Advertisment

அவரை விட்டுட்டுப் போயிரு என மிரட்டல்... சின்னத்திரையில் நடக்கும் குடும்ப பிரச்சனைகள்... வெளிவராத அதிர்ச்சி தகவல்!

பெரிய திரையான சினிமாவில் ஒரு ஹீரோவும் ஹீரோயினும் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். பெரும்பாலான சினிமா ஜோடிகள் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நகர்த்துவார்கள். ஆனால் சில ஜோடி களோ திருமணமாகி பத்து வருடம், பதினைந்து வருடம் கழித்துக் கூட விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறுவார்கள்.

Advertisment

actress

அதுபோலத்தான் இப்போது சின்னத்திரை சீரியல் நடிகர்கள்—நடிகைகளுக்குள் காதல், கல்யாணம், விவாகரத்து என சகஜமாகிவிட்டது. பொதுவாக இப்போது அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், பெரும்பாலான பெண் கதாபாத்திரங்களை டெரராகவே காட்டுகிறார்கள். மாமியாரை காலி பண்ண நினைக்கும் மருமகள், தனது மகனுடன் மருமகள் சிரித்துப் பேசுவதை சகிக்க முடியாத மாமியார், அடுத்தவர் குடியைக் கெடுப்பதற்கென்றே குரூரமாக சிந்திக்கும் வில்லிகள் என பல டிசைன்களில் சீரியல் கேரக்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. அனைத்து சேனல்களின் சீரியல் கேரக்டர்களும் பெண்களுக்கு அத்துப்படி.

Advertisment

actress

அப்படி பெண்கள் ரசிக்கும்-—வெறுக்கும் சீரியல் நடிகைகள் இருவரின் நிஜ வாழ்க்கை குடும்ப—குத்து வெட்டுகள் சமீபத்தில் அடிதடி வரை அரங்கேறி சின்னத்திரை வட்டாரத்தை கிறுகிறுக்க வைத்துள்ளன.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ சீரியல் மூலம் வில்லனாக அறியப்பட்டவர் ஈஸ்வர். "பாவமன்னிப்பு', "சித்திரம் பேசுதடி'. -உட்பட 12-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார் ஈஸ்வர். ‘பாவமன்னிப்பு’ சீரியலில் நடிக்கும்போது அதே சீரியலில் தன்னுடன் நடித்த ஜெயஸ்ரீயை காதலிக்க ஆரம்பித்தார் ஈஸ்வர்.

ஜெயஸ்ரீயும் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் ரம்யா கிருஷ்ணன் நடித்து சன் டி.வி.யில் ஒளிபரப்பான "வம்சம்' தான் அவரை வில்லியாக பிரபலமாக்கியது. ஜெயஸ்ரீ நடிகை மட்டுமல்ல, சிறந்த பரதநாட்டியக் கலைஞரும் கூட. மூன்று வருட காதலுக்குப் பின் ஈஸ்வரும் ஜெயஸ்ரீயும் 2016 ஜனவரியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரெத்வா என்ற பெண் குழந்தையும் உண்டு.

actress

ஈஸ்வருக்காக தாராளமாக செலவு செய்தார் ஜெயஸ்ரீ. ஆனால் ஈஸ்வரோ குடி,—சூதாட்டம் என தடம் புரள ஆரம்பித்தார். இந்த நிலையில்தான் ஈஸ்வருக்கு இன்னொரு காதல் பிறந்தது. இப்போது ஜி டி.வி.யில் ஒளிபரப்பாகும் "தேவதையைக் கண்டேன்' சீரியலில் நடித்து வரும் ஈஸ்வருக்கு அதே சீரியலில் வில்லியாக நடிக்கும் மகாலட்சுமியுடன் காதல் ஏற்பட்டது. சன் டி.வி.யில் ஒளிபரப்பான ராதிகாவின் "வாணி—ராணி' சீரியல் மூலம் பிரபலமான மகாலட்சுமிக்கு அனில் என்பவருடன் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் தான் மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்யப் போவதாகச் சொல்லி ஜெயஸ்ரீயிடம் விவாகரத்து கேட்டு டார்ச்சர் பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள் ஈஸ்வரும் அவரது தாய் சந்திராவும். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் ஈஸ்வர் மீதும் அவரது அம்மா மீதும் புகார் கொடுத்துவிட் டார் ஜெயஸ்ரீ. இருவரிடமும் விசாரித்து, தாய் சந்திராவிடம் சில உறுதிமொழிகளை வாங்கிக் கொண்டு, அவரை மட்டும் சொந்த ஜாமீனில் அனுப்பிவிட்டு, ஈஸ்வரை புழல் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டது போலீஸ்.

ஈஸ்வர் ஜெயிலுக்குப் போன பின், அவரது தாயிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாக சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் ஜெயஸ்ரீ. புழல் ஜெயிலிலிருந்து ஜாமீனில் வந்த ஈஸ்வர், கடந்த வாரம் தனது வக்கீல் ஆதிலட்சுமி லோகமூர்த்தி துணையுடன் மீடியாக்களைச் சந்தித்து, "மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும் ஜெயஸ்ரீக்கும் தொடர்பு இருக்கிறது' என பகீர் கிளப்பினார். இதைப் பார்த்து திகிலடைந்த அனில், மறுநாளே மீடியாக்களைச் சந்தித்து "ஈஸ்வர் சொல்வது அப்பட்டமான பொய்' என்றார்.

ஜெயஸ்ரீயும் விடுவதாக இல்லை. கடந்த 9—ஆம் தேதி மீடி யாக்களைச் சந்தித்து, "ஈஸ்வருக்கும் மகாலட்சுமிக்கு தொடர்பு இருப்பது உண்மை. மகாலட்சுமி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, அவரை விட்டுட்டுப் போயிரு என மிரட்டுகிறார். நாங்க ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ் தான் என்கிறார் ஈஸ்வர். எந்த ஃப்ரண்ட்ஸாவது லிப்—டூ லிப் முத்தம் கொடுத்துக்குவாங்களா? நானும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல. எம்.ஜி. ஆர். படங்களில் நல்ல கேரக்டர்களில் நடித்தவர் எனது அம்மா. இப்போது ஈஸ்வர் திருந்தி வந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயார்'' என போட்டுத் தாக்கிவிட்டார். இவ்வளவு அக்கப்போர்கள் நடந்தும் இதுவரை மகா லட்சுமியிடமிருந்து எந்த பதிலுமில்லை. சீரியல்களில் அடுத்தவர்களின் நிம்மதியைக் கெடுப்பதிலேயே குறியாக இருக்கும் பெண் கேரக்டர்களின் நிஜ வாழ்க்கையும் நிம்மதி இல்லாமல் தான் இருக்கிறது.

family incident issues mahalakshmi serial actress
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe