“ஒரு மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து, நாங்கள் பெருமையுடன் படித்த சிவகாசி - அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியைப் பற்றி சமூக ஊடகங்களில் தொடர்ந்து அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. மரியாதைக்குரிய கல்லூரி தாளாளரையும் விட்டுவைக்கவில்லை. மாணவி விவகாரம் தொடர்பாக முதன்முதலில் உண்மைச் செய்தியை வெளியிட்டது நக்கீரன் இணையதளமே. தற்போது, இந்த வழக்கு உண்மையில் எந்த திசையில் செல்கிறது என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் செய்தி வெளியிட்டு, தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று சிவகாசி வட்டாரத்தில் இருந்து பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், களமிறங்கி விசாரித்து உறுதி செய்த தகவல்களை இங்கே தருகிறோம்.
கல்லூரியின் வரலாறு மற்றும் நோக்கம் :
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/29/ajn-founder-2026-01-29-09-58-49.jpg)
சிவகாசி - அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (ANJAC) 1963ஆம் ஆண்டு தொழிலதிபர் பி.அய்ய நாடாரால் நிறுவப்பட்டது.​இந்தக் கல்லூரி கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கி வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஒழுக்கமும், பாதுகாப்பும் மற்றும் கல்விச் சிந்தனையும் அவசியம். அதனால் கல்லூரியை சிலர் “கட்டுப்பாடான கல்லூரி” என்றும், நகைச்சுவையுடன் “பால்வாடி” என்றும் அழைக்கிறார்கள். அதேநேரத்தில், தங்கள் வீட்டு பெண் குழந்தைகளைப் படிப்பதற்காக இந்தக் கல்லூரிக்கு அனுப்பினால், காதல் போன்ற எந்த தொந்தரவையும் எதிர்கொள்ளாமல், நன்றாகக் கல்வி கற்று, அதுபோல் கவலை இல்லாமல் முழுமையாகப் படித்து, பத்திரமாக பட்டம் பெற்று வீடு திரும்புவாள் என்ற நம்பிக்கை பெற்றோரிடம் உள்ளது
சம்பவம்: காதலும் மன அழுத்தமும் :
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/29/ajn-cholai-rani-2026-01-29-09-58-35.jpg)
இக்கல்லூரியின் பயின்ற 19 வயது மாணவி சோலைராணி, முன்னாள் மாணவருடன் ஏற்பட்ட காதல் தொடர்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாகப் பகிர்ந்திருந்தார். அது கல்லூரி ஊழியர் மணிமாறன் மூலம் முதல்வர் அசோக் கவனத்திற்கு வந்தது. 20ஆம் தேதி, மாணவி மற்றும் அவரது தாயார் முருகேஸ்வரி கல்லூரிக்கு அழைக்கப்பட்டனர். அப்போது மாணவியை அறைக்கு வெளியே நிறுத்தி, விசாரணை என்ற பெயரில் மன அழுத்தம் ஏற்படுத்தியுள்ளனர். வீட்டிலும் கூட மாணவியின் எதிர்கால வாழ்க்கை குறித்த ஆலோசனையும் அறிவுரையும் வழங்கியுள்ளனர். இதன் பின்னர், மாணவி மன அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்தார்.
காவல்துறை நடவடிக்கை :
​
சிவகாசி டவுண் காவல்நிலைய அதிகாரி நடத்திய விசாரணையைத் தொடர்ந்து முதல்வர் அசோக் மற்றும் அலுவலக உதவியாளர் மணிமாறன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. FIR-ல் BNS 122 (தற்கொலை செய்ய தூண்டுதல்) மற்றும் BNS 351 (அச்சுறுத்தல் / பயமுறுத்தல்) குற்றப் பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. BNS 122 என்பது முக்கிய குற்றப்பிரிவு; இது தற்கொலைக்கு நேரடி காரணமாக மாணவிக்கு ஏற்படுத்தப்பட்ட மன அழுத்தம், அறையில் கட்டுப்பாடு மற்றும் அவமானப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளைக் குறிக்கிறது. BNS 351 தனித்துவமாக ஆதாரமான குற்றச்சாட்டாக சேர்க்கப்படுகிறது; இது தற்கொலைக்கு நேரடி காரணமாக இருக்க வேண்டியதில்லை, ஆனால் BNS 122 குற்றப்பிரிவிற்கான ஆதாரமாக வழக்கை வலுப்படுத்துகிறது.
கைது மற்றும் ஜாமீன் :
முதல்வர் அசோக் மற்றும் உதவியாளர் மணிமாறனும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். இதன் மூலம், காவல்துறை நடவடிக்கை முறையாக நடந்தது என்பதும் தெளிவாக இருக்கிறது.​பெரிய அதிகாரம், தொழில் சம்பந்தமான நெருக்கடி அல்லது சலுகை எந்த விதமாகவும் காட்டப்படவில்லை.
வதந்திகள் மற்றும் அபிரூபன் சம்பவம் :
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/29/ajn-abiruthin-2026-01-29-09-59-33.jpg)
கல்லூரி தாளாளர் அபிரூபன் பற்றிய பெயர் ஊருக்குள் பரவி வந்தது. ஆனால், அவர் சம்பவத்தில் நேரடி தொடர்பில்லாதவர் என்பதால், பரவி வந்த தகவல் வதந்தியாக மட்டுமே இருந்தது. உண்மையில் சம்பவ நாளில் அபிரூபன் இந்தியாவில் கூட இல்லை. வதந்தி சொல்லியது போல “அபிரூபன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது; அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்” என்பதில்லை. அவர் செல்வாக்கான நபர் என்பதால் இதுதான் நடந்தது என்று கூறுவது உண்மைக்கு பொருந்தாது. சமூக விளைவுகள் மாணவி காதல் காரணமாக எதிர்கால சவால்களை மனமுதிர்ச்சியுடன் எதிர்கொள்ள முடியாமல், உயிரை இழந்தது மிகக் கொடுமையான சம்பவம்.​ இது அவளின் தாயாருக்கும், கல்லூரிக்கும் பெரும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தருணங்களில், மாணவர்கள் காதல், நண்பர்கள் மற்றும் வாழ்க்கைச் சவால்களை மனமுதிர்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும்.
கல்லூரியின் கல்வி மற்றும் சமூக பங்களிப்பு :
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/29/ajn-college-2026-01-29-10-00-51.jpg)
அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியை பி. அய்யா நாடார் நிறுவுவதில், தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை உருவாக்கிய அன்றைய முதலமைச்சர் காமராஜரின் பங்களிப்பும் ஊக்குவித்தலும் இருந்தது. கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கும் வகையில், இக்கல்லூரி கல்வி மற்றும் ஒழுக்கத்தை முதன்மைப்படுத்தி வருகிறது. நிர்வாகம் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை கவனித்து செயல்படுகிறது. சமீபத்திய சம்பவம் தவறாக நடந்தாலும், கல்லூரியின் நோக்கம் மாணவர்களுக்கு நல்ல கல்வி மற்றும் நல்ல பெயரை வழங்குவதே ஆகும்.
மனஅழுத்தம், மாணவர்களின் காதல்:
கல்லூரியின் கடமை மற்றும் படிப்பினை இந்தச் சம்பவம் மாணவர்களுக்கு, மன அழுத்தம் மற்றும் சவால்களை மனமுதிர்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமாகும். அதே சமயம், கல்லூரி நிர்வாகத்துக்கும் முதல்வருக்கும், ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் காதல் தொடர்புகளை சரியாகக் கையாள்வது முக்கியம் என்பதையும் இது வலியுறுத்துகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/29/ajn-manimaran-principal-2026-01-29-09-55-55.jpg)