Skip to main content

நடிகை, நடிகர்களை தூக்கிக்கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் ஒருநாள் அழிந்து போகும் - சபரிமாலா கோபம்!

Published on 12/11/2020 | Edited on 12/11/2020
hjk

 

 

மனுநீதி தொடர்பாக சர்ச்சையை எழுந்த நிலையில், இதுதொடர்பாக பாஜகவினர் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இதனை எதிர்த்தும் மனுநீதியை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆசிரியர் சபரிமாலா பேசியதாவது, "கடந்த 10 நாட்களாக பேசி பேசி போதும் போதும் என்று சொல்லுமளவுக்கு ஒரு கருத்தை நேரிலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் நாம் முன்வைத்தோம். தற்போது அதனை ஒட்டியே இந்த கூட்டமும் நடைபெற்று வருகின்றது. விபச்சாரிகள் என்று என்னுடைய பெயரையும் இணைந்து மனுநீதிக்கு ஆதரவானவர்கள் பொய் பரப்புரைகளை செய்கிறார்கள் என்று என்னிடம் இதற்கு முன் இங்கே பேசிய தோழர் சொன்னார். தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று முத்து லெட்சுமி அம்மையார் போராடியபோது, தேவதாசிகளை எல்லாம் ஒன்று சேர்த்து போராட வைத்த அந்த கும்பல்தான் இன்றைக்கு எல்லா வாட்ஸ் அப் குழுக்களிலும் சபரிமாலாவை விபச்சாரி என்று சொல்லி கருத்தை பதிவிட்டு வருகிறார். உங்களுடைய எந்த மிரட்டல், உருட்டல்களுக்கும் நாங்கள் பயந்தவர்கள் அல்ல. பாஜகவின் முகமாக எத்தனை பேர் இருக்கிறார்கள், எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும், அதுவரை விடமாட்டோம் என்று யாருடைய குரல் முதலில் வெளிவந்தது, ஒரு நடிகையின் குரல், குஷ்பு என்கிற ஒரு நடிகையில் குரல்.

 

என்ன மிஸ்டர் திருமாவளவன், என்று வேறு ஒரு குரல் வெளியே வருகிறது. காயத்ரி ரகுராம் என்கிற ஒரு நடிகையின் குரல். ஏன், திருமாவளவனை எதிர்த்து உங்கள் சித்தாந்த ரீதியான கருத்துகளை முன்வைக்க ஆண்மையுள்ள தலைவர்கள் யாரும் பாஜகவில் இல்லையா? இரண்டு நடிகைகளை கூப்பிட்டு வந்து எவ்வளவு மோசமாக, எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சனங்களை முன்வைக்க முடியுமோ அவ்வளவு வசவுகளை எங்கள் மீது வீசுகிறீர்கள். என்ன குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது, திருமா பெண்களுக்கு எதிராக பேசிவிட்டார் என்று. அடுத்த இரண்டு நாள் கழித்து இந்து பெண்களுக்கு எதிராக அவர் பேசிவிட்டார் என்று அது மாற்றப்படுகின்றது. அவர்களுக்கு மதம் படித்திருக்கிறது, அந்த மதம் பிடித்த யானைகள் சுதந்திர எண்ணத்தோடு களமாடும் விடுதலை சிறுத்தைகளுடன் களமாட முடியாது, தோல்வியில்தான் உங்கள் நோக்கம் முடியும். ஒருபோதும் அவர்களால் வெற்றி பெற முடியாது. நான் பல போராட்டங்களில் கலந்துகொள்ள செல்கிறபோது மனு தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்று பல்வேறு இடங்களில் என்னை நோக்கி கருத்துகளை முன்வைக்கிறார்கள். ஒரு நடிகை ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது தொலைக்காட்சிகளில் பிளாஷ் நியூஸ் செய்யப்படுகிறது. இதை தமிழ்நாட்டின் அவமானமாக பார்க்கிறேன்.

 

அந்த செய்தியின் மூலம் தமிழக மக்களுக்கு என்ன நல்லது நடந்துவிட போகிறது என்று தெரியவில்லை. தாவுபவர்கள் தொடர்ந்து அதை செய்துகொண்டுதான் இருப்பார்கள். அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. இந்த மனுவுக்கு எதிராக பேசுபவர்களுக்கு மிரட்டல் விடுப்பதை பற்றி என்னிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அவர்களுக்கு என்னுடைய பதிலாக காலில் இருப்பதை கழட்டி காட்டினேன். சேற்றைவாறி வீசும் அவர்களுக்கு பெண்கள் அளிக்கும் தண்டனை அதுவாகத்தான் இருக்கும். பெண்களை கிள்ளுக்கீரையாக அவர்கள் நினைத்து வந்தார்கள். இன்றளவும் அதையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். மனு இப்போது எங்கே நடைமுறையில் இருக்கிறது என்று எல்லோரும் பேசுகிறார்கள், 40 போராட்டங்களில் ஈடுபட்டு அரசியல் செய்துவரும் நபர்களை பற்றி ஒரு சின்ன செய்தியையும், ஒரு தொலைக்காட்சியும் போடுவதில்லை. ஆனால் ஒரு நடிகர் கட்சி தொடங்கிவிட்டால் அது பிளாஷ் நியூஷ் ஆகிறது. ஒரு நடிகர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கிறார் என்றால் அது ஒரு பிரேக்கிங் நியூஸ்.  தமிழ்நாட்டின் நிலைமை இப்படி ஆகிவிட்டது. நடிகைகளையும், நடிகர்களையும் தூக்கிக்கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் ஒருநாள் அழிந்து போகும். புரட்சியையும், எழுச்சியையும் சின்ன சின்ன சேனல்கள் கொண்டு செல்கிறார்கள். நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், இன்றைக்கு சின்ன அளவில் தொடங்கப்பட்டுள்ள அந்த யூ டியூப் சேனல்கள் தான் நாளைய தமிழகத்தின் வரலாற்றை எழுதபோகிறது" என்றார்.

