Advertisment

சந்தேகத்திற்கு ஆளான சிவாஜி-தேவிகா ஜோடியும் கமல்-ஸ்ரீதேவி ஜோடியும்! பழைய ரீல் #5 

pazhaya reel 5

ரீலுக்காக ஜோடி போட்டாலும், அதில் ஓர் ரியல் தன்மை மிளிர்ந்தால், அந்த ஜோடி பொருத்தமான ஜோடியாக ரசிகர்களால் கொண்டாடப்படுவது அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை வழக்கம். நடிகர் திலகம் சிவாஜி- பத்மினி ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடி. அதேபோல சிவாஜி- தேவிகா ஜோடியும் ரசிகர்களால் விரும்பப்பட்டது.

Advertisment
Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

‘வானவில்’ என்கிற நாடகத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தே தமிழ்த் திரையுலகில் கால் பதித்தார் தேவிகா. தேவிகாவின் முதல் சினிமா கதாநாயகனாக சிவாஜி அமைந்ததாலோ என்னவோ, இந்த ஜோடி நடித்த படங்களில் அந்நியோன்யமான கெமிஸ்ட்ரி அற்புதமாக இருக்கும். அதனாலேயே இந்த ஜோடியைப் பற்றி அரசல்புரசலாக கிசுகிசுவும் கிளம்பியது இண்டஸ்ரியில். இது தேவிகாவின் தாயாரின் காதுகளுக்கும் எட்டியது. பிஸியான நடிகையாக இருந்த தேவிகா தினமும் தன் வீட்டிலிருந்து ஷூட்டிங்கிற்காக கிளம்பும்போதெல்லாம்,

“ஏதேதோ செய்தி வருதே... நிஜமா?” என கேட்பாராம் அவரின் தாயார்.

“அப்படியெல்லாம் இல்லையம்மா” என தேவிகா பதில் சொல்வது வழக்கமாம்.

siva devi

ஆனால் கிசுகிசு அதிகரிக்க அதிகரிக்க தேவிகாவின் தயாரின் சந்தேகமும் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில், “என்ன... சிவாஜிய கல்யாணம் பண்ணிக்கப்போறியா?” ‘கல்யாணம் பண்ணிக்கப் போறியாமே?” என கேள்விகளால் துளைத்தவர் உச்சகட்டமாக... “நீ வீட்டவிட்டு ஓடிப்போய் சிவாஜிய கல்யாணம் பண்ணிக்க திட்டம் போட்டிருக்கியாமே?” என்று கேட்கத் தொடங்கினார். இதனால் தேவிகாவுக்கும், அவரின் அம்மாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் நடந்திருக்கிறது. ஆனால்

தேவிகா மனதில் அப்படி எந்த எண்ணமும் இல்லை.

மதுரை ஸ்ரீமுருகன் டாக்கீஸ் குடும்பத்தைச் சேர்ந்த உதவி இயக்குநராக இருந்த தேவதாஸை திருமணம் செய்துகொண்டார் தேவிகா. சிவாஜியை “சார்” என்று அழைத்து தன் குரு ஸ்தானத்திலேயே வைத்திருந்தார் தேவிகா... கடைசிவரை.

kamal sridevi

கமல்- ஸ்ரீதேவியின் ஜோடிப் பொருத்தம் 80-களில் ரசிகர்களால் ஆரவாரமாக வரவேற்கப்பட்டது, கொண்டாடப்பட்டது. உண்மைக்கு சரி நிகரான காதல் ஜோடியாக இவர்களின் நடிப்பில் மென்மையும், நளினமும், வசீகரமும் வெளிப்பட்டது.

தேவிகாவுக்கு சிவாஜி போலவே, ஸ்ரீதேவிக்கு முதல் சினிமா கதாநாயகனாக கமல் அமைந்ததாலோ என்னவோ இந்த ஜோடியும் நடிப்பில் அந்நியோன்யத்தை அள்ளி வழங்கியது. அதனாலேயே இந்த ஜோடியைப்பற்றி கிசுகிசுவும் கிளம்பியது இண்டஸ்ட்ரியில்.

இது ஸ்ரீதேவியின் தயாரின் காதுகளுக்கு எட்டியது. பிஸியான நடிகையாக இருந்த ஸ்ரீதேவி, தினமும் தன் வீட்டிலிருந்து ஷூட்டிங்கிற்காக கிளம்பும்போதெல்லாம், “ஏதேதோ செய்தி வருதே... நிஜமா?” என கேட்பாராம் அவரின் தாயார். “அப்படியெல்லாம் இல்லையம்மா” என ஸ்ரீதேவி பதில் சொல்வது வழக்கமாம். ஆனால், கிசுகிசு அதிகரிக்க அதிகரிக்க ஸ்ரீதேவியின் தாயாரின் சந்தேகமும் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில்... “என்ன, கமலஹாசனை கல்யாணம் பண்ணிக்கப்போறியா?”, "கல்யாணம் பண்ணிக்கப் போறியாமே?” என கேள்விகளால் துளைத்தவர், உச்சகட்டமாக... “நீ வீட்டவிட்டு ஓடிப்போய் கமல்ஹாசனை கல்யாணம் பண்ணிக்க திட்டம்போட்டிருக்கியாமே?” என்று கேட்கத் தொடங்கினார். ஆனால், அதற்குள் ஸ்ரீதேவி பாலிவுட் சென்று பிரபலமானார். அமமாவின் எதிர்ப்பை மீறி போனிகபூரை திருமணம் செய்துகொண்டார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

“27 படங்களில் நானும், ஸ்ரீதேவியும் சேர்ந்து நடித்தோம். அவரை மறக்கவே முடியாது. எங்களுக்குள் நிஜத்திலும் காதல் இருப்பதாக ஒரு கதை ஓடிக்கொண்டிருந்தது. நானும், ஸ்ரீதேவியும் திருமணம் செய்துகொள்வோம் என சந்தேகப்பட்டார் ஸ்ரீதேவியின் தாயார்” என கமல் பின்னாளில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். சிவாஜியை தேவிகா அழைத்தது போலவே, கமலை “சார்” என்றுதான் அழைத்து வநதார் ஸ்ரீதேவி, கடைசிவரை.

kamalhassan sivajiganesan pazhaya reel
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe