ராக்கெட் மனிதன்



ராக்கெட் விஞ்ஞானி சிவன் நேற்று (புதன் கிழமை) இஸ்ரோவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இஸ்ரோவில் "கிரையோஜெனிக் என்ஜின்" மேம்பாட்டில் முக்கிய பங்காற்றியதால் இவருக்கு 'ராக்கெட் மனிதன்' என்ற பெயரையும் பெற்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த முதல் இஸ்ரோ தலைமை பொறுப்பு ஏற்றவர்.இஸ்ரோ தலைமை பொறுப்பேற்றுள்ள இரண்டாவது ராக்கெட் விஞ்ஞானி என்ற பெருமைகளை பெறுகிறார்.

சிவன் தமிழ்நாட்டிலுள்ள நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எம்.ஐ.டி.கல்லூரியில் ஏரோனாட்டிகள் பயின்று பின்னர் முதுகலை ஏரோ ஸ்பேஸ்படிப்பை பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி.யில்முடித்துள்ளார். சிலவருடங்கள்கழித்து 2006ல் பம்பாயிலுள்ளஐ.ஐ.டி.யில் பி.எச்.டி. ஏரோ ஸ்பேஸ் முடித்தார். 1982லிலேயேஇஸ்ரோவில் பிஎஸ்எல்வி ராக்கெட் உருவாக்கம், ஆராய்ச்சி என்று பலவிஷயங்களுக்கு உதவியாகவும், முக்கியமானவராகவும் விளங்கியுள்ளார். இஸ்ரோவின் பல மேம்பாட்டு திட்டங்களுக்கு இவரது பங்கு நிறையவே உள்ளது என்கின்றனர் இஸ்ரோவில் உள்ள முக்கிய விஞ்ஞானிகள்.



கல்லூரிகளிலும், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் இவரது ஆராய்ச்சி கட்டுரைகள் நிறையவே வெளிவந்திருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இவர் இந்தியன் நேஷனல் அகாடமி ஆப் என்ஜினியரிங், ஏரோநாட்டிகள் சொசைட்டி ஆப் இந்தியா, சிஸ்டெம் சொசைட்டி ஆப் இந்தியா, சிஸ்டெம் சொசைட்டி ஃபார் சைன்ஸ், என்ஜினீயரிங் போன்ற சங்கங்களில் நிருபராகவும் உள்ளார். இவர் தன்துறை சார்ந்த பல விருதுகளை பெற்றுள்ளார். சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகம்ஏப்ரல் மாதம் 2014ல் முனைவர் பட்டமும் இவருக்கு தந்து சிறப்பித்துள்ளது.

இவர் இந்தியாவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற இரண்டு திட்டங்களிலும் பணியாற்றியுள்ளார்.கடந்த ஆண்டு உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ஒரே ராக்கெட்டில் 104 சாட்டிலைட் அனுப்பப்பட்டு இந்தியா சாதனை படைத்தது, இந்த ராக்கெட் திட்டத்தில்முக்கிய பங்காற்றியவர் "ராக்கெட் மனிதன்" சிவன்.இஸ்ரோ தனது100 ஆவது ராக்கெட்டை 30 சாட்டிலைட்டுடன் நாளைவிண்ணில் பறக்க காத்திருக்கிறது. இவர் பொறுப்பேற்ற பின்பு விண்ணிற்கு செல்லும் முதல் ராக்கெட் இது என்பது கூடுதல் சிறப்பு.

-சந்தோஷ் குமார்
இதையும் படியுங்கள்
Subscribe