Advertisment

சர்தார்ஜிகள் சூழ் டெல்லி! என்ன நடக்கிறது தலைநகரில்..?

delhi chalo

'டெல்லி சலோ' என்கிற விவசாயிகளின் போராட்டமானது இன்றுடன் ஐந்தாவது நாளைஎட்டியுள்ளது. பஞ்சாபிலிருந்து சிறு சிறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த விவாசாயிகளுடன் டெல்லியை நோக்கிய தங்களின் டிராக்டர், பைக், லாரிகளில்பேரணியைத் தொடங்கியவர்களை ஹரியானா எல்லைப் பகுதியில் நிறுத்திய போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்த தடியடி போன்ற வன்முறைகளைக் கையாண்டனர். பொதுவாகவே பலசாலிகள், எதற்கும் துணிந்தவர்கள் என்று சொல்லப்படும் சர்தார்ஜிகளோ, தடைகளையும், இரும்பு வேலிகளையும் உடைத்தெறிந்து டெல்லி எல்லையில் கால்பதித்தனர்.விவசாயிகள் அதிகமானோர் டெல்லியில் கூடுவார்கள் என்று அஞ்சிய மத்திய அரசாங்கமோடெல்லிக்கு வர இருந்த ரயில்களை அப்படியே பாதிவழியில் நிறுத்தியது. சில ரயில்களை ரத்து செய்தும் விட்டது. இருந்தபோதிலும் டெல்லிக்குள் நுழைய இருக்கும் சாலை எல்லையைப் பயன்படுத்தி விவசாயிகள் படையெடுத்து வந்து குவிகின்றனர்.

Advertisment

ஹரியானா, ராஜஸ்தான், உ.பி-யிலிருந்து விவசாயிகள் அணிதிரண்டு வந்திருந்தாலும் பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள்தான் அதிகமாக இதில் கலந்துகொண்டுள்ளனர். இரண்டாம் நாள், ஹரியானா வழியாக டெல்லியை அடைந்த விவசாயிகளை தண்ணீர் பீய்ச்சியும், கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியும், லத்தி ஆகிய ஆயுதங்களுடனும்போலீஸ், இராணுவ வீரர்கள் வரவேற்றனர். எங்கு பார்த்தாலும் தடைக்கற்கள், இரும்பு முள் வேலிகளை வைத்து எல்லைப் பகுதிகளை அடைத்திருந்தனர். ஆனால், கூட்டம் கூட்டமாக வந்த விவசாயிகளோ, போலீஸிடம் மல்லுக்கட்டி, தடைக்குப் பயன்படுத்திய வேலிகளை மீறிஉள்ளே சென்றுகொண்டே இருந்தனர். இதனால், டெல்லி முழுவதும் பதற்றச் சூழலாகவே இதுவரை இருக்கிறது.

Advertisment

டெல்லியைச்சுற்றி, நெடுஞ்சாலைகளில் தேனி கூட்டத்தைப் போல விவசாயிகள் கொத்துக் கொத்தாக நிற்கின்றனர். ஒரு பக்கம் சிவப்புக் கொடிகள் பிடித்துக் கூட்டம் இருக்கிறது. மற்றொரு பக்கம் பச்சை, வேறொரு பக்கம் மஞ்சள் என்று கலர்கலராகக் கொடிகள் அசைந்த வண்ணம் காட்சியளிக்கிறது இந்தியத் தலைநகரின் எல்லை. அதேபோல பெரும்பாலும் சர்தார்ஜிகள் இந்த விவசாயப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பல நிறங்களில் டர்பன்கள் உலாவுவதைப் பார்க்கும்போது புரிகிறது. சீக்கியர்கள் அதிகம் கலந்துகொண்டிருப்பதால், சில வலதுசாரி அமைப்புகள் தங்கள் பங்குக்கு "டெல்லியைச் சுற்றி காளிஸ்தான் ஆதரவு பெற்றவர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர், இதனால் ஆபத்து அதிகம்"என்று சமூக வலைதளங்களில் பதிவுகளைப் பறக்கவிடத் தொடங்கிவிட்டனர்.

