AIADMK

Advertisment

‘என்னை எதிர்த்தால் மீண்டும் 1989’ என்பதில் உறுதியாக இருந்த சசிகலா, ‘அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து..’ என அறிக்கை வெளியிடும் அளவுக்கு நிலைமை மாறிப்போனது ஏன்? என்ற நமது கேள்விக்கு சற்று விரிவாகவே பதிலளித்தார் அந்த ‘சின்னம்மா’ விசுவாசி –

“ஜெயலலிதாம்மா சொல்லாததையா சின்னம்மா சொல்லிட்டாங்க? 1989-ல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரா அம்மா இருந்தப்ப.. அவர் எழுதிய ராஜினாமா கடிதம் ‘லீக்’ ஆகி பரபரப்பாச்சு.. அந்த லெட்டரில் என்ன சொல்லிருந்தாங்க?‘அரசியலில், எனது ஏழாண்டு கால பொதுவாழ்வில் நான் கண்ட ஒரே லாபம் – அவமானமும் கீழ்த்தரமான இழிசொற்களும்தான். அரசியலில் ஈடுபட்ட ஒரே காரணத்திற்காக, இதுவரை வேறு எந்தப் பெண்ணிற்கும் நேர்ந்திராத கொடுமையெல்லாம் எனக்கு நடந்திருக்கிறது.’ என்று தனது உடல் நிலையைக் காரணம் காட்டி, ‘அரசியலைவிட்டு விலகுகிறேன்’ என்று எழுதியிருந்தாங்க. அம்மா அரசியலை விட்டு விலகவா செய்தார்கள்? சாகும் வரையிலும் முதலமைச்சராக அல்லவா இருந்தார்கள்?

 AIADMK

Advertisment

சின்னம்மாவுக்கும் அந்தமாதிரி ஒரு நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனநிலையில் இருக்காங்க. மனுஷன்னா சூழ்நிலைக்கு ஏற்ப மனசு மாறும் இல்லையா? அதுதான் நடந்திருக்கிறது. அறிக்கை வெளியிடறதுக்கு முன்னால சின்னம்மா வீட்டு வாசல்ல எந்த போலீசும் நிற்கல. இப்ப பாருங்க.. நூற்றுக்கணக்குல போலீஸை குவிச்சிருக்காங்க.

ஜாதி பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க.. நான் தேவருன்னு சொல்லிக்கிட்டு, மக்கள்ட்ட ஓட்டு கேட்டுப் போறதுல, சின்னம்மாவுக்கு சுத்தமா விருப்பம் இல்ல. அதிமுகவுக்கு போறதும் நடக்கிற மாதிரியில்ல. தினகரனுக்குப் பின்னாலயோ, முன்னாலயோ போனா, அதிமுக தோற்றதுக்கு காரணம் சசிகலாதான்னு ஊரு உலகம் பேசும். அம்மா இறந்தப்ப.. கட்சியோட பொதுச்செயலாளரா இருக்கேன்னு சின்னம்மா சொன்னாங்க. தினகரன்தான் சின்னம்மாவ முதலமைச்சர் ஆயிடலாம்னு மண்டைய குழப்பினாரு. இப்ப தினகரனுக்கு முதலமைச்சர் ஆகணும்கிற வெறி வந்திருச்சு.

‘எனக்கு ஓட்டு கேட்டு களத்துக்கு வரணும். இல்லைன்னா வெளிப்படையா எங்களுக்கு (அமமுக) ஆதரவு தெரிவிச்சு அறிக்கை விடணும். ஆளும்கட்சியா இருந்தும் அதிமுகவுல ஏழு நாள்ல 6,000 பேர் கூட விருப்பமனு கொடுக்கல. எனக்காக ஒரு தடவை நீங்க வாய்ஸ் கொடுத்தா போதும். 234 தொகுதிக்கும் இருபதாயிரம் பேரை விருப்பமனு கொடுக்க வைக்கிறேன்.’ என்று டிடிவி தினகரன் கொடுத்த நெருக்கடியில், சின்னம்மாவால் என்ன பண்ண முடியும்? ஒதுக்கியிருந்து அதிமுக வெற்றிக்காகப் பிரார்த்தனை பண்ணுறேன்னு அவசர அவசரமா அறிக்கை வெளியிட்டுட்டாங்க.

Advertisment

 AIADMK

அமமுகவுக்கு சசிகலா ஓட்டு கேட்டதுனால அதிமுக தோற்றுப்போச்சுன்னு வரலாறு சொல்லிடக்கூடாதுல்ல. அதே நேரத்துல, சசிகலாவ அதிமுகவுல சேர்த்துக்கிடாததுனால, அந்தக் கட்சி தோற்றுப்போனதுன்னு வரலாறு பதிவு பண்ணுறதுதான் சரியா இருக்கும்கிற மனநிலைலதான் சின்னம்மா இருக்காங்க.

நேற்று (3-ஆம் தேதி) வீட்டுக்குள்ள சின்னம்மாவோட கடுமையா டிடிவி சண்டை போட்டாரு. வீட்ல சசிகலா - பொதுச் செயலாளர்ங்கிற லெட்டர் பேடு இருக்கு. அதுல எக்ஸ்-ன்னு போட்டுகூட அறிக்கை விட்டிருக்கலாம். ஆனாலும், கடகடன்னு டைப் அடிக்க வச்சி, வெள்ளை பேப்பர்ல சின்னம்மா அறிக்கை தயார் பண்ணுனாங்க. அதுவும் கீழேயிருந்து மேல வர்ற மாதிரி, அவசர அவசரமா அறிக்கை வாசகத்த அவங்களே சொன்னாங்க.

 AIADMK

எடப்பாடி மேல கோபமும் விரக்தியும் சின்னம்மாவுக்கு ரொம்ப இருக்கு. ஆனாலும்.. அக்கா வளர்த்த கட்சியேன்னு பார்க்கிறாங்க. சின்னம்மா வயித்தெரிச்சல வாங்கிக் கட்டிக்கிட்ட எடப்பாடியால தேர்தல்ல ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆகக்கூட முடியாது. அந்த தொகுதில அதற்கான வேலையெல்லாம் சத்தமில்லாம நடந்துக்கிட்டிருக்கு.

 AIADMK

மொத்தத்துல அரசியல்ல இருந்து ஒதுங்குறேன்னு சின்னம்மாகிட்ட இருந்து அறிக்கை வந்ததுக்கு காரணமே டிடிவி-தான். ஒதுங்கிறேன்னு சொல்லிருக்காங்க. விலகுறேன்னு சொல்ல. தேர்தல் முடிவுகள் வெளியானதும்,என்னென்ன நடக்கப்போகுதுன்னு பார்க்கத்தானே போறோம். அதுவரைக்கும், தன்னுடைய கோபதாபங்களை உள்ளுக்குள்ளே அடக்கிவைத்து, தான் நினைத்தது நிறைவேறுவதற்காக,கடுமையான பிரார்த்தனையில் சின்னம்மா ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்.” என்று பெருமூச்சுவிட்டார்.

‘அக்கா’ ஆசி சசிகலாவுக்கு கிடைக்குமா? வேண்டுதல் நிறைவேறுமா?