ADVERTISEMENT

குள்ளமான குண்டர்...

09:53 PM Nov 13, 2017 | Anonymous (not verified)

குள்ளமான குண்டர்...

வடகொரிய அதிபரை வர்ணிக்கும் டிரம்ப்





சில நாட்களுக்கு முன் 'நான் ஒரு நல்ல நடுநிலையாளனாக இருப்பேன்' என்று கூறிய டிரம்ப், நேற்று ஒரு ட்விட்டை தட்டிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். அதில், வடகொரிய அதிபர் 'கிம்'மை 'குள்ளமான குண்டர்' என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் பிரச்சனை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் அவர்கள் போட்ட ட்விட் சண்டைகளைக் காண்போம்.

டிரம்ப்: ஏவுகணை மனிதன் கிம் ஜாங் தன் ஆட்சிக்கு முடிவு கட்ட ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறார்.(ஐ. நா. சபை கூட்டத்தொடரில் டிரம்ப் பேசியது)

கிம் ஜாங் உன்: அமெரிக்காவின் தலைவர் ஒரு வயதான முதியவர். குரைக்கும் நாய் கடிக்காது. வடகொரியாவிற்கு மிரட்டல் விடுக்கும் அவர் மனநலம் சரியில்லாதவர்.

டிரம்ப்: வடகொரியா அதிபர் தனது செயல்பாடுகளின் மூலம் தன்நாட்டு மக்களையே பட்டினி போட்டு கொன்று விடுவார். இதுதான் அந்த நாட்டில் நடக்கபோகிறது. முன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு அவரை சோதிப்போம் .

டிரம்ப்: அதில் தன்னை முதியவர் என்று கிம் கூறினாலும் நான் அவரை குள்ளன் மற்றும் குண்டன் என்று கூறமாட்டேன். அவருடன் நட்புறவு ஏற்பட முயற்சிப்பது மிகவும் கடினம். ஆனால் அது ஒரு நாள் நடக்கும்.

கிம் ஜாங் உன்: நான் குண்டா?(Fat) முற்றிலும் இல்லை ! நான் கவர்ச்சிகரமானவரா? (Phat) முற்றிலும் உண்மை!

இதில், கிம் ஜாங் உன், டிரம்ப்பைத் திட்ட மட்டுமே ட்விட்டரைப் பயன்படுத்துகிறார். இது எங்கு போய் முடியுமோ?

இப்படி இவர்கள் மாறி,மாறி ட்வீட் போட்டு உலகையே பரபரப்பாக்குகிறார்கள். இவர்களது ட்விட்டர் சண்டை போரில் முடியுமோ என்று பலரும் அஞ்சுகிறார்கள். ஒருவேளை அப்படி எதுவும் நடந்தால் அப்போது தெரியும் ட்விட்டர் அரசியல் எவ்வளவு பெரியதென்று. நம்மூர் அரசியல்வாதிகள் தான் ட்விட்டர் அரசியலை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

கமல் குமார்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT