Skip to main content

அமைச்சர்கள் கொந்தளிப்பு! அரசாணையை ரத்து செய்த எடப்பாடி! 

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

கரோனா வைரசால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அனைத்து தொழில் நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில்,சில தொழிற்சாலைகளைத் திறக்க அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை,சில மணி நேரங்களில் அவசரம் அவசரமாக ரத்து செய்யப்பட்டது.இந்த விவகாரம்,நேற்று இரவு ஏகத்துக்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதன் பின்னணிகளை விசாரித்த போது,எடப்பாடியிடம் அமைச்சர்கள் கொந்தளித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறாது. 
 

இது குறித்து கோட்டையிலுள்ள உயரதிகாரிகளிடம் விசாரித்த போது, "கரோனா விவகாரத்தைக் கவனிக்க தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.இந்தக் குழுவில் மூத்த ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் இருக்கின்றனர்.இவர்கள் தான் ,கரோனா வைரஸால் உருவாகியுள்ள அனைத்து பிரச்சனைகளையும் கவனித்து வருகின்றனர். 
 

டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்ட உத்தரவால், கரோனா விவகாரத்தில் அமைச்சர்களின் பங்களிப்பை நிறுத்திவிட்டு அணைத்து பொறுப்புகளையும் அதிகாரிகளிடமே கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி. ஆக, கரோனா விசயத்தில்  சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட அனைவருமே புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 

 

eps


 

http://onelink.to/nknapp


இந்த நிலையில், கட்டுமான நிறுவனங்கள் உட்பட சில தொழில் நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இழந்திருப்பதாகவும் அதனால் எங்கள் நிறுவனங்களைத் திறக்க  அனுமதிக்க வேண்டுமெனவும் தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.இது குறித்து முதல்வர் எடப்பாடியிடம் விவாதித்துள்ளார் சண்முகம்.அவரும் ஒப்புதல் தர, இதனையடுத்து ,சுத்திகரிப்பு தொழிற்சாலைகள்,இரும்பு, சிமெண்ட், உரம் தொழிற்சாலைகள், ஜவுளி ஆலைகள் ,தோல் தொழிற்சாலைகள், டயர் தொழிற்சாலைகள், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்  உள்ளிட்ட 13 தொழிற்சாலைகளைத் திறக்க அனுமதியளிக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்க தொழில் துறை செயலாளருக்கு உத்தரவிடகிறார் தலைமைச் செயலாளர் சண்முகம்.

மேலும், இந்த அரசாணையை அனைத்து துறைகளுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி வைக்கும்படியும் உத்தரவிடப்படுகிறது. அதன்படி நேற்று மாலையில் (7.4.2020) அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், திறக்கப்படும் தொழிற்சாலைகளில் குறைந்த அளவில் தொழிலாளர்களைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 
 

இந்த அரசாணையை அறிந்து அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். மேலும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.இதனையடுத்த சில மணி நேரங்களில் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது " என்கிறார்கள். 


அரசாணை போடப்பட்டதன் நோக்கம் என்ன? பிறகு  ஏன் ரத்து செய்ய வேண்டும்? என்பது குறித்து உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, " சில பல காரணங்களுக்காகத்தான் இந்த அரசாணை போடப்பட்டது. குறிப்பிட்ட தொழிற்சாலைகள் திறக்கப்படுவதில் அரசுக்கு லாபம் இருக்கிறது.அதனால்தான் அப்படி ஒரு அரசாணை.ஆனால்,கரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கும் நிலையில் இப்படி ஒரு அரசாணை தேவையா? என மூத்த அமைச்சர்கள் சிலர்  அதிருப்தியடைந்திருக்கிறார்கள். 
 

முதல்வர் எடப்பாடிக்குத் தெரியாமல் இது நடந்திருக்காது என யோசித்த சீனியர்கள் எடப்பாடியிடம், 'ஊரடங்கும் 144 தடையும் அமலில் இருக்கிறது.வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என ஏகப்பட்ட நிபந்தனைகளை மக்களுக்கு அறிவுறுத்தி அவர்களை முடக்கி வைத்திருக்கிறோம்.கரோனா வைரஸ் சமூகத் தொற்றாகப் பரவாமல் இருக்க சுகாதாரத் துறையினர் தங்களைப் பற்றி கவலைப்படாமல்  போராடி வருகின்றனர்.அப்படியிருக்கையில், தொழிