Advertisment

ஸ்டெர்லைட் தந்த புற்றுநோய் : ஒரே கிராமத்தில் 28 பேர் பலி! நக்கீரன் எக்ஸ்க்ளூசிவ் (படங்களுடன்)

கால்நடைகள் இறப்பு, விவசாயம் பாதிப்பு, மக்களுக்கு புற்று நோய் என எண்ணற்ற பாதிப்புக்களை தந்த தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட்டிற்கு எதிராக தூத்துக்குடி மட்டுமல்லாது உலகம் முழுவதும், "வேண்டாம் நச்சு ஆலை" என்று குரல்கள் ஓங்கி ஒலித்த வண்ணமிருக்க, "ஸ்டெர்லைட்டால் யாருக்கும் பாதிப்பில்லை. அதனால் கேன்சரும் இல்லை. அது போல், 2017ம் ஆண்டிற்குரிய மனித வள மேம்பாட்டிற்குரிய புள்ளி விபர அடிப்படையின் கீழ் புற்று நோய் அதிகம் பாதித்துள்ள முதல் 6 மாவட்டங்களில் தூத்துக்குடி இல்லை " என தங்களுக்கு ஆதரவான பத்திரிகை மற்றும் மீடியாக்களைக் கொண்டு விஷமத்தனமாக எதிர்மறைப் பிரச்சாரத்தில் இயங்கியது ஸ்டெர்லைட் ஆலை. அதே வேளையில் தூத்துக்குடியிலுள்ள அத்திமரப்பட்டியில் மட்டும் ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுப்புகை மற்றும் கழிவுகளால் கடந்த 16 ஆண்டுகளில் 28 நபர்கள் புற்று நோயால் மரணமடைந்துள்ளதாக தற்பொழுது கள ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. இதில், கடந்த ஓராண்டில் மட்டும் 8 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில், 4 பேர் இறந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Advertisment

ster

ster

1.ரகுபதி2.துரைப்பாண்டியன் 3. ராஜபாண்டியன்4. செல்வபாப்பா5. சங்கரலிங்கம்6. ஜெபராஜ்7. சின்ன கோட்டமுத்து8.செந்தூர்பாண்டி 9. முத்துச்செல்வி 10.பொன் செல்வி11. சசிகலா12. பொன்னையா13. பத்திரபாண்டி14.வேல்மயில் 15. பட்டரைச்செல்வி16. காசியம்மாள்17. பெரியசாமி18. தங்கராஜ்19. கணேசன்20. பத்திரகாளி21. பாண்டி22. விழுக்கன் (என்ற) மாடன் 23. கருப்பன்24. உமா மகேஸ்லரி25. திருமணி26. சக்திவேல்27. சொக்கன் 28. ராமர் என கடந்த 16 ஆண்டுகளில் புற்றுநோய் தாக்கி இறந்தவர்களின் பட்டியல் இது என்கின்றார் அவ்வூரைசேர்ந்த காந்திய சேவா மன்ற நிறுவனரும், தூத்துக்குடி ஒன்றிய முன்னாள் கவுன்சிலருமான என்.வி. ராஜேந்திரபூபதி.

Advertisment

இதற்கு அரசு என்ன பதிலைக் கூறப்போகின்றது என்பது கேள்விக்குறியே!

Tuticorin sterlite protest Sterlite
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe