Skip to main content

சர்தார்ஜிகள் சூழ் டெல்லி! என்ன நடக்கிறது தலைநகரில்..?

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

delhi chalo

 

'டெல்லி சலோ' என்கிற விவசாயிகளின் போராட்டமானது இன்றுடன் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. பஞ்சாபிலிருந்து சிறு சிறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த விவாசாயிகளுடன் டெல்லியை நோக்கிய தங்களின் டிராக்டர், பைக், லாரிகளில் பேரணியைத் தொடங்கியவர்களை ஹரியானா எல்லைப் பகுதியில் நிறுத்திய போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்த தடியடி போன்ற வன்முறைகளைக் கையாண்டனர். பொதுவாகவே பலசாலிகள், எதற்கும் துணிந்தவர்கள் என்று சொல்லப்படும் சர்தார்ஜிகளோ, தடைகளையும், இரும்பு வேலிகளையும் உடைத்தெறிந்து டெல்லி எல்லையில் கால்பதித்தனர். விவசாயிகள் அதிகமானோர் டெல்லியில் கூடுவார்கள் என்று அஞ்சிய மத்திய அரசாங்கமோ டெல்லிக்கு வர இருந்த ரயில்களை அப்படியே பாதிவழியில் நிறுத்தியது. சில ரயில்களை ரத்து செய்தும் விட்டது. இருந்தபோதிலும் டெல்லிக்குள் நுழைய இருக்கும் சாலை எல்லையைப் பயன்படுத்தி விவசாயிகள் படையெடுத்து வந்து குவிகின்றனர்.

 

ஹரியானா, ராஜஸ்தான், உ.பி-யிலிருந்து விவசாயிகள் அணிதிரண்டு வந்திருந்தாலும் பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள்தான் அதிகமாக இதில் கலந்துகொண்டுள்ளனர். இரண்டாம் நாள், ஹரியானா வழியாக டெல்லியை அடைந்த விவசாயிகளை தண்ணீர் பீய்ச்சியும், கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியும், லத்தி ஆகிய ஆயுதங்களுடனும் போலீஸ், இராணுவ வீரர்கள் வரவேற்றனர். எங்கு பார்த்தாலும் தடைக்கற்கள், இரும்பு முள் வேலிகளை வைத்து எல்லைப் பகுதிகளை அடைத்திருந்தனர். ஆனால், கூட்டம் கூட்டமாக வந்த விவசாயிகளோ, போலீஸிடம் மல்லுக்கட்டி, தடைக்குப் பயன்படுத்திய வேலிகளை மீறி உள்ளே சென்றுகொண்டே இருந்தனர். இதனால், டெல்லி முழுவதும் பதற்றச் சூழலாகவே இதுவரை இருக்கிறது. 

 

டெல்லியைச் சுற்றி, நெடுஞ்சாலைகளில் தேனி கூட்டத்தைப் போல விவசாயிகள் கொத்துக் கொத்தாக நிற்கின்றனர். ஒரு பக்கம் சிவப்புக் கொடிகள் பிடித்துக் கூட்டம் இருக்கிறது. மற்றொரு பக்கம் பச்சை, வேறொரு பக்கம் மஞ்சள் என்று கலர்கலராகக் கொடிகள் அசைந்த வண்ணம் காட்சியளிக்கிறது இந்தியத் தலைநகரின் எல்லை. அதேபோல பெரும்பாலும் சர்தார்ஜிகள் இந்த விவசாயப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பல நிறங்களில் டர்பன்கள் உலாவுவதைப் பார்க்கும்போது புரிகிறது. சீக்கியர்கள் அதிகம் கலந்துகொண்டிருப்பதால், சில வலதுசாரி அமைப்புகள் தங்கள் பங்குக்கு "டெல்லியைச் சுற்றி காளிஸ்தான் ஆதரவு பெற்றவர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர், இதனால் ஆபத்து அதிகம்" என்று சமூக வலைதளங்களில் பதிவுகளைப் பறக்கவிடத் தொடங்கிவிட்டனர்.  

 

ஏற்கனவே டெல்லி மக்கள் நச்சுப் புகை, டிராஃபிக், கரோனா என்று புலம்பிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகளின் இந்த வலுவான போராட்டத்தால் டெல்லிவாழ் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மக்கள் அவர்கள் பக்கம் உள்ள நியாத்தைச் சொல்லி புலம்பி வருகின்றனர். இந்தப் பக்கம் விவசாயிகள் தங்களின் பக்கம் நியாயத்தைக் கூறி பேரணியாகத் திரண்டு வருகின்றனர். அதனால் இதற்கு விரைவில் டெல்லியில் இருக்கும் பிரதமர் அலுவலகம்தான் எட்டிப் பார்த்து நியாயம் தரவேண்டும். வழக்கமான விவசாயிகளின் போராட்டம் போல இருந்துவிடும், எதாவது ஒரு அதிகாரியை அனுப்பி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை முடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டவர்களை ஏமாற்றும் வகையில், விவசாயிகள் கூட்டம் கூட்டமாக வருவது மட்டுமல்லாமல் டெல்லியில் முகாமிட்டுப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுக் கிளம்பியுள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான சமையல் பொருட்கள், கோதுமை மாவு, விறகு, போர்வை, உடை என்று முழு திட்டத்துடன் வந்து இறங்கியுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள விவசாயிகளில் பெரும்பாலானோர் 'புராரி' மைதானத்தில் முகாமிட்டுள்ளனர். அங்குதான் சமைத்து உண்டு, உறங்கி, தங்களின் கோஷங்களைக் கர்ஜித்து வருகின்றனர். 

 

cnc

 

‘தர்தி மாதா கி ஜெய்’ போன்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர். ‘ஹம் ஹோங்கே காம்யாப்’ போன்ற தேசப்பற்று பாடல்களையும் ஒலிக்கவிடுகின்றனர். சில முதிய விவசாயிகள் இளைஞர்களுக்காக சப்பாத்தி மாவைப் பிசைந்து உருட்டி, தீயில் வாட்டி, காய்கறிகளை நருக்கி சமைத்துக் கொடுக்க, அருகிலேயே தார்ப்பாயை விரித்து, இரண்டு வரிசைகளாக அமர்ந்து உணவைச் சாப்பிட, அங்கு ஒரு லங்காரையே அமைத்துவிட்டனர் சர்தார்ஜிக்கள். மத்திய அரசு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருக்க வைக்கலாம் என்கிற எண்ணம் இருந்ததாலோ என்னவோ, இப்படி எல்லாத்திற்கும் ரெடியாக வந்திருக்கிறார்கள் விவசாயிகள். 

 

இதற்குப் பின்னால் விவசாயிகள் இல்லை, பின்னணியில் அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள் என்றும் ஒருபக்கம் இந்தப் போராட்டத்தை விமர்சிக்கிறார்கள். எனினும், கொத்தாக இருக்கும் விவசாயிகள் கூட்டத்தில் ஒரு பகுதி, ‘சாஹே குச் பி கர்லோ ஹும் பதே ஜாயேங்கே’ என்று ஒருசேர ஒருமனதாகக் குரலெழுப்புகின்றனர். அதாவது 'என்ன தடை வந்தாலும், நாங்கள் வளர்வோம்' என்பது பொருளாகும். மற்றொரு பக்கம் வழக்கமான தைரியத்துடன் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ எனக் குரலெழுப்பும் சர்தார்ஜிகள். இப்படி லட்சக்கணக்கான விவசாயிகளின் கோஷங்களுக்கு மத்தியில் டெல்லி ஆம் ஆத்மீ அரசின் விருந்தோம்பலும், கரோனா விழிப்புணர்வும் போராட்டக் களத்தினூடே சுற்றிவர, சர்தார்கள் சூழ் நிலமாக மாறியுள்ளது டெல்லி.  

 

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.