'Sengottaiyan is in the grip of Amit Shah ... Tvk is in the grip of Sengottaiyan'; Everything is drama - Senthilvel breaks it down Photograph: (politics)
அரசியல் அனுபவங்கள் மற்றும் அரசியல் பார்வைகளை பிரபலங்கள் பகிர்ந்து வரும் நக்கீரன் டிவியின் புதிய நிகழ்ச்சி 'சூடா ஸ்ட்ராங்கா'. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊடகவியலாளர் செந்தில்வேல் பல்வேறு அரசியல் பார்வைகளை பகிர்ந்து கொண்டார்.
கோவை ஏர்போர்ட்டில் இருந்து மோடி மேடைக்கு வரும்போதே பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுறது உறுதி ஆயிடுச்சு என்கிறார்களே?
பீகாரை பொறுத்த அளவிற்கு பாஜக ஆட்சி அமையாது என்று நான் எங்கும் சொன்னது இல்லை. நான் கூட முகநூலில் ஒரு பதிவு போட்டிருந்தேன். அதைக்கூட சிலர் தப்பா புரிஞ்சுகிட்டாங்க. ஒரு மூத்த செய்தியாளர், ஒரு முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தினுடைய எடிட்டர் ஒருவர் பீகார் போயிட்டு வந்து பீகாரில் தேஜஸ்விக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு இருக்குன்னு சொல்லி இருந்தார். அடுத்த நாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு. முந்தைய நாள் மாலையில் டெல்லியில குண்டு வெடித்தது. 'தேஜஸ்விக்கு அங்கே மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது' நான் ஒரு பதிவு போட்டேன். மற்றபடி எனக்கு உறுதியான நம்பிக்கை இருந்துச்சு அங்கு பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு தான் அதிகம் என்பதைத்தான் எல்லாரும் நம்பினோம். அதற்கு பல காரணங்கள் இருக்கு. எஸ்ஐஆரும் அதில் ஒரு காரணம். எஸ்ஐஆர் மட்டுமே காரணமா என்றால் இல்லை. எஸ்ஐஆரும் ஒரு காரணம்.
கடைசியாக கொடுத்த 10000 ரூபாயும் ஒரு காரணம். அதைத் தாண்டி காங்கிரஸுக்கு அங்கு அமைப்பு பலம் இல்லை என்பது ஒரு வருத்தமான உண்மை. அமைப்பு ரீதியாக காங்கிரஸ் பலப்படுத்தி கொள்ளவில்லை என்பது உண்மை. அதனால் மோடி பீகாரில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதற்கும் தமிழ்நாட்டிற்கும் முதலில் என்ன சம்பந்தம்.
தமிழ்நாட்டில் 'சங்கி' என்ற வார்த்தை மாதிரி இன்னொரு வார்த்தை ட்ரெண்டிங்கில் போயிட்டு இருக்கு. 'தற்குறி' என்ற அந்த வார்த்தையை தொடர்ந்து தவெகவை தாக்குவதற்கு பயன்படுத்தி வருகிறார்கள். விஜய்யின் அரசியலை பொதுவாக நீங்க எப்படி பார்க்கிறீங்க?
'தற்குறி' என்கிற வார்த்தை எங்கிருந்து வந்தது? யார் சொன்ன வார்த்தை? அந்த வார்த்தைக்கு காப்பிரைட் யாரும் கேட்க முடியாது. ஏனென்றால் பொதுமக்கள் தளத்தில் இருந்து இயல்பாக உருவான ஒரு வார்த்தை தற்குறி. அது எப்படி உருவானது என்றால் எந்த புரிதலும் இல்லாமல் ஒருவர் பேசும்போது 'ஏன்டா லூசு மாதிரி பேசுற' என்று சில ஊர்களில் சொல்வார்கள். 'ஏன்டா நீ இப்படி விவரம் இல்லாமல் பேசுற' என்பார்கள் சில ஊரில். 'ஏன்டா நீ தற்குறித்தனமா பேசிகிட்டு இருக்க' என்று சில ஊர்களில் சொல்வார்கள். அந்த தற்குறித்தனம் அப்படிங்கிற வார்த்தை எந்த புரிதலும் இல்லாமல் பேச கூடியவர்களுக்கு சமூகத்தில் புழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தை என்றே வைத்துக்கொள்ளலாம். இந்த வார்த்தை ஏன் உங்களுக்கு அடாப்ட் ஆச்சு. அதை நீங்க என்னைக்காவது சிந்திச்சிருக்கீங்களா?
சமீபத்தில் வந்த எஸ்ஐஆர் பற்றி தவெகவைச் சேர்ந்த ஒரு பெண் நிர்வாகி பேசும்போது, ''ஏ திமுக அரசே...'' அப்படிங்கறாங்க. இதை நாம் என்னன்னு புரிஞ்சுக்கிறது. எஸ்ஐஆருக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்? எஸ்ஐஆரை எதிர்க்கும் திமுக தான் முதலில் எஸ்ஐஆர் பார்ம் வாங்க முதலில் நிற்கிறது என்று ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். எளிதாக சொன்னால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்க்கிறோம் என்பதற்காக நாளையில் இருந்து பெட்ரோல் போடக்கூடாது என்று சொன்னால் எப்படி இருக்கும். அப்படிதான் இருக்கு எடப்பாடி பழனிசாமி பேசுவது.
பழனிசாமி ஒரு பச்சை பஸ்ஸை எடுத்துட்டு அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதல் நாள் விவசாயிகளை சந்தித்தார். அப்போது விவசாயி ஒருவர் 'அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஏன் நிறைவேற்றப்படவில்லை? நிறைவேற்றுவோம் என்று சொன்னீங்க தானே?' என்று எடப்பாடி பழனிசாமியை பார்த்து கேள்வி கேட்டார். அதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொன்னார்? மத்திய அரசு அனுமதி தரவில்லை. சிக்கல் மத்திய அரசு கிட்ட இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி சொன்னாரா இல்லையா? மத்திய அரசோடு அதிமுக இணக்கமாக தானே இருந்தீங்க ஏன் உங்களால் நிறைவேற்ற முடியவில்லை. அதிமுக பாஜகவுடன் இணக்கமாக இருந்து வேளாண் சட்ட திருத்த மசோதா வருவதற்கு காரணமாக இருந்தது. இணக்கமாக இருந்து நீட்டை தமிழ்நாட்டில் கொண்டு வந்தீர்கள். இணக்கமாக இருந்து வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதலாம் என்று கொண்டு வந்தீர்கள். அதிமுக பாஜகவுடன் இணக்கமாக இருந்து தமிழ்நாட்டு உரிமைகளை எல்லாம் காவு கொடுத்தார்கள் என்பதுதான் உண்மை.
மைனஸில் இருந்த தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை 11.19க்கு மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துட்டாரு. விஜய் பாராட்டினாரா? ஜிஆரில் தமிழ்நாடு தான் முதலிடம் விஜய் பாராட்டினாரா? பெண்களுக்கு இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார் விஜய் பாராட்டினாரா? கல்வியில் சிறந்த தமிழ்நாடாக இன்றைக்கு தமிழ்நாடு மாறி நிற்கிறது விஜய் பாராட்டினாரா? பட்டியல் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு அம்பேத்கர் அயலக கல்வி திட்டம் கொண்டு வந்து உயர் கல்விக்கு வெளிநாட்டுக்கு அனுப்பி இருக்காங்க. இன்னும் நான் திட்டங்களை அடுக்குவேன்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பவர்கள் எல்லோருடைய மனநிலையும் எப்படி ஆகிவிட்டது என்று பார்த்தால் 'எல்லோரும் என்னைத்தான் பார்க்கிறார்கள். எல்லாப் பிரச்சனையும் என்னை சுற்றி தான் நடக்கிறது' என்ற மனநிலையில் தான் அவர் சுற்றுகிறார். அட்டென்ஷன் சீக்கிங் தேவைப்படுகிறது. அவர் அட்டென்ஷன் சீக்கிங்கிற்காக எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கிறார்.
அதிமுகவின் மூத்த முன்னாள் நிர்வாகி செங்கோட்டையன் பாஜகவில் இணைந்துள்ளார். அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?
கரூரில் 41 பேர் மரணத்திற்கு காரணமான பேருந்து தயாராகி கொண்டிருக்கும் போதே நான் சொன்னேன். அதிமுகவிற்குள் ஒரு சலசலப்பு தெரிகிறதே என்ற ஒரு கேள்வி வருகின்ற பொழுது, எழுதி வச்சுக்கோங்க செங்கோட்டையனை தவெகவை நோக்கி பாஜக நகர்த்தும். அதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கு என்று நான் முன்னரே சொன்னேன். இது எல்லாம் அமித்ஷாவோட பிளான். 20 ஆண்டு கால ஊடக அனுபவத்தில் நிறைய செய்திகள் ஆதாரங்களுடன் இருக்கு. ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று பலரும் சொல்லும்போது ஆரம்பிக்க மாட்டார் என்று நான் தான் சொன்னேன். 2024 தேர்தலில் பாஜக தோற்றுவிடும் என எல்லோரும் சொன்னபோது இல்லை பாஜக தான்ஆட்சிக்கு வரும். ஆனால் 300 சீட்டு ஜெயிக்க மாட்டார்கள். அரவுண்ட் 250 சீட் கிடைத்து தனிப்பெரும் கட்சியாக வரும். ஆனால் தனி பெரும்பான்மை கிடைக்காது என்று நான் தான் சொன்னேன். ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைவார் என்பதை நான் தான் முதலில் சொன்னேன்.
அதேபோல் செங்கோட்டையன் அங்கு இணைவார் என்பதை இரண்டு மாதத்திற்கு முன்னாடியே நான் யூகித்தேன். செங்கோட்டையன் போகணுமா வேண்டாமா எல்லாமே யாரு கையில் இருக்கிறது எனக் கேட்டால் அமித்ஷா கையில்தான் இருக்கு. அமித்ஷா ஒரு பிளான் போடுறாரு. அதனால்தான் செங்கோட்டையன் போய் அமித்ஷாவை சந்தித்தார்.
அமித்ஷாவுடைய திட்டம் தமிழ்நாட்டில் பாஜக உள்ளே வரவேண்டும். திமுக எதிர்ப்பு வாக்கு முழுக்க பாஜகவுக்கு போகணும். அப்போதான் பாஜக உள்ளே வரும். திமுக எதிர்ப்பு வாக்கு ஸ்ட்ராங்கா இதுவரைக்கும் அதிமுக கிட்ட இருக்கிறது. அப்போது அதிமுக பலவீனப்படனும். நிச்சயமாக ஸ்ட்ராங்கா இருக்கும் திமுக வாக்காளர்கள் ஒருபோதும் பாஜகவுக்கு ஓட்டு போடப் போறது இல்லை. ஆனால் அதிமுகக்காரங்க பாஜகவுக்கு ஓட்டு போட வாய்ப்பு இருக்கிறது. எனவே முதலில் அதிமுகவை பலவீனப்படுத்துவோம். அதற்கு என்ன பண்றது? அந்த வேலையை அமித்ஷா ஆரம்பிக்கிறார். அந்த வேலைத் திட்டத்தினுடைய ஒரு பகுதிதான் டி.டி.வி பாஜக கூட்டணியை விட்டு வெளியே நிற்பது. ஓபிஎஸ் பாஜக கூட்டணியை விட்டு வெளியே நிற்பது. செங்கோட்டையன் வெளியில் நிற்பது. இது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். தெரிஞ்சுதான் அவர் துணை போகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து நின்றதே அதிமுக பாஜகவோட டிராமா.
Follow Us