Advertisment

மகனா? மச்சானா? -திமுக , தேமுதிக கள நிலவரம் !  

"பொன்முடி மகனுக்கு சீட் கொடுத்தால் தேர்தல் வேலை பார்க்கமாட்டோம்' -என வேட்பாளர் அறிவிப்புக்கு முன் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் தி.மு.க. ஒ.செ.க்கள் பத்து பேர், கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதி பகிரூட்டினார்கள். "சரி... அவருக்குப் பதிலா யாரை வேட் பாளரா போடலாம்' என தலைமை ஆலோசித்தபோது, நினைவுக்கு வந்தவர் மவுண்ட் பார்க் பள்ளி முதலாளியான மணிமாறன். இந்த மணிமாறன் 2014- தேர்தலில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்தவர். ஆனால் இப்போதோ அவரின் நிதி நிலைமை சரியில்லை. விழுப்புரம் மாவட்டத்திற்குள் வரும் மூன்று தொகுதிகளில் மட்டும் ஓரளவு செலவு பண்ணமுடியும். முதல்வர் எடப்பாடியின் சேலம் மாவட்டத்திற்குள் வரும் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு தொகுதிகளில் செலவு பண்ணுவது ரொம்ப கஷ்டம் என்பதால் மணிமாறன் பின்வாங்கிவிட்டார்.

Advertisment

gowthama sigamani

"சரி, இதுக்கு மேல யாரய்யா தேடுறது' என ஒ.செ.க்களிடம் தலைமை கேட்ட போது... பத்துபேரும் சொன்ன பேர் ஐ.ஜே.க. தலைவர் பாரிவேந்தர். இங்கதான் ஒரு சூட்சுமமே இருக்கு. பாரிவேந்தர் முதலில் குறி வைத்தது கள்ளக்குறிச்சி தொகுதியைத்தான். அதனால்தான் பொன்முடி மகனுக்கு எதிராக தி.மு.க. ஒ.செ.க்களே பீதி கிளப்பினார்கள். இதையெல்லாம் ஸ்மெல் பண்ணிய தி.மு.க. தலைமை, "நம்ம கட்சியிலிருந்து யாரையாவது சொல்லுங்கன்னா, வேற கட்சி ஆளை ரெகமெண்ட் பண்றீங்க' என ஸ்டாலின் கடுமை காட்டியதும் கப்சிப்பாகிவிட்டனர்.

Advertisment

sudhish

பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதியை உறுதி செய்துவிட்டு, கனிமொழி மூலமாக சீட்டுக்கு காய் நகர்த்திய வக்கீல் செல்வநாயகத்தை சரிப்படுத்திவிட்டு, பொன்முடி மகன் கௌதம சிகாமணியை கள்ளக்குறிச்சி வேட்பாளராக அறிவித்தார் ஸ்டாலின். சிகாமணியை அறிவிப்பதற்கு முன்னால் இருந்த எதிர்ப்பு கோஷத்தையெல்லாம் கப்சிப்பாக்கிவிட்டார் பொன்முடி. தங்கு தடையின்றி பணம் பாயும் என்பதால் உ.பி.க்கள் மத்தியில் உற்சாகம்.

ponmudi

"அ.தி.மு.க.வில் பணத்துக்கு பஞ்சமில்லாத சேலத்தைச் சேர்ந்த பாசறை இளங்கோவனோ, விழுப்புரம் மா.செ. குமரகுருவின் மகன் நமச்சிவாயமோ களம் இறங்கினால், இப்போதைக்கு நமது கஷ்டம் தீரும்' என்ற நம்பிக்கையில் ஆளும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர். ஆனால் பிரேமலதாவோ தனது தம்பி சுதீஷுக்காக கள்ளக்குறிச்சியை விட்டுக் கொடுக்காமல் வாங்கிவிட்டார். இதனால் டென்ஷனில் இருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் வேலைகளில் படுஸ்பீடாக இறங்கியுள்ளார் சுதீஷ்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

2009-ல் இதே கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டு, கணிசமான ஓட்டுகளை வாங்கியிருப்பதாலும் இந்த முறை அ.தி.மு.க. ஓட்டுக்கள் போனசாக கிடைப்பதால், தனது தம்பி ஈஸியாக ஜெயித்துவிடலாம் என்ற கணக்குடனும் இருக்கிறார் பிரேமலதா. தனது மச்சானை கரையேற்றுவதற்காக மாவட்ட நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்து பேசியுள்ளார் தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்த்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மகனின் வெற்றிக்காக பொன்முடியும் மச்சானின் வெற்றிக்காக விஜயகாந்தும் வரிந்து கட்டுகிறார்கள்.

admk kallakurichi L. K. Sudhish Ponmudi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe