Skip to main content

9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ‘கல்மூஞ்சி’

Published on 07/12/2018 | Edited on 07/12/2018
stone face

 

பாகுபலி திரைப்படத்தில் கதாநாயகன் பிபாஸ் கையில் கிடைக்கும் ‘மரமூஞ்சி’ மாதிரி, 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய ‘கல்மூஞ்சி’ மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்பு அருகே கிடைத்துள்ளது.

 

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் சர்ச்சைக்குரிய பகுதியாக கருதப்படுவது மேற்குக்கரை. இங்குள்ள ஹெப்ரான் என்ற இடத்தில் இஸ்ரேலிய குடியிருப்பு அருகே இந்த மரமூஞ்சி கிடைத்துள்ளது. வயல்களுக்கு ஊடாக சென்றபோது ஒரு மனிதர் கையில் இது கிடைத்ததாக தொல்லியல் நிபுணர் ரோனிட் லுபு கூறினார்.

 

இந்த கல்மூஞ்சியை கண்டுபிடித்தவர் அந்த இடத்தை தொல்லியல் துறையினரிடம் காட்டினார். விவசாயத்திற்காக நிலத்தை பயன்படுத்தியபோபோது இது வெளிக்கிளம்பியிருக்கலாம். அத்துடன் இந்த நிலத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் கிடைக்கலாம் என்று லுபு கூறினார். அதாவது, அந்த நிலத்தை தொல்லியல் துறை கையகப்படுத்தப் போவதை சூசகமாக தெரிவித்தார்.

 

இந்த கல்மூஞ்சியின் சிறிய வாயும், பற்களும், கன்னத்தில் மெல்லிய எலும்பு தெரியும் வகையில் நுணுக்கமாகவும் கச்சிதமாகவும் செதுக்கப்பட்டுள்ளது என்கிறார் லுபு.

 

முதலில் இந்த கல்மூஞ்சியை பார்த்த ராக்பெல்லர் மியூசியத்தை சேர்ந்தவர்கள் உற்சாகத்தில் கத்தினார்கள். இந்த கல்மூஞ்சி கிடைத்த இடத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் இருந்திருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

 

இதுவரை உலகம் முழுவதும் இதுபோன்ற 14 கல் முகங்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் இதுதான் மிகவும் பழமையானது என்கிறார்கள்.

 

இதுபோன்ற கல்லில் செதுக்கப்பட்ட முகங்களை புதிய கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் எப்படி பயன்படுத்தியிருப்பார்கள் என்பதை கணிக்க முடியவில்லை. ஒருவேளை வழிபாட்டு சமயத்தில் குறிப்பிட்ட சிலர் இந்த கல் முகமூடிகளை பயன்படுத்தி இருக்கலாம் என்று யூகிக்கிறார்கள்.

 

 

 

Next Story

இஸ்ரேலில் 9000 ஆண்டுகள் பழமையான முகமூடி...

Published on 29/11/2018 | Edited on 29/11/2018

 

mas

 

இஸ்ரேலின் ஹெப்ரோன் பகுதியில் கண்டறியப்பட்ட 9000 ஆண்டுகள் பழமையான முகமூடி மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கல்லால் செய்யப்பட்ட இந்த முகமூடி போல் உலகில் மொத்தம் 15 மட்டுமே உள்ளது. இது அந்த பகுதியிலிருந்து சில திருடர்களால் கண்டறியப்பட்டு, பின் இந்த ஆண்டு ஆரம்பத்தில் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9000 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட இதில் கண்ண எலும்புகள், மூக்கு ஆகியவை தத்ரூபமாக செய்யப்பட்டுள்ளது. இது  நியோலிதிக் யுகத்தில் செய்யப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

 

Next Story

கீரமங்கலத்தில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம். 5 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

Published on 23/03/2018 | Edited on 23/03/2018
cctv

  

 கீரமங்கலத்தில் ஒரே நாள் இரவில் 5 கடைகளில் பூட்டுகளை உடைத்து முகமூடி கொள்ளைகள் அட்டூழியம். குண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.


5 கடைகளில் திருட்டு :
    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் பகுதியில் மேற்பனைக்காடு சாலை அருகே உள்ள பேக்கரி, மளிகைகளை, பூச்சிமருந்துகடை, ஜவுளிக்கடை, ஆட்டோ மெக்காளிக் கடைகளின் அதிகாலை 3 மணிக்கு பிறகு வந்த கொள்ளைகள் பூட்டுகளை உடைத்து கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். காலை கடைகளை திறக்க வந்த போது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு நடந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே கீரமங்கலம் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 


முகமுடி கொள்ளையர்கள் :
    கீரமங்கலம் போலிசார் திருட்டு நடந்த கடைகளுக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது சில கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அந்த கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. அதில் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் அனைத்து கடைகளிலும் முகமூடி அணிந்த நபர்கள் பூட்டை உடைத்து திருடும் முன்பு கண்காணிப்பு கேமராக்களை வேறு பக்கமாக திருப்பி வைத்துவிட்டு கடைகளுக்குள் சென்றுள்ளனர். கடைகளுக்குள் சென்று வேறு எங்கும் தேடாமல் நேராக கல்லா இருக்கும் பகுதிக்கு சென்று கல்லைவை திறந்து அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும் போது கதவுகளை சாத்திவிட்டு செல்கின்றனர். ஆனால் பூச்சி மருந்து கடையில் மட்டுமே பணம் அதிகமாக இருந்துள்ளது மற்ற கடைகளில் பணம் குறைவாக இருற்துள்ளது.


சில்லரை எடுக்கவில்லை :
    ஒரு ஜவுளிக்கடையின் உள்ளே நுழைந்த முகமூடி திருடன் கல்லாவில் பணம் எடுத்துக் கொண்டு வெளியே செல்ல நடந்து சென்றவன் மீண்டும் கடைக்குள் சென்று கைலி ஒன்று எடுத்துக் கொண்டு மாற்றுத் திறனாளி போல நடித்துக் கொண்டு நடந்து சென்று கதவை சாத்தி விட்டு செல்கிறான். 


    மேலும் பேக்கரி, மளிகை கடைகளில் தாள்களாக இருந்த பணத்தை மட்டும் எடுத்தவர்கள் சில்லரை காசுகளை எடுக்கவில்லை. மேலும் வேறு எந்த பொருளையும் உடைக்கவில்லை. இந்த பதிவுகளை பார்த்த கீரமங்கலம் போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். கீரமங்கலத்தில் ஒரே நேரத்தில் 5 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.