Skip to main content

உய்யக்கொண்டான் ஆற்றில் கழிவுநீர் கலப்பு; உத்தரவிட்ட முதல்வர், கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! கேள்வி கேட்கும் நீதிமன்றம்! 

Published on 08/09/2020 | Edited on 08/09/2020

 

Sewage mix in Uyyakkondan river; Chief Minister ordered, the district administration to find out! Court of Question!

 

 

திருச்சிக்கு அழகு சேர்த்தது மலைக்கோட்டை மட்டுமல்ல, நகருக்குள் வலம் வந்து வளம் சேர்த்த உய்யக்கொண்டான் கால்வாயும் ஆகும். இந்த கால்வாய்க்கு நீண்ட வரலாறும் பெருமையும் உண்டு.

 

விவசாயிகளுக்கான கொடையாக திகழ்ந்த இந்த கால்வாய் ராஜராஜ சோழனால் வெள்ள காலத்தை மனதில் கொண்டு 1,200 ஆண்டுகளுக்கு முன்பு அக்காலத் தொழில்நுட்பத்தின் உதவியோடு வெட்டப்பட்டதாகும். மன்னனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராஜராஜ சோழனின் சிறப்பு பெயர்களில் ஒன்றான 'உய்யக்கொண்டான்' எனும் பெயரையே இக்கால்வாய்க்கு சூட்டினர்.

 

பேட்டைவாய்த் தலையிலிருந்து பிரிந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குள் 8 கிமீ பாய்ந்து வாழவந்தான்கோட்டை ஏரி வழியாக, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேராண்டி ஏரியுடன் முடிவடைகிறது இக்கால்வாய். சுமார் 71கி.மீ. நீளமும், 120 கிளை வாய்க்கால்களும் உடைய இந்த கால்வாய் மூலம் 32,742 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன.

 

திருச்சி மாநகரில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து திருச்சி காங்கிரஸ் சார்பில் திருச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் 28. 8 .2017 அன்று 05 /78 9 /2017 வழக்கு தொடரப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. அதற்கு அதிகாரிகள் யாரும் செவி சாய்க்கவில்லை.

 

மேலும் உய்யக்கொண்டான் வாய்க்காலை  இதனால்வரை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் இருப்பதற்கு பணியை காரணம் காட்டி கொண்டிருக்கின்றார்கள் அதிகாரிகள்.

 

1.9. 2020 அன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றில் நீதி அரசர், திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் எந்தெந்த இடத்தில் கழிவு நீர் கலக்கிறது என்ற விளக்கத்தை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் இதே கோரிக்கையை முன்வைத்து கடந்த 28. 8. 2017  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சார்லஸ் என்பவரால் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அதற்கு பதில் அளிக்க இந்த அரசு கட்டமைப்பு முன்வரவில்லை.

 

Sewage mix in Uyyakkondan river; Chief Minister ordered, the district administration to find out! Court of Question!
சார்லஸ்


ஏன் இவ்வளவு மெத்தனம் என்று தெரியவில்லை அரசும் அதிகாரிகளும் நீதிமன்றத்திற்கு உடனடியாக உண்மையை தெரியப்படுத்த வேண்டும். மேலும் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பெற்ற தகவல்களில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பொன்மலை கோட்டம் நீதிமன்றம் பாலம் அருகே உள்ள உய்யக்கொண்டன் வாய்க்காலில் 11 அடுக்குமாடி கட்டிடத்தின் கழிவு நீர் வாய்க்காலில் கலப்பதாக தெரிவித்து உரிய நடவடிக்கை தொடருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இதன்பேரில் சுகாதார அலுவலரின் அறிக்கையின்படி கோர்ட் அருகே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால், ரயில்வே ஜங்ஷன், திரையரங்கு ரோடு, DCTC டிப்போ, வருமானவரி அலுவலக பின்புறம், அலெக்சாண்ட்ரியா ரோடு, இராணுவத்தினர் குடியிருப்பு , ஐயப்பன் கோவில் வழியாக மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. அதில் அப்பகுதியில் வரும் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் வாய்க்காலில் கலக்கிறது என்ற விபரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை எனக்கு பதில் அளித்துள்ளது. என்று காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட, மாவட்ட பொது செயலாளர் சார்லஸ் கூறுகிறார்.

 

‘நடந்தாய் வாழி காவேரி’ என்று காவிரியின் பெருமை பேசும் திருச்சி காவிரியில் ஒரு பிரிவாக உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில்  கழிவுகள் கலந்து  நீரை மாசு கலந்து  கொண்டிருப்பதை தடுக்க எப்பொழுது உரிய நடவடிக்கையை அரசு எடுக்கப் போகிறது. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு உய்யக்கொண்டான் வாய்க்காலையும்  காவேரியையும் காப்பதாகவும் தண்ணீர் நிலம் மாசடைவதை தடுப்பதாகவும் அமைய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

மேலும் இது குறித்து வழக்கு 28 .8 .2017 அன்று 05/789/2017 என்ற வழக்கும், தொடர்ந்து உய்யக்கொண்டானை பாதுகாக்க கோரி உண்ணாவிரத போராட்டம் 30 .4. 2018 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

 

உய்யக்கொண்டான் சென்னை கூவம் போல் மாறி வருகிறது. கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் 2019 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும் திமுக முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கழிவு நீர் கலக்கிறது என்றும் அது தடுக்கப்படும் என்றார். ஆனால் தற்போதுவரை அதற்கான தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே தற்போது உள்ள நிலை.

 

 

 

Next Story

பாதயாத்திரை விபத்தில் பலியான 5 பேர்; நிவாரணத் தொகையை வழங்க அமைச்சர்கள்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
5 lose their live in padayatra accident; Ministers to provide relief amount

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்தில் பலியான 5 பக்தர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லாக்கோட்டை ஊராட்சி கண்ணுகுடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் சமயபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை தஞ்சை மாவட்டம் வளப்பக்குடி கிராமம் அருகே நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கண்ணுகுடிப்பட்டி என்கிற ஒரே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி (60), ராணி (37), மோகனாம்பாள் (27), மீனா (26), தனலட்சுமி (36) ஆகிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இவர்களுடன் நடந்து சென்ற சங்கீதா படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்புச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் கண்ணுக்குடிப்பட்டி கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினர். நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Increase in water flow in Cauvery River

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்திற்கு வினாடிக்கு 34 ஆயிரம் கன அடியாக நீர் திறக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு இன்று (18.07.2024) காலை நிலவரப்படி வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஒகேனக்கலுக்கு நேற்று (17.07.2024) மாலை வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதிகப்படியான நீர்வரத்து காரணங்களால் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் மூன்றாவது நாளாக இன்றும் பரிசல்கள் இயக்கவும், குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று மதியம் நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.