Skip to main content

துரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன்! - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்! (4)     

Body

 

bakery-

 

“சரி.. காட்டுக்குள்ளே பார்ட்டி நடந்துச்சு.. அப்புறம் என்ன அதுக்கும் மேல?” என்று விளக்கம் கேட்டார், சிவகாசி காரனேசன் பேக்கரி கவிநிலா மர்ம மரணம் குறித்த கட்டுரைகளைத்  தொடர்ந்து படித்துவரும் வாசகர் ஒருவர்.  

 

விருதுநகர் மாவட்டம் தேவதானத்தை அடுத்துள்ள காட்டுப் பகுதியிலும், அங்குள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவருக்குச் சொந்தமான பண்ணைத் தோட்டத்திலும், அவ்வப்போது ஆபாச அட்டூழியங்கள் நடப்பதாக அந்த ஏரியாவாசிகளே சொல்கின்றனர். பண்ணைத் தோட்டத்தில் நடப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஏடாகூட சமாச்சாரம், விளக்கவே முடியாத சிக்கலான உறவு. 

 

 bakery-

 

பேக்கரி உரிமையாளர் ஜெயச்சந்திரனின் உறவுக்காரர் ஒருவர், கவிநிலா மர்ம மரணம் குறித்த கட்டுரைகளைப் படித்துவிட்டு “ஒரு குடும்பத்துக்குள் நடந்த விஷயங்களை இந்த அளவுக்கு எழுதவேண்டுமா?” என்று கேட்டார். அதற்கான பதில், ஆறுமுகசாமியிடமிருந்து குமுறலாக வெளிப்பட்டது. 


“மதுரையில் பல லட்சங்கள் செலவழித்து, கவிநிலாவுக்கு 240 பவுன் அணிவித்து, ஆடம்பரமாக திருமணம் நடத்தியது, வளைகாப்பின்போது 50 பவுன் நகை போட்டதெல்லாம், மகள் நல்லபடியாக வாழவேண்டும் என்றுதானே செய்தேன்? அந்த வீட்டில் கவிநிலாவை வாழ விடவில்லையே?  

 

dddd

 

மூன்றாவது தலைமுறையிலும், பல கிளைகள் பரப்பி, ஓஹோவென்று நடந்துவரும் காரனேசன் பேக்கரி வியாபாரத்தில்,  பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியபடியே இருக்கிறது. சராசரி மனிதர்களென்றால், பாய்ந்து பிராண்டும் சட்டம், கவிநிலா உயிர் பறிபோனதை, வெறும் சந்தேக மரணம் என்று பதிவு செய்ததோடு, அமைதியாகிவிட்டது. 

 

பிணமாகப் பார்த்து  27 நாட்கள் ஆகிவிட்டன. போஸ்ட்-மார்ட்டம் குறித்த விபரம் எதுவும் இன்றுவரையிலும் தெரியவில்லை. பணம் பாதாளம் வரைக்கும் பாய்ந்துவிட்டது. நடந்தது கொலையேதான்! ஆதாரம் இருக்கிறது. மகள் சாவில் என் போன்றவர்களுக்கே நீதி கிடைக்காதபோது.. சாமானியர்கள் என்ன பாடுபடுவார்கள்?”  என்று வெடித்து அழுகிறார் ஆறுமுகசாமி.  

 

ddd

 

காரனேசன் பேக்கரி துளசிராம் தரப்பிலோ “சாதாரண விஷயத்துக்குகூட, கவிநிலாவுக்கு பயங்கரமாகக் கோபம் வரும். கணவனுக்கு அவள் தந்த டார்ச்சர் கொடுமையானது. எதற்கெடுத்தாலும் கதவைப் பூட்டிக்கொள்வாள். பிறகு, அவளாகவே சமாதானமாகி, கதவைத் திறப்பாள். மதுரையில், அவளுக்கு மனநல சிகிச்சை அளித்ததை மறைத்துவிட்டார்கள்” என்று, தங்கள் பங்குக்கு புகார் வாசித்தனர். 

 

“யாரால் யாருக்கு டார்ச்சர்?” என்று அழுத்தமாக மறுக்கும் ஆறுமுகசாமி தரப்பு “நீ செத்தால் எனக்கு பெண் கொடுப்பதற்கு பல கோடீஸ்வரர்கள் காத்திருக்கிறார்கள் என்று கவிநிலாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது துளசிராம்தான். குடித்துவிட்டு வந்து அடித்தால் நிம்மதியாக வாழ முடியுமா? 2019-ல், இரண்டாவது பிரசவத்துக்காக கவிநிலா மதுரைக்கு வந்துவிட்டாள். அப்போது, துளசிராம் போக்கு முற்றிலுமாக மாறிவிட்டது. நண்பர்கள் மற்றும் பெண்களுடன், ரிசார்ட்டுகளுக்குச் சென்று உல்லாசமாக இருந்துவிட்டு, இந்தத் துரோகத்தை, கவிநிலாவிடமே சொல்லி வெறுப்பேற்றினான்.” என்று நடந்த வக்கிரச் செயலை விவரித்தனர்.

 

ஆறுமுகசாமியிடம் அப்படியென்ன ஆதாரம் இருக்கிறது? 
       
 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்