sonia

கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. பெரும்பான்மைக்கு தேவையானதொகுதிகளை எந்த கட்சியும் கைப்பற்றவில்லை. அதிகபட்சமாக பாஜக 84 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 54 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 22 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

Advertisment

இதனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியாகாந்தியிடம் ஆலோசனை மேற்கொண்டனர். அந்த ஆலோசனையில் மஜகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார்கள். அதனை சோனியா காந்தி மூலமாகவே மஜத கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, அக்கட்சியின் மாநிலத் தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான குமாரசாமியிடம் காங்கிரஸ் தலைவர்கள் பேச வைத்தனர்.

Advertisment

இருவரும் உடனே சம்மதம் தெரிவித்தார்கள். இந்த அறிவிப்பு மீடியாக்களிடம் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோர் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது.

தற்போது முதல்வர் பதவியை மஜதவுக்கும், துணை முதல்வர் பதவி காங்கிரசுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். 20 மந்திரி பதவி காங்கிரசுக்கும், 16 மஜத கட்சிக்கும் பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலையும் கூட்டணி அமைத்து சந்திக்க உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment