தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திராவிட வெற்றிக் கழகத்தின் முதன்மை செயலாளர் வல்லம் பசீர் தன்னுடைய அரசியல் பார்வைகளை நக்கீரனின் 'அரசியல் சடுகுடு' நிகழ்ச்சில் பகிர்ந்துகொண்டார்.
திருமாவளவன் போராட்டம் ஒன்றில் பேசுகையில் சீமான், விஜய் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என சொல்கிறார். இதற்கு சீமான் தரப்பு பதிலடி கொடுக்கிறார்கள். விஜய் ஒரு அறிக்கையில் திமுக தான் பாஜகவின் பழைய அடிமை என பதில் கொடுத்திருக்கிறார். எப்படி பார்க்கிறீர்கள்?
விஜய் ஒரு கருத்தை அறிக்கையாக கொடுப்பதற்கு முன்பு கொஞ்சம் யோசிக்க வேண்டும். நீங்கள் பேசுவதற்கு எப்படி யோசிச்சுக்கிட்டே பேசாமலேயே இருக்கீங்களோ அதே மாதிரி அறிக்கை கொடுப்பதற்கும் யோசிச்சிட்டு அறிக்கை கொடுக்காமல் இருப்பதே விஜய்க்கு நல்லது. ஏனென்றால் இங்கு ஆளுனரை வைத்து அரசை இயக்க ஒன்றிய அரசு முயற்சி செய்தது. இந்திய ஒன்றியம் முழுமைக்கும் இதை செயல்படுத்தினார்கள். மேற்கு வங்கத்தில முதலமைச்சருக்கு ஆளுநர் மூலம் நெருக்கடி. கேரளாவில முதலமைச்சருக்கு ஆளுனர் மூலம் நெருக்கடி. சண்டை போட்டார்கள். ஆனால் ஒரு சண்டமாருதம் நடத்தி அந்த ஆளுனருக்கு ஒரு கடிவாளம் போட்டது யாரென்றால் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர். அவர் தமிழ்நாட்டுக்கு மட்டும் கடிவாளம் போடவில்லை ஒட்டுமொத்த இந்திய துணைக் கண்டத்திற்கும் கடிவாளம் போட்டார். அப்போது யார் அடிமை? யார் எதிர்த்து நின்றது?
முழுமையாக இந்த மாநிலத்தினுடைய நலன் சார்ந்து சிந்தித்து தீர்ப்பே வந்தாலுமே கூட தனக்கு இருக்கிற அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி களத்தில் நின்றது யார்? திமுக தான். இந்த அரசுதான். இப்போது சொல்லுங்க யார் அடிமை? மகாத்மா காந்தியினுடைய பெயரையே இல்லாமல் செய்ய வேண்டும் என சொல்லி கோட்சேவினுடைய கும்பல் காந்தியின் பெயரை சட்டம் இயற்றி மாற்றுகிறார்கள். 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கிறார்கள். இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதும் திமுகதான். இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்துவதும் திமுகதான்.
நீங்க (விஜய்) ஒரு வார்த்தை பேசி இருக்கீங்களா? 100 நாள் வேலை திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா? அப்போது யார் அடிமை? நீங்கள் முழு அடிமையாக இருந்துவிட்டு திமுகவை பார்த்து அடிமை என்று சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா. இந்த வேலையை விஜய் செய்யலாமா? ஆனால் விஜய் தொடர்ச்சியாக இதைச்செய்கிறார். அவருடைய திமுக எதிர்ப்பு அவருடைய கண்களை மறைக்கிறது. திருமாவளவன் ரொம்ப அழகா சொன்னார். இதற்கு ஏன் நாம் தமிழர் கட்சி கொந்தளிக்கிறீங்க. மேடை போட்டு பட்டிமன்றம் நடத்தி தந்தை பெரியார் அவர்களை இழிவாக பேசச் சொல்லி பெண்களை மேடையில் அமர்த்தி உட்கார வைத்து கீழே உட்கார்ந்து குழுங்கி குழுங்கி சிரிக்கிறாரே சீமான். இது யார் செய்ற வேலை?
இன்றைக்கு அந்த பெண்கள் மேடை ஏறி இருக்கிறாக்கள் என்றால் அந்த மேடையை அமைத்து கொடுத்தவர் தந்தை பெரியார் என்பதை மறந்திட கூடாது. தந்தை பெரியார் இல்லை என்று சொன்னால் பெண்களுக்கான சுதந்திரம் என்பது முழுமையாக மறுக்கப்பட்டிருக்கும் இதுதான் எதார்த்தமான உண்மை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/31/189-2025-12-31-14-11-52.jpg)
ஆனால் ஆர்எஸ்எஸ்னுடைய அஜெண்டா என்னவோ அதை நேரடியாக செயல்படுத்துவதற்கு முனைகிறார் சீமான். தமிழ்நாட்டுக்கு 'இன்ப தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியவர் அண்ணா இல்லையா. சுந்தரலிங்கனார் ஏன் உண்ணாவிரதம் இருந்து இறந்து போனார். 'பாரதி பாடிட்டான் பாரதி பாடுறதுக்கு முன்னாடி நீங்க பேர் வச்சீங்களா? இல்ல நீங்க பேர் வைக்கிறதுக்கு அப்புறம் பாரதி பாடினானா'' என்று கேட்குறீங்களே அயோக்கியத்தனம் இல்லையா? இது ஆர்எஸ்எஸ்னுடைய குரல் இல்லையா? பாரதி பாடினார். ஆனால் சட்டம் இயற்றும் இடத்தில் பாரதி இருந்தாரா? சட்டம் இயற்றியவர் அண்ணா. வரலாற்றில் யார் இடம் பெறுகிறார்கள் என்பதுதான் முக்கியம். இடம் பெற்றவர் அண்ணாதான். பாரதி இடம் பெறவில்லை. பாரதி பாட்டு எழுதியதோடு அவர் வேலை முடிஞ்சு போச்சு.
ஆர்எஸ்எஸ் விமர்சனம் கூட மென்மையா இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு நாம் தமிழர் கட்சியில் பேசுவதைக் கேட்டால் ஹெச்.ராஜா பேசுவதைவிட விட மோசமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மோகன் பகவத் பேசுவதை விட மோசமாக இருக்கிறது. உங்களுடைய கோபத்துக்கு என்ன காரணம் நீங்கள் பச்சையான ஆர்எஸ்எஸ் வளர்ப்பு என்பதை சமீபகாலமாக உங்கள் மேடையில் நீங்கள் உணர்த்திக்கொண்டே இருக்கீங்க. அதைத்தான் திருமாவளவன் வெளிப்படுத்தி பேசி இருக்கிறார். நாம் தமிழர் கட்சி திருமாவுக்கு காட்டுகிற எதிர்ப்பும், முதலமைச்சரின் கருத்துக்கு விஜய் சொல்லியிருக்கிற பதிலும் ஒரே நேர்கோட்டில் வந்து நிற்கிறது. இவர்கள் இருவருமே ஆர்எஸ்எஸ் வளர்ப்பு பிள்ளைகள்'
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/31/190-2025-12-31-14-10-15.jpg)