Advertisment

எனக்கு எல்லாமும் கொடுத்தது யோகாதான்... -சிவக்குமார்

இன்று சர்வதேச யோகா தினம். உலகின் பல பகுதிகளிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா குறித்து நடிகரும், எழுத்தாளருமான சிவக்குமார் ஒரு நிகழ்வில்கூறியது...

Advertisment

sivakumar

உடலை நீங்கள் பாதுகாக்க வேண்டும், உயிர் இல்லாவிட்டால் உடல் ஒன்றுமே இல்லை. எனவே உயிரை பாதுகாக்க வேண்டுமென்றால் உடலை பாதுகாக்க வேண்டும். உடம்பு கெட்டுப்போனால் உயிர் சொல்லாமல் போய்விடும். உடம்பு எப்போது உன் பேச்சை கேட்கவில்லையோ அல்லது நீ செய்ய நினைப்பதை செய்ய உன் உடல் ஒத்துழைக்க மறுக்கிறதோ அப்போது உனக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம்.

Advertisment

5 வயதா 50 வயதா என்ற கணக்கெல்லாம் இல்லை, மனசு சொன்னா உடம்பு கேக்கணும் அப்படி கேக்கலைனா உனக்கு வயசாகிடுச்சுனு அர்த்தம். மனசையும் உடலையும் யோகா ஒன்றிணைக்கும். சிறுவயதிலிருந்து நிறைய இடங்களில் எனக்கு யோகா உதவியுள்ளது. ஓவியம் வரையும்போது 10 மணிநேரங்கள் ஒரே இடத்தில் எழுந்திருக்காமல் வரைந்துள்ளேன், நடிக்கும்போது பல பக்க வசனங்களையும் நினைவில் வைத்து பேசியுள்ளேன்.

புத்தகம் எழுதும்போதும் பல மணிநேரங்கள் தொடர்ந்து பணியாற்றியுள்ளேன். இவ்வாறு மனதையும், உடலையும் ஒன்றிணைக்க யோகா எனக்கு உதவியது. சினிமாகாரன் என்றாலே பல தவறான விஷயங்களில் ஈடுபடுவார்கள் என்ற பெயர் இருக்கிறது. நானும் அப்படி தவறான விஷயங்களில் ஆட்கொள்ளாமல் இருக்க யோகா எனக்கு உதவியது.

ஒவ்வொரு ஆசனத்திற்கும், ஒவ்வொரு பலன் இருக்கிறது. கடைசிவரை அவரவர் தனது புலன்களில் இயங்கவேண்டும். இறக்கும்வரை அவரவர் கண்களால் பார்க்கவேண்டும், காதுகளால் கேட்கவேண்டும், வாயால் சாப்பிடவேண்டும். மொத்தத்தில் யாருக்கும் பாரமாக இருக்காமல் இருக்கவேண்டும்.

yoga sivakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe