Advertisment

"துப்பாக்கி குண்டுகள் வீணாகும் என்ற காரணத்தினால் தாய்க்கு முன்பாக குழந்தைகளை ஒட்டி நிறுத்தி.." - உலகப்போரின் மறக்க முடியாத உண்மைகள்!

நாங்கள் சரணடயமாட்டோம், எக்காலத்திலும் நடக்காது. ஒருவேளை நாங்கள் அழிய நேரலாம். அப்படி ஒரு சூழல் வந்தால் மொத்த நபர்களையும் சேர்த்து நாங்களும் அழிந்து போவோம் - ஹிட்லர்.

Advertisment

1938 -ம் ஆண்டின் தலைசிறந்த மனிதர் என ''டைம்'' பத்திரிகை அட்டைப் படத்தில் போட்டு மரியாதை செய்த ஹிட்லரின்மறுபக்க கோரமுகம்தான் மேல காணும் வார்த்தைகள். ஹோலோகாஸ்டன் என்ற கிரேக்க வார்த்தையில் பிறந்த ஹோலோகாஸ்ட் என்பதன் அர்த்தம் நெருப்பில் இட்டு பலி கொடுப்பது. ஆடு,கோழி பலி கொடுப்பது போல, கொலை செய்வது. உலகம் முழுக்க ஹோலோகாஸ்ட்டை செயல்படுத்தியது ஹிட்லரின்போர் வெறி. உலகப்போருக்குமுன்1922 -ல் ஒரு பத்திரிக்கை பேட்டியில் ''எனக்கு மட்டும் அதிகாரம் முழுமையாக கிடைத்துவிட்டால் நான் செய்யும் முதல் வேலை யூத இன அழிப்பாகத்தான் இருக்கும். வரிசைவரிசையாக தூக்கு மேடைகள் அமைப்பேன். என்னால் எத்தனை தூக்கு மேடைகள் அமைக்க முடியுமோ அத்தனையும் அமைப்பேன். பின் யூதர்கள் தூக்கில் போடப்படுவார்கள். உடல் அழுகி துர்நாற்றம் வரும்வரை பிணங்கள் அங்கேயே தொங்கிக் கொண்டு இருக்க வேண்டும். சுகாதாரம் அனுமதிக்கும் வரை அங்கேயேதான் தொங்க வேண்டும். பின்னர் கயிற்றில் இருந்து விடுவித்து விட்டு அடுத்த குழுவை தூக்கிலிடுவோம். உலகின் கடைசி யூதன் இருக்கும் வரை இந்த என் பணி தொடரும்.

Advertisment

v

போர் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும் வேளையில் கொடுத்த வாக்கை காப்பாற்ற ஆரம்பித்தார். தூக்கு மேடைகளோடு விடவில்லை. பலவகையான (various) முறைகளில் மனிதர்களை கொல்வதற்காக தனியாக ஒரு அரசுத்துறை ஓன்று ஆரம்பிக்கப்பட்டது. கொல்லப்பட வேண்டியவர்களின் பிறப்புசான்றிதழ்கள் மற்றும் முழு விலாசமும் அரசுத்துறைகளில் இருந்தே மொத்தமாக பெறப்பட்டது. தபால் அலுவலகங்கள் யூதர்களை நாடுகடத்தும் உத்தரவு மற்றும் குடியுரிமை பறிப்பு ஆணைகள் அச்சிட்டு கொலையாளிகளிடமே தந்தன. யூதர்களின் சொத்துக்கள் பறிப்பு நடவடிக்கைகள் அரசு நிதித் துறையின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

பணிபுரியும் யூதர்கள் அனைவரையும் வேலைகளை விட்டு வேளியேற்றும்படி முதலாளிகளுக்கு அரசுஆணை அனுப்பப்பட்டது. மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளில் இருந்து துரத்தியடிக்கப்பட்டனர். கைவசம் அட்ரஸ் இருந்ததால் கதவுகள் உடைக்கப்பட்டு யூதர்கள் கும்பல் கும்பலாக கைது செய்யப்பட்டனர். அரசு வாகனங்கள் அவர்களை கொலைக் களத்துக்கு அழைத்து சென்றன.மருத்துவ பரிசோதனைகளுக்கு எலி முயல்கள் அவசியப்படவில்லை. விலையின்றி மனிதர்களே கிடைத்தனர். கண் காது தோல் தொடங்கி அணைத்து பாகங்களிலும் ஆராய்ச்சி செய்யலாம். தங்கப்பல்கள் சேமித்து வைக்க அழகு வேலைப்பாடுகளுடன் கூடிய பெட்டிகள் விற்பனை சூடு பிடித்தது.பெரும் குழிகள் வெட்டி வரிசையாக நிறுத்தி வைத்து சுட்டு கொன்று உள்ளே தள்ளப்பட்டனர்.

துப்பாக்கி குண்டுகள் வீணாகும் என்ற காரணத்தினால் தாய்க்கு முன்பாக குழந்தைகளை ''ஒட்டி நிறுத்தி'' ஒரே குண்டில் இரு உயிர்களை கொல்லும் வேடிக்கைகள் காட்டப்பட்டன. துப்பாக்கியால் ''சுட்டு கொல்வது சலிப்பு'' ஏற்படுத்திய காரணத்தினால் விஷவாயு பரிசோதனைகள் நடைமுறை படுத்தப்பட்டன.பதினாறு சதுர அடிகள் கொண்ட 4 க்கு 4 தடுப்புகளுக்குள் நான்கு பேர் சாகும் வரை நின்று கொண்டே இருப்பது போன்ற நவீன தண்டனைகள் முன் மொழியப்பட்டன. இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடிக்கும் மேல். இதில் யூதர்களின் எண்ணிக்கைமட்டும் 1 கோடிக்கும் மேல். காரணம் ஹிட்லரின் இனவெறி. போர்வெறி. இனி ஒரு உலகப்போர். தேவையா?. வேண்டாம்.அமைதியான வாழ்வியலே உலக மக்களின் தேவை .

hitler
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe