பராமரித்து பாதுகாத்து வருகின்றனர். என்று கூறினார்.

 

 

 

Next Story

கீழடி அகழாய்வில் பானைகள் கண்டெடுப்பு!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Discovery of pots in underground excavation

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடியில் ஒன்பது கட்ட அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வாராய்ச்சி பணிகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூன் 18 ஆம் தேதி (18.06.2024) காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இதனையடுத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக 14 இடங்களில் குழிகள் வெட்டப்பட்டு ஒன்றை ஏக்கர் பரப்பளவில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே மீன் சின்னம் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துக்களுடன் கூடிய பானைகள் கிடைத்துள்ளது. இரண்டு பானைகள் ஒரே இடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. பழங்கால தமிழர்கள் மிக நேர்த்தியாகப் பானையாக வடிவமைத்துள்ளனர்.

கீழடியில் இரண்டு பழங்கால பானைகள் கண்டறியப்பட்டுள்ள செய்தி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 6 அடி ஆழத்தில் இருந்து இரண்டு பானைகள் கிடைத்துள்ளன. மேலும் பானைகள் இருந்த இடத்தில் மூங்கில் கம்புகள் ஊன்றி கூரைகள் வேயப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூங்கில் கூரைகளைக் கரையான் அரைக்காமல் இருக்க ஆற்றல் மணல் போடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Next Story

நன்றி சொல்ல வந்த கார்த்தி சிதம்பரம்; ஒதுங்கி நின்ற ப.சிதம்பரம்!

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
P. Chidambaram stood aside when Karthi Chidambaram thanked people

சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்றம் செல்வதற்கு முன்பே வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியாகச் சென்று அந்தந்தந்தப் பகுதி திமுக கூட்டணிக் கட்சி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்.

அதே போல, வெள்ளிக் கிழமை(14.6.2024) ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதனுடன் கிராமம் கிராமமாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே பேசிய அவர், “தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய நல்லாட்சிதான் காரணம். அதே போல என்னைத் தொடர்ந்து வேட்பாளராக அறிவித்த கட்சித் தலைமை, வெற்றி பெறச் செய்த வாக்காளர்கள், களப்பணியாற்றிய அமைச்சர் மெய்யநாதன், கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றிகள். மேலும் உங்களுக்கு தேவையான என்ன காரியமாக இருந்தாலும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ப.சிதம்பரம் வரவில்லையா...? என்று கேட்க, அதோ.. அங்கே நிற்கிறார் என்று கார்த்தி சிதம்பரம் கையைக் காட்டிய திசையில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் சாலையில் நின்று கொண்டிருந்தார். மகன் கார்த்தி சிதம்பரம் பிரச்சார வாகனமேறி நன்றி கூறிக் கொண்டிருக்கும் போது ப.சிதம்பரம் மக்களோடு மக்களாக சாலையில் நின்று பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார். சில இடங்களில் காரில் இருந்தே இறங்கவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தன் மகனுக்காக மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார். ஆனால் இன்று நன்றி சொல்ல வந்துவிட்டு நன்றி அறிவிப்பு பிரச்சார வாகனத்தில் ஏறாமல் ஒதுங்கி நிற்பது ஏன் என்ற கேள்ளி தொகுதி மக்களிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் எழுந்துள்ளது.

The website encountered an unexpected error. Please try again later.