ஏற்கனவே டெல்லி மக்கள் நச்சுப் புகை, டிராஃபிக், கரோனா என்று புலம்பிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகளின் இந்த வலுவான போராட்டத்தால் டெல்லிவாழ் மக்களின்அன்றாட வாழ்க்கைபெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மக்கள் அவர்கள் பக்கம் உள்ள நியாத்தைச் சொல்லி புலம்பி வருகின்றனர். இந்தப் பக்கம் விவசாயிகள் தங்களின் பக்கம் நியாயத்தைக் கூறிபேரணியாகத் திரண்டு வருகின்றனர். அதனால் இதற்கு விரைவில் டெல்லியில் இருக்கும் பிரதமர் அலுவலகம்தான் எட்டிப் பார்த்து நியாயம் தரவேண்டும். வழக்கமான விவசாயிகளின் போராட்டம் போல இருந்துவிடும், எதாவது ஒரு அதிகாரியை அனுப்பி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை முடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டவர்களை ஏமாற்றும் வகையில், விவசாயிகள்கூட்டம் கூட்டமாக வருவது மட்டுமல்லாமல் டெல்லியில் முகாமிட்டுப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுக் கிளம்பியுள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான சமையல் பொருட்கள், கோதுமை மாவு, விறகு, போர்வை, உடை என்று முழு திட்டத்துடன் வந்து இறங்கியுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள விவசாயிகளில் பெரும்பாலானோர் 'புராரி' மைதானத்தில் முகாமிட்டுள்ளனர். அங்குதான் சமைத்து உண்டு, உறங்கி, தங்களின் கோஷங்களைக் கர்ஜித்து வருகின்றனர்.

cnc

‘தர்தி மாதா கி ஜெய்’ போன்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர். ‘ஹம் ஹோங்கே காம்யாப்’ போன்ற தேசப்பற்றுபாடல்களையும் ஒலிக்கவிடுகின்றனர். சில முதிய விவசாயிகள் இளைஞர்களுக்காக சப்பாத்தி மாவைப் பிசைந்து உருட்டி, தீயில் வாட்டி, காய்கறிகளை நருக்கி சமைத்துக் கொடுக்க,அருகிலேயே தார்ப்பாயை விரித்து, இரண்டு வரிசைகளாக அமர்ந்து உணவைச் சாப்பிட, அங்கு ஒரு லங்காரையே அமைத்துவிட்டனர் சர்தார்ஜிக்கள்.மத்திய அரசு எவ்வளவு காலம் வேண்டுமானாலும்காத்திருக்க வைக்கலாம் என்கிற எண்ணம் இருந்ததாலோ என்னவோ, இப்படி எல்லாத்திற்கும் ரெடியாக வந்திருக்கிறார்கள் விவசாயிகள்.

இதற்குப் பின்னால் விவசாயிகள் இல்லை, பின்னணியில் அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள் என்றும் ஒருபக்கம் இந்தப் போராட்டத்தை விமர்சிக்கிறார்கள். எனினும், கொத்தாக இருக்கும் விவசாயிகள் கூட்டத்தில் ஒரு பகுதி, ‘சாஹே குச் பி கர்லோ ஹும் பதே ஜாயேங்கே’ என்று ஒருசேர ஒருமனதாகக் குரலெழுப்புகின்றனர். அதாவது 'என்ன தடை வந்தாலும், நாங்கள்வளர்வோம்'என்பது பொருளாகும். மற்றொரு பக்கம் வழக்கமான தைரியத்துடன்‘இன்குலாப் ஜிந்தாபாத்’ எனக் குரலெழுப்பும் சர்தார்ஜிகள். இப்படி லட்சக்கணக்கான விவசாயிகளின் கோஷங்களுக்கு மத்தியில் டெல்லி ஆம் ஆத்மீ அரசின் விருந்தோம்பலும், கரோனா விழிப்புணர்வும் போராட்டக் களத்தினூடே சுற்றிவர, சர்தார்கள்சூழ் நிலமாக மாறியுள்ளது டெல்லி.

Delhi Narendra Modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe