Skip to main content

அப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய! -தமிழ் ட்ரெண்டில் மலையாள பெண்கள்

Published on 13/02/2018 | Edited on 14/02/2018

தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் அரசியல் உறவு அவ்வப்போது மாறும், ஆனால் அழகியல் உறவு எப்போதும் ஆரோக்கியமாகத்தான் இருக்கும்.  ஆட்டோகிராஃப் கோபிகாவில் இருந்து, அசின், பாவனா, தமிழக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரைக்கும் தமிழ்நாட்டுப் பசங்க மனச கொள்ளை அடிச்சிக்கிட்டுதான் இருக்கின்றனர். இந்த லிஸ்ட்ல இப்போ புதுசா ஒரு மலையாள பெண் இடம் பிடிச்சுருக்காங்க. பிரியா பிரகாஷ் வாரியர், 'மாணிக்ய மலராய பூவே' என்னும் பாடலில் வரும் இவரது கண்ணின் அசைவுகளுக்கு விழுந்துவிட்டனர்.  ஷெரில் என்னும் மலையாள பெண் ஆடிய 'ஜிம்மிக்கி கம்மல்' பாட்டு தமிழ் பசங்க மத்தியில்தான் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் பிரியா வாரியர் நடித்த இந்தப் பாடல் இந்தியா முழுவதும் ஹிட். பாடல் என்று கூட சொல்லமுடியாது, அவர் செய்யும் நளினமான கண் அசைவு 28 நொடிதான் இருக்கும், அதையே வைரல் ஆக்கிவிட்டனர் ரசிகர்கள். 
 

oviya


அப்படி என்ன அந்த ரியாக்சன் கொடுத்தாங்க அந்த பொண்ணு என்றும் கேட்கின்றனர் சிலர். பள்ளிப் பருவத்துல எல்லோருக்கும் இருக்கும் ஆசையைத்தான் இந்தப் பாடலில் பிரியா வாரியர் பிரதிபளிச்சிருக்காங்க. ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பார்த்தால் அந்தப் பெண் தன்னைத் திரும்பிப் பார்க்கவேண்டுமென்று ஆசைப்படுவார். அதுதான் இந்த பாடலில் நடந்திருக்கு. அதுவுமில்லாமல் பிரியாவின் கண் அழகா இருக்கிறது, கண்ணில் ஒரு நடனம் என்றே சொல்லலாம். 
 

priya varrier recation


பதினெட்டு வயதேயாகும் பிரியா பிரகாஷ் வாரியர், திருச்சூர் விமலா கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அவர் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது தற்போது வைரலாக இருக்கும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப்  பாடல் இடம் பெற்றது 'ஒரு ஆதார் லவ்' என்னும் மலையாள படமாகும். கடந்த வருடம் ஷெரில் என்ற கல்லூரி ஆசிரியை வைரலானார். ஆனால், அதைவிட  பிரியா வாரியர் பெரிதாக வைரலாகிவிட்டார். இன்ஸ்டாகிராமில் இவரை ஒரே நாளில் 6 லட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர். இன்ஸ்டாவில் ஒரே நாளில் அதிகம் பின்தொடரப்பட்ட பிரபலங்களில் பிரியாவுக்கு மூன்றாம் இடமாம். இரண்டவது இடம் கிரிஸ்டியானோ ரொனால்டோ என்கின்றனர் . இது எத்தனை உண்மை என தெரியவில்லை ஆனால் இந்த கொண்டாட்டங்கள் நிஜம்தான். தற்போது அந்தப் பாடல் 4 மில்லியனுக்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர். ஆங்கிலம் முதல் ஹிந்தி, தமிழ், மலையாளம் என்று அனைத்து மீம் பக்கங்களிலும் 75% ஆஹா..ஓஹோ என்று பாராட்டிவருகிறார்கள். இருந்தாலும் 25% மீம் பக்கங்கள் பிரியாவை கலாய்த்தே மீம் போடுகின்றனர். 'ஐ சப்போர்ட் பிரியா' என்று  ஹேஷ்டேக் கூட  வலம் வருகிறதாம். 

இன்னும்  சிலர், இவங்களுக்கெல்லாம் கேரளா என்றாலே பிடிக்கிறது. முதலமைச்சர்ல கூட இவங்கெல்லாம் பினராயி விஜயனைத்தான் பாராட்டுறாங்க, அதேபோலத்தான் நம்ப ஊர் பொண்ணுங்கள பேமஸ் ஆக்காம பக்கத்து ஊர் பொண்ணுலாம் ஆக்குறாங்க. யூ ஆர் அன் ஆன்டி இந்தியன் என்று கூறுகிறார்கள். இப்படி சொல்பவர்கள் எல்லாம் யாராக இருப்பார்கள் ? ஓவியா ஆர்மி  இருக்கும்போது 'என் தானை தலைவி' என்று கரகோஷம் எழுப்பியவர்கள்தானே?  தமிழ்நாட்டு அழகிளம் பெண்களோ, 'திரும்பி ஆரம்பிச்சிட்டீங்களா நீங்களே அந்த பொண்ண வளத்துவிடுங்க, அவ்ளோ சீன் இல்ல, ஏன் தான் எல்லாம் இப்படி இருக்கீங்களோ' என்றெல்லாம் பதிவில் பொங்குகின்றனர். சிலர் பிரியா வாரியர் என்ன மஞ்சு வாரியர் பொண்ணா என்கின்றனர். பிரியா வாரியர் ' நீ வானம் நான் மழை' என்று ஒரு தமிழ் ஆல்பத்தில் நடித்திருக்கிறார். சோ, அந்தப் பெண் தமிழில் தன் நடிப்பை எப்போதோ ஆரம்பித்துவிட்டார் என்பது ஒரு சிறப்பு செய்தி.    

Next Story

இணையத்தில் வைரலாகும் வாட்டர் சேலஞ்ச் வீடியோ!

Published on 17/02/2020 | Edited on 18/02/2020

இளையதளங்களில் தற்போதெல்லாம் அடிக்கடி வைரல் வீடியோக்கள் வெளியாவது உண்டு. புதுபுது எண்ண ஓட்டத்தில் இளைஞர்கள் வீடியோக்களை உருவாக்கி அதனை வைரலாக்கி வருவார்கள். அந்த வகையில் ஸ்கல் பிரேக்கிங் என்ற பெயரில் தண்ணீரில் நடக்கும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றது. 

 


இந்த சேலஞ்சின் படி, அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் ஓடிவந்து உயரத்தில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களில் வைத்திருக்கும் தண்ணீரில் கால் வைத்து அதனை தாண்டுகிறார். இந்த முயற்சியை யாரும் செய்ய வேண்டாம் என்ற வேண்டுகளை விடுத்துபடியே அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இது தற்போது வைரலாகி வருகின்றது.

 


 

Next Story

82 அடி உயரமுள்ள பீப்பாயில் 72 நாட்கள் தங்கியிருந்து சாதனை!

Published on 08/02/2020 | Edited on 09/02/2020


கிட்டதட்ட 80 அடி உயரத்தில் வயதான ஒருவர் 72 நாள் தங்கியிருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 5 அடி உயரத்தில் நின்றாலே சிலருக்கு தலை சுற்றலில் ஆரம்பித்து வாந்தி வரை சிலர் எடுத்துவிடுவார்கள். இந்நிலையில், தென்ஆப்ரிக்காவை சேர்ந்த வெர்னன் க்ரூகர் என்பவர் சுமார் 82 அடி உயரமுள்ள ஒரு கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள பீப்பாயில் கடந்த 72 நாட்களாக தங்கியுள்ளார்.
 

sdஇவர் 23 ஆண்டுகளுக்கு முன்னரே 1997ம் ஆண்டு இதே போன்று 25 மீட்டர் உயரத்தில் பொருத்தப்பட்ட பீப்பாயில் 67 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்திருந்தார். தன்னுடைய முந்தைய சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.