Advertisment

சேலத்தில் 70 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

சேலத்தில் கரோனா நோய் தொற்றின் பாதிப்புஅதிகம் இருக்கும் இடங்களாக சந்தேகிக்கப்படும் 70 இடங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியே செல்லவும், வெளிநபர்கள் இப்பகுதிகளுக்குள் நுழையவும் கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சேலம் மாவட்டத்தில் ஏப். 13ம் தேதி நிலவரப்படி, 18 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாநகரில், கரோனா நோய்த்தொற்று உள்ளவர்களிடம் நேரடி, மறைமுக தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

தடை செய்யப்பட்ட பகுதிகள் விவரம் வருமாறு:

சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 2வது வார்டில் அம்மாபாளையம் மெயின் ரோடு, கே.கே. நகர், பொன் நகர், 19வது வார்டில் ஆசாத் நகர், தர்மன் நகர், சுப்ரமணிய நகர், அம்மாபாளையம் மெயின் ரோடு ஆகிய 7 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisment

Salem

அஸ்தம்பட்டி மண்டலத்தில் 29வது வார்டில் ஜம்புலிங்கம் தெரு, தொட்டு சந்திரய்யர் தெரு, தேவாங்கபுரம் புதுத்தெரு, குமாரசாமி தெரு, 30வது வார்டில் எ.வி.அய்யர் தெரு, பங்களா தெரு, கண்ணார தெரு, சையத் மாதர் தெரு, லாடகார தெரு, மாணிக்கம் தெரு, நாகேஷ் தெரு, மஜித் தெரு, பைகார தெரு, சாய்பாபா தெரு, அப்புச்செட்டி தெரு,31வது வார்டில் சின்னசாமி தெரு, ஜலால்கான் தெரு, துவால் அஹமத் தெரு, குண்டுபோடும் தெரு, அண்ணா நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, ஜானியன் தெரு, சையத் காசிம் தெரு, முகமது காசிம் தெரு, வெங்கடாசாமி தெரு, ஆர்.டி.பால் தெரு ஆகிய 27 இடங்கள் தடை செய்யப்பட்டு உள்ளன.

அம்மாபேட்டை மண்டலத்தில் 33வது வார்டில் முத்தவல்லி யாகூப் தெரு, முகமது புறா தெரு, பழைய மார்க்கெட் தெரு, லட்சுமி நகர், சின்னக்கடை வீதி, ஆசாத் தெரு, வ.உ.சி மார்க்கெட்; 36வது வார்டில் பட்ட நாயக்கர் காடு, வையாபுரி தெரு, சவுடேஸ்வரி அம்மன் கோயில் தெரு; 43வது வார்டில் சீனிவாசா நகர், பால விநாயகர் தெரு, அண்ணா நகர், அழகு நகர், தரணி கார்டன், சன்னியாசிக்குண்டு; 44வது வார்டில் காளி கவுண்டர் காடு, களரம்பட்டி மெயின் ரோடு ஆகிய 19 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாகும்.

nakkheeran app

கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 46வது வார்டில் நரசிங்கபுரம் தெரு, 48வது வார்டில் நெய்மண்டி அருணாசலம் தெரு எண்: 2, தொல்காப்பியர் தெரு, லைன் ரோடு, 56வது வார்டில் கருங்கல்பட்டி தெரு எண்: 1, 2, 3 மற்றும் 4, பாண்டுரங்க விட்டல் தெரு எண்: 1, 2, 3 மற்றும் 4, களரம்பட்டி தெரு எண்: 1, 2, 3, 4, தெற்கு முனியப்பன் கோயில் தெரு, தெற்கு பிள்ளையார் கோயில் தெரு, செங்கல்பட்டி தெரு எண் 1, 2, 3 மற்றும் 4, வடக்கு முனியப்பன் கோயில் தெரு, கல்கி தெரு, 57வது வார்டில் களரம்பட்டி மெயின் ரோடு தேவி தியேட்டர் முதல் எருமாபாளையம் பஞ்சாயத்து வரை, அண்ணா வாத்தியார் தெரு, களரம்பட்டி கிழக்கு தெரு, பண்டிதர் நேரு தெரு, நேதாஜி நகர் ஆகிய 17 இடங்கள் தடை செய்யப்பட்டு உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களிலும் மொத்தம் 70 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாநகராட்சி ஆணையர் சதீஸ் அறிவித்துள்ளார்.இப்பகுதிகளைச் சுற்றியுள்ள 3 கி.மீ., தொலைவு வரை உணவகம், மளிகை, பேக்கரி உள்ளிட்ட அனைத்து வகை அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் வெளி நபர்கள் உள்ள செல்லவும், மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, மளிகை முதல் பால், மருந்து பொருள்கள்வரை அவர்களைத் தேடி வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். இதற்காக 14 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. தடை செய்யப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த ரேஷன் கடைகள் அனைத்தும் அருகில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களுக்கு மாற்றப்படுகிறது.இந்த உத்தரவை மீறி செயல்படும் கடைகள், நிறுவனங்கள், ஆட்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆணையர் எச்சரித்துள்ளார்.

corona virus Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe