Skip to main content

அந்தரங்க காட்சிகள், ஆபாச பேச்சுக்கள்.. -ரவுடி பேபிகள் மீது சைபர் க்ரைம் பாயுமா?

Published on 28/06/2021 | Edited on 28/06/2021
ddd

 

"யூடியூபர் மதன் ஆபாசமாக பேசினான் என்றால், தன்னுடைய அந்தரங்கத்தை வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும், ஆபாசமாக பேசி சமூக வலைத் தளங்களில் பதிவிட்டுவரும் ரவுடிபேபி சூர்யா, ஜி.பி.முத்து, சுகந்தி சகோதரிகள், சாதானா, திவ்யாக்களின் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகின்றது காவல்துறை..? இன்னும் சிறிது நாட்களில் குழந்தைகளுக்கு ஆன்லைன் கிளாஸ் ஆரம்பித்துவிடும். இந்தக் குப்பைகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவது எவ்வாறு.?'' என முதலமைச்சர் தனிப்பிரிவு, காவல்துறை இயக்குநர் தொடங்கி ஏறக்குறைய 20 நபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது அந்தப் புகார்.

 


தற்பொழுது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் என சமூக வலைத்தளங்களை திறந்தாலே ஆபாசத்திற்கு பஞ்சமில்லை. "என்னுடைய அழகிற்கு நடிகையாக வேண்டியது... எனது அழகிற்கு என்ன குறைச்சல்?' என ஆரம்பித்து, தங்களது அந்தரங்கங்களை திறந்த புத்தகமாகப் பதிவிடுகின்றனர் பலர். இதில் தங்களுடைய வக்கிர எண்ணங்களை கலந்து காசு பார்க்கின்றனர் திருப்பூரை சேர்ந்த ரவுடிபேபி சூர்யா, சாதனா, திவ்யா மற்றும் ஜி.பி.முத்து உள்ளிட்ட வலைத்தள பிரபலங்கள். காலையில் எழுந்து உடுத்திய ஆடையை சரிசெய்ய ஆரம்பித்து, பல் துலக்கி முகம் கழுவி, காபி குடித்து குளிக்க செல்வதில் தொடங்கி, இரவில் படுக்கச் செல்வதுவரை அன்றாட செயல்களை அப்படியே அப்பட்டமான வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும், ஆபாசப் பேச்சுக்களாகவும் பதிவிட்டு லைக்ஸை அள்ளுகின்றனர்.

 

இதுபோல்தான் ஜி.பி.முத்து, சாதனா, திவ்யாக்களும். லைக்ஸும், பார்வையாளர்களும் கூடக் கூட... பணம் பையை நிரப்புகின்றது என்பது தனிக்கதை. இந்தப் பணத்திற்காக ஆபாசமாகப் பேசுவதும், அரைகுறையாகவும், அப்பட்டமாகவும் அந்தரங்கங்களைக் காண்பிப்பதும்தான் பிரச்சினையாக வெடித்துள்ளது.

ddd

 

புகார் மனு அனுப்பிய தூத்துக்குடி சங்கரப்பேரியை சேர்ந்தவரோ, "துணை மேலாளர் அந்தஸ்தில் வேலை பார்க்கும் நான் ஓய்வு நேரங்களில் யூடியூபில் சமையல், யோகா மற்றும் ஆன்மிகம் குறித்தான வீடியோக்களை பார்ப்பது வழக்கம். இவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும்போது surya rowdy baby.22 என்கின்ற யூடியூப் முகவரியையும் எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அதில் அவளுடைய பெயர் சூர்யா என்றும், அவள் சினிமா பிரபலம் எனக் கூறிக்கொண்டு தன்னுடைய ஆண் நண்பரான சிக்கா என்பவருடன் சேர்ந்து விளையாடும் ஆபாச விளையாட்டுக்களும், காது கூசும் அளவிற்குமான ஆபாச பேச்சுக்களும் இருந்தன. இனப்பெருக்க உறுப்புக்கள் குறித்து இலை மறையாக பேசிய வார்த்தைகள் கூட இங்கு இல்லை. அத்தனையும் நேரடியாக பகிரப் படுவதோடு மட்டு மில்லாமல் இரட்டை அர்த்த வசனங்களையும் கலந்துபேசி மக்களிடையே, குழந்தைகளிடையே ஆபாசத்தை தூண்டி வருகின்றனர்.

 


இதுபோல்தான் முத்து, சாதனா, திவ்யாக்கள் உள்ளிட்ட ஏனையோரும். இதனால் செக்ஸ் குற்றங்கள் நடைபெற வாய்ப்புண்டு. ஆன்லைன் வகுப்புக்கள் பயிலும் மாணாக்கர்களுக்கு இது வேறுவழியைக் காட்டும் என்பதால் அவளுடைய ள்ன்ழ்ஹ்ஹ ழ்ர்ஜ்க்ஹ் க்ஷஹக்ஷஹ்.22 யூடியூப் முகவரிக்கு சென்று "இது தவறு' என கமெண்ட் பதிவிட்டேன். அதிலிருந்து துவங்கிவிட்டது மிரட்டல்கள். யார், யார் இந்த கமெண்ட்களை பதிவிடுகின்றார்கள்? எந்த ஐ.பி. அட்ரஸிலிருந்து வந்துள்ளது? மொபைல் எண் என்ன? என்பது குறித்து ஆராய்ந்து ஒரு டீம் கூற... ரவுடிபேபி சூர்யாவும் கமெண்ட் செய்த எங்களைப்போன்ற பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். "போலீஸே என் வீட்டுக்கு ஆளை அனுப்பிவிடுவான். உங்களால் ஒண்ணும் புடுங்க முடியாது' என அவள் பேசிய ஆடியோவினையும், அந்தப் புகாருடன் இணைத்துள்ளேன். விரைவில் இது போன்ற ஆபாசங்களை நிறுத்தினால் மாணாக்கர்கள் காப்பாற்றப்படுவார்கள்''" என்கிறார் அவர்.

ddd

"எலே அவம் ..... பார்த்தீயாலே.? "மூச்சு வாங்குது' என முக்கல் முனகல்களுடன் நேரடியாகவே வார்த் தைகளை பிரயோகிக் கப்படும் யூடியூப் வலைத் தள முகவரி ரவுடிபேபி சூர்யாவிற்கு இது 22-வது முகவரி. ஃபேஸ்புக்கின் முகவரியோ 38-வது என்கின்றது. "இன்று மாலை நேரடியாக லைவ்வில் பேசுகின்றேன். இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்' என மொபைல் எண்ணை பதிவிட்டு நேரலையில் செக்ஸியாகப் பேசி ஜொள்ளுவிட வைக்கின்றார் ரவுடிபேபி சூர்யா.

 

சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கில் பெறும் பணம் போதாது என, "கொரோனாவிற்கு உதவிகள் செய்யவுள்ளேன். அந்த மாவட்டத்தில் உதவி செய்யவுள்ளேன். உங்களால் ஆன நிதி உதவியை அனுப்பவும்' எனக்கூறி அதன் மூலமும் லட்சக்கணக்கான ரூபாய் சீட்டிங் செய்வதாக தகவல்.

 

இதே வேளையில், தன்னிடம் உதவி கேட்டு வரும் பெண்களிடம், மாணவிகளிடம், "உங்களுடைய உடல் உறுப்பை போட்டோ எடுத்து அனுப்புங்கள், நண்பர்கள் கேட்டுள்ளார்கள். அதைப் பார்த்தவுடன் பணம் தருவார்கள்' என ஃபேஸ்புக் மெசெஞ்சரில் தூண்டில் போட்டு அந்தரங்க புகைப்படங்களை வாங்கி, அதனைக் காண்பித்து மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபட வைத்த புகாரும் சூர்யா மீது உண்டு. ஆனால், திருப்பூர் மாவட்ட காவல் நிலையத்தார் அதனை குப்பைக் கூடைக்கு ஏன் அனுப்பி யுள்ளார்கள் என்பது விடை தெரியாத கேள்வி. ஏற்கனவே இவர் திருச்சியில் மசாஜ் சென் டரில் விபச்சாரம் நடத்தி கைதானதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

 

தாம்பரம் இருப்புப் பாதை காவல்நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர் ரத்தினகுமாரோ, "என்ன செய்வதென்றே தெரிய வில்லை. ரவுடிபேபி சூர்யா உள்ளிட்டோர் குறித்து, ஆன்லைன் கிளாஸில் படிக்கும் என்னுடைய பெண்ணே திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கு புகார் அனுப்பியிருக்கின்றார். பதிலில்லை. இது குறித்து அந்த மாவட்டத்தில் இருக்கும் என்னுடைய காவல்துறை நண்பர்களிடம் பேசிப் பார்த்தேன், பலனில்லை. வேறு வழியில்லா மல் கையை பிசைந்துகொண்டுள்ளேன். இப்பொழுது யூடியூபர் மதன் கைது செய்யப்பட்டதால், விரைவில் இதில் நடவடிக்கை இருக்கும் என நம்புகின்றேன்'' என்றார் அவர்.

 

"சம்பந்தப்பட்டவரோ, யாரோ ஒருவர் புகாரளித்துதான் வழக்குகளை பதிவு செய்ய வேண்டுமென்பதில்லை. தன் கண்ணால் பார்க்க கேட்கக்கூடிய அனைத்துப் பொதுப்பிரச்சினைகளையும் நீதிமன்றமும், காவல்துறையும் எடுத்துக்கொள்ளலாம். அதுபோல்தான் சைபர் க்ரைமும். தனிப்பட்ட ஒருவர் பாதிக்கப்பட்டாரென அதற்காக களமிறங்குவதை விட்டுவிட்டு, எங்கு மக்கள் பாதிக்கப்படுகிறாரென தெரிந்து, வழக்குப் பதிவு செய்திருந்தால் இதுபோன்ற ஆபாசமான, அரு வருக்கத்தக்க சமூக வலைத்தளவாசிகள் இருக்கமாட்டார்கள்.

 

மீடியாக்களிலேயே விவகாரத்தைப் பொறுத்தவரை முகம் மறைத்தோ, ஒலியை பீப் செய்தோ பதிவிடுகின்றார்கள். சமுதாயத்தை பாதிக்கக்கூடிய, பொது ஒழுக்கத்திற்கு, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய சமூகவலைத்தள விவகாரங்களில் சைபர் க்ரைம் கவனம் செலுத்தி அவர்கள்மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்தாலே ஒருத்தனும் எல்லை மீறமாட்டான்'' என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் மூத்த வழக்கறிஞரான கண்ணன்.

 

 

Next Story

நக்கீரன் செய்தி எதிரொலி! ரவுடி பேபி சூர்யா யூடியூப் சேனலை முடக்க நீதிமன்றம் உத்தரவு!

Published on 28/06/2021 | Edited on 28/06/2021
ddd

 

ஆபாசமாக பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவரும் ரவுடிபேபி சூர்யா, ஜி.பி.முத்து, சுகந்தி சகோதரிகள், சாதானா, திவ்யாக்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார்கள் எழுந்தது. இதுகுறித்து நக்கீரன் ஜூன் 23-25 இதழில் வெளியிட்டிருந்தோம். 

 

இந்த புகார் தொடர்பான வழக்கு இன்று திருப்பூர் முதன்மை அமர்வு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பேதாது நீதிபதி காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த யூடியூப் சேனலை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் உத்தரவிட்டுள்ளார். 

 

 

Next Story

தனுஷ் காமன் டிபியில் சாய் பல்லவி எங்கே? - கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020
cdp

 

 

கடந்த 2018ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் மாரி 2. இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்திலுள்ள ‘ரௌடி பேபி’ பாடல் வெளியான நாள் முதலே பல மில்லியன் பார்வையாளர்களால் காணப்பட்டு  சாதனை படைத்தது. இந்த பாடல் யூ-ட்யூபில் வெளியாகி ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போது 100 கோடி பேர் பார்த்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக இந்திய திரைப்படங்களில் பஞ்சாப் மொழி பாடல் ஒன்றுதான், முதன்முதலில்  100 கோடி பேர் பார்த்து ரசித்தனர். அதன்பின் ஒன்றிரண்டு இந்தி பாடல்கள், இந்த சாதனையை படைத்துள்ளது.

 

ரௌடி பேபி பாடல், 100 கோடி பார்வையாளர்களை கடந்ததன் மூலம், அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய பாடல் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இதனை தொடர்ந்து ரௌடி பேபி பாடல், 100 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார், 'காமன் டிபி' ஒன்றை வெளியிட்டது.

 

வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்ட காமன் டிபியில், தனுஷின் புகைப்படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், காமன் டிபியில் சாய் பல்லவி எங்கே? என, சமூகவலைதளங்களில்  கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவர்கள், ரௌடி பேபி பாடலின் இச்சாதனைக்கு, சாய் பல்லவியின் சிறப்பான நடனமும் ஒரு காரணம். எனவே, அவருடைய புகைப்படமும், காமன் டிபியில் கண்டிப்பாக  இடம் பெற்றிருக்கவேண்டும் என கருத்துகளை பதிவிட்டு, கண்டனம்  தெரிவித்து வருகின்றனர்.