Skip to main content

தனிமை இத்தனை அழகா? போதையேற்றும் குறும்படம் 

Published on 16/09/2018 | Edited on 21/09/2018

இணையம் வந்ததிலிருந்து ஊடகங்கள் மக்களுக்கு நெருக்கமாக, ஏன் கிட்டத்தட்ட மக்களின் கைகளுக்கே வந்துவிட்டன. தனி நபரின் திறமையை வெளிப்படுத்த பல புதிய தளங்கள் வந்துவிட்டன. எங்கோ கேரளாவின் மூலையில் ஒரு எளிய தொழிலாளி பாடும் 'விஸ்வரூபம்' பாடல் கமல்ஹாசன் வரை சென்று, அவரை அழைத்து கௌரவப்படுத்துகிறார். திருப்பூரின் ஒரு எளிய வீட்டின் குழந்தை சொல்லும் 'தப்பு பண்ணுனா அடிக்காம திட்டாம குணமா சொல்லணும்' தமிழகம் முழுவதும் வைரல் ஆகிறது. இப்படி மக்கள் சினிமா என்னும் மாபெரும் திரையைத் தாண்டி பல புதிய திரைகளையும் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
 

isolation 1

 

isolation 2

 

isolation 3

 

isolation 4

 

isolation 5

 

isolation 6



சமீபத்தில் வெளியான ஒரு குறும்படம் (குறும் குறும்படமென்றே சொல்லலாம்) இணையத்தை வலம் வருகிறது. ஒரு இளைஞனின் தனிமையை எந்த கூடுதல் சொல்லும் இல்லாமல் படமாக்கியிருக்கும் அந்தக் குறும்படத்தின் ஹைலைட் அதன் அழகிய ஃப்ரேம்கள்தான். ஒவ்வொரு காட்சியையும் பிரிண்ட் செய்து ஃப்ரேம் போட்டு மாட்டலாம், அத்தனை அழகு. அறையில் தனியே வாழும் அவனது மாலை அவனை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியிலிருந்து தொடங்குகிறது. அந்தத் தனிமை மெல்ல விரிந்து ஒரு தெரு, ஒரு நிலப்பரப்பு, பின் இந்த உலகம் என பெரிய உலகில் ஒரு மனிதன் எவ்வளவு சிறியவன் என்பதை விவரிப்பது போல இருக்கிறது அந்த குறும்படம். பார்க்கும் ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் வைத்துக்கொள்ளலாம், ஒவ்வொரு ரசிகரிடமும் ஒவ்வொரு மாதிரி பேசும் தன்மை கொண்டவை ஓவியங்கள். அப்படி ஒரு தொடரோவியமாய் நீள்கிறது 'ஐசோலேஷன்' (isolation) குறும்படம். பின்னணியில் 'எ சூஃபி அண்ட் எ கில்லர்' (a  sufi and a killer) என்ற ஆல்பத்திலிருந்து ஒரு பாடல் ஒலிக்கிறது. இளையராஜாவின் 70கள் இசையின் சாயல், அதில் ஆங்கில குரல் கலந்து ஒரு சரியான காக்டெயிலாக போதை ஏற்றுகிறது அந்தக் குறும்படம். கதை, வசனம், பாடல்களுடன் திரைப்படங்களை மட்டுமே  உச்சபச்ச காட்சி படைப்புகளாக அதிகம் பார்த்துப் பழகிய நமக்கு, இந்த குறும்படம் தருவது காட்சியில் புது அனுபவம்.



இதை படமாக்கிய ஆகாஷ் பிரகாஷ் யாரென்று விசாரித்தோம். 'அவள்' படத்தில் உதவி ஒளிப்பதிவாளராம். சித்தார்த் நடித்த 'அவள்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் நண்பராம் ஆகாஷ். 'அவள்' படம் அதன் ஒளிப்பதிவுக்காக பெரிதும் பேசப்பட்டது. இது பார்ட் 1. இன்னும் அடுத்த பகுதிகள் எடுத்தால் நன்றாக இருக்கும். பார்த்தவர்கள் வெயிட்டிங். மீண்டும் பார்க்கும்போது மனதில் தோன்றுவது 'தனிமை இத்தனை அழகா...' என்பதே.                

                  

 

 

Next Story

ஃப்ரீலான்ஸ் போட்டோகிராஃபர் கொலை; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Freelance photographer incident; Shocked by the police investigation

வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சிக்கு போட்டோ எடுக்க வேண்டும் என போட்டோகிராபரை ஆர்டர் செய்த இளைஞர்கள், போட்டோ எடுக்க வந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்து அவரிடமிருந்து கேமரா உள்ளிட்ட உபகரணங்களை திருடிச் சென்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய்குமார் (23). புகைப்படக் கலைஞராக இருக்கும் சாய்குமார் திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு போட்டோகிராபி செய்து கொடுக்கும் ஃப்ரீலான்சராக பணியாற்றி வந்தார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தான் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றி வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தார்.

Freelance photographer incident; Shocked by the police investigation

இந்தநிலையில், சாய்குமாரை தொடர்பு கொண்ட இளைஞர்கள் சிலர் தங்கள் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிக்கு போட்டோ எடுத்து தர வேண்டும் என அழைத்துள்ளனர். கோணசீமா மாவட்டம் ரவுலாபாலம் பகுதியில் நிகழ்ச்சி நடைபெறுவதாக சாய்குமாரிடம் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி சாய்குமார் விலையுயர்ந்த கேமரா, புகைப்பட உபகரணங்களை எடுத்துக்கொண்டு அந்த ஊருக்கு சென்றுள்ளார். ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் சாய்குமார் வீடு திரும்பாததால் சாய்குமார் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சாய்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து விலையுயர்ந்த கேமராக்களை பறித்த கும்பல் அவரை மணல் பரப்பில் கொலை செய்து புதைத்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தேசிய அளவில் விருது பெற்ற குறும்படம்; படக்குழுவினருக்கு முன்னாள் நீதிபதி வாழ்த்து

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

atcham thavir short film won national level former judge wishes

 

டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான குறும்பட போட்டியில் தமிழகத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட அச்சம் தவிர் குறும்படம் தேசிய அளவில் 3 ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்து படத்திற்கான பல்வேறு உதவிகள் செய்து பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி உதவிய அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் குறும்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், அமைப்பின் கெளரவ தலைவருமான நீதியரசர் எம். கற்பகவிநாயகம் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

 

மேலும் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவருமான ஆர். கே. குமார், பொதுச் செயலாளர் முனைவர் வி. எச்.சுப்ரமணியம் உள்ளிட்டோரும் அச்சம் தவிர் பட குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் இப்படம் உருவாக காரணமாக இருந்த அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர்.கே. குமார் மற்றும் பொதுச் செயலாளர் முனைவர் வி. எச். சுப்பிரமணியத்தையும் பட குழுவினர் கோவை மாவட்டம் கணபதியில் உள்ள  தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆதரவுக்கு பட குழுவின் சார்பில் நன்றியும் , வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து அச்சம் தவிர் குறும் படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் அமைப்பின் சார்பில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த 10ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர் அனுராஜ்க்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் அச்சம் தவிர் படத்தின் இயக்குநர் குமார் தங்கவேல், இணை இயக்குநரும் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், மாற்றம் அமைப்பின் நிர்வாகியும், நடிகருமான ஆர்.ஏ.தாமஸ், படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர் அங்கமுத்து, நடிகர் அசோக், குமார், ஹரிஹரசுதன் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் துணைத்தலைவர் நாராயண செல்வராஜ் உறுப்பினர் அப்பு ஜெயபிரகாஷ் உதவி தொகை பெற்ற மாணவர் அனுராஜ் அவரது பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.