v

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அவ்வப்போது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிவருகிறார். இது குறித்து சீமான் வெளிப்படையாக எதுவும் பேசாமால் இருக்கும்போது, அவரின் தொண்டர்கள் விஜலட்சுமிக்கு விடுக்கும் மறுப்பு பேச்சுக்களுக்கு பதிலடி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் விஜயலட்சுமி.

Advertisment

சீமான் தரப்பினர் தன்னை கொச்சைப்படுத்தி திட்டிவிட்டதாக கூறி, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜயலட்சுமி நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சீமானையும், அவரது தொண்டர்களையும் சகட்டுமேனிக்கு திட்டியதோடு அல்லாமல், ’’நீங்கள் மன்னிப்பு கேட்கும் வரைக்கும் விடமாட்டேன். நான் ரொம்ப நொந்து போயிருக்கிறேன். சீமானை தப்பிக்க விடமாட்டேன். கமிஷனர் அலுவலத்தில் சாகும்வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். சீமானை தூக்கி உள்ளே போடும் வரைக்கும் போராடுவேன்’’என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் இன்று, சீமானின் தூண்டுதலால் அவரது கட்சியினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து, சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்தி தகவல் பரப்புவதாகவும், சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கட்சி மேடைகளில் தன்னை பற்றி அவதூறாக பேசி வருவதாகவும், இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார் விஜயலட்சுமி.