 

 

Next Story

சபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம்; கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
Sabarimala crowd issue; High Court orders action to Kerala Govt

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்தக் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த சூழலில், சபரிமலையில் இந்த ஆண்டுக்கான, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சபரிமலை நிர்வாகம் இது தொடர்பாக பக்தர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

வழக்கமாக டிசம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கு மேல் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம், இந்த ஆண்டு பூஜைக் காலத்தின் ஆரம்பத்திலேயே மிகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது.  இருப்பினும் சபரிமலை மகர விளக்கு பூஜையை ஒட்டி பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சபரிமலை தரிசனத்திற்கு ஏற்கனவே ஆன்லைன் மூலம் 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.  நேரடி முன்பதிவுக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்றும்,  இது வழக்கமாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக 20 ஆயிரம் பக்தர்கள் அதிகமாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும் வழித்தடத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களின் குறைகளை சரி செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் போலீஸ் டிஜிபி தலையிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கோஷத்தை மாற்றிய ஐயப்ப பக்தர்கள்; பரபரப்பை பற்ற வைத்த இரவு நேரம் - கோவையில் பரபரப்பு

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
Propaganda by Tamil Nadu Police who stopped Ayyappa followers in Coimbatore

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்தக் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், சபரிமலையில் இந்த ஆண்டுக்கான, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சபரிமலை நிர்வாகம் இது தொடர்பாக பக்தர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். வழக்கமாக டிசம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கு மேல் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம், இந்த ஆண்டு பூஜைக் காலத்தின் ஆரம்பத்திலேயே மிகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

இதற்கிடையில், கடந்த 12 ஆம் தேதி காலை 6 மணியளவில் ஆந்திராவில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்லும்போது, திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுள்ளனர். உள்ளே சென்ற ஐயப்ப பக்தர்கள், கோவிலின் மூலஸ்தானம் அருகே சென்று கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டுள்ளனர். அப்போது, உள்ளே இருந்த ஊழியர்கள் சிலர், அவர்களை வேகமாக நகர்ந்து செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால், ஐயப்ப பக்தர்களோ பக்தி மிகுதியால் விலகிச் செல்லாமல், அங்கேயே நின்றதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கோவில் பணியாளர்கள் ஐயப்ப பக்தர்கள் மீது கைவைத்து தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த ஐயப்ப பக்தர்கள் கூச்சலிட்டுள்ளனர். உடனே அவர்களை கோவில் ஊழியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு சில நிமிடங்களிலேயே முற்றியுள்ளது. அப்போது, ஐயப்ப பக்தர்கள் சார்பில் பேசிக்கொண்டிருந்த சென்னா ராவை கோவில் பாதுகாவலர்கள், மேலே கைவைத்து தள்ளியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஐயப்ப பக்தர் சென்னா ராவ், தங்களை ஏன் தள்ளுகின்றீர்கள் என சத்தமிட்டு கேட்டுள்ளார். உடனே மேலும் ஆத்திரமடைந்த கோவில் பாதுகாவலர்கள் ஒன்று திரண்டு ஐயப்ப பக்தர்களை தாக்கியுள்ளனர். கோவிலுக்குள் இந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பாராத ஐயப்ப பக்தர்களும் பதிலுக்கு தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னரும் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி தந்துள்ளது. அதன் பின்னர், இந்த பிரச்சினை காவல் நிலையம் வரை சென்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது ஒருபுறமிருக்க, அதே தினத்தில், சுமார் 200க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலையை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது கோவையில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் எரிமேடு சாலையில் சென்றபோது அவர்களை சபரிமலைக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஐயப்ப பக்தர்கள் காவல்துறையினருக்கு எதிராகவும், முதல்வருக்கு எதிராகவும் முழக்கமிட்டுள்ளனர். இதன் காரணமாக, அந்த இடத்தில் திடீர் பரபப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தரப்பில் எந்த ஒரு விளக்கமும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால், ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு கருதியே அந்த நேரத்தில் தடுத்து நிறுத்தியதாக போலீஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியிருந்தது. சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக செல்லும் ஐயப்ப பக்தர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.