கள்ளக்குறிச்சி நூலகம் இடப்பற்றாக்குறையால் பல மாதங்களாக மலைபோல் புத்தங்கள் குவிந்துள்ளன. இவற்றை கிளை நூலகங்களில் அடுக்கி வைக்க, போதிய இட வசதி இல்லாமல் உள்ளதுடன், வாசகர்கள் அமர்ந்து படிக்கவும் முடியாத அவல நிலையுடன் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், பட்டதாரி இளைஞர்கள் உள்பட பெரும்பாலானவர்கள் நூலகங்களில் வாசிப்பதற்காக வருகிறார்கள். பொழுது போக்கிற்காகவும், ஆன்மிகம், கவிதை மற்றும் கட்டுரைகள் இலக்கியம் படிக்கும் இடமாகவே இருந்து வந்தது நூலகம். தற்போது யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியர் போட்டித் தேர்வு உட்பட பல அரசுப் பணி தேர்வுகளுக்கான பாடப் புத்தகங்கள் படிக்கவும் நூலகங்களை பயன்படுத்துகிறார்கள். வேலை தேடுவோர் அதிகளவில் நூலகங்களுக்கு வருகின்றனர். நூலகங்கள், பொது மக்கள் அதிகமாக பயண்படுத்தும் இடமாகவும் மாறி வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/book-publisher.jpg)
இணையதளம் வசதிக்காக கம்ப்யூட்டர்களும், நகல் எடுக்க ஜெராக்ஸ் மிஷின்களும், நூலகங்களில் உள்ளன. குறைந்த கட்டணத்தில் சேவைகள் கிடைப்பது, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவியாக உள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு சொந்த கட்டங்கள் உள்ளன. ஆனால் மாவட்ட அளவிலுள்ள கள்ளக்குறிச்சி நூலகத்திற்கு மட்டும் சொந்த கட்டடங்கள் இல்லை. வாடகை கட்டிடத்தில் நூலகங்கள் இயங்கி வருகின்றன. இதனால் பொது மக்கள் எளிதில் சென்று பயன்படுத்திக் கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி்யை தனியாக பிரித்து மாவட்டத்தின் தலைநகராக மாறிவுள்ள நிலையில், இங்குள்ள நூலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்குவது வாசகர்களுக்கும், கள்ளக்குறிச்சி பகுதி மக்களுக்கும் மிகுந்த வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. இந்த நூலகத்திற்க்கு விரைவில் சொந்தக் கட்டடம் அமைக்க வேண்டும். இந்த கிளை நூலகத்தைமாவட்ட மைய நூலகமாக்க வேண்டும் மற்றும் ஒரு கிளை நூலகம் அமைக்க வேண்டும்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
ஆண்டு தோறும் நூலகத்திற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அரசு மூலம் வழங்கப்படுகின்றன. இவற்றை கிளை நூலகத்தில் அடுக்கி வைப்பதற்கே இடம் இல்லாமல், தற்போது இயங்கி வரும் நூலகம் குறைவான இடத்திலேயே இயங்குகிறது. இட வசதியுடன் கூடிய புத்தகங்களை உரிய முறையில் அடுக்கி வைத்து, வாசகர்கள் பயன்படுத்தும் நிலையில் இட வசதியுடன் தற்க்காலிகமாக வாடைகை கட்டடத்தை ஏற்படுத்தி தரப்பட வேண்டும்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
கள்ளக்குறிச்சியில் மாவட்ட மைய நூலகம் ஏற்படுத்தவும் தற்போது வாடகை கட்டத்தில் இயங்கும் நூலகத்திற்க்கு சொந்த கட்டடங்கள் கட்டவும், நூலகங்களை விரிவான பகுதிகளுக்கு மாற்றவும் மாவட்ட ஆட்சியர், கோட்டாச்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வழக்கறிஞரான இல.ஜெயச்சந்திரன்(எ)வெற்றி நிலவன், தமது கருத்தை பதிவு செய்துள்ளார். மேலும் புத்தகம் படிப்பதன் மூலம் பல அறிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் மனிதன் படித்து எத்தனை பட்டங்கள் வாங்கியிருந்தாலும் பல்வேறு புத்தககங்களை வாசிப்பதன் மூலம் அறிவு விசாலாமடையும், மனித நேயம் வளரும், எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் திறமை, துணிவு வரும். மொத்தத்தில் சிகரம் தொட்ட மனிதர்கள் சாதனையாளர்கள் உலகம் பாராட்டிய தலைவர்கள் எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் என அனைவருமே புத்தக வாசிப்பின் மூலமே வெற்றி பெற்றனர் என்பது வரலாறு சொல்லும் உண்மை. எனவே கள்ளக்குறிச்சி தனிமாவட்ட மாக உதயமாகப் போகிறது மாவட்ட நூலகமாக மாறப்போவதை இப்போதே அதை சரி செய்யலாமே என்கிறார்கள் வாசகர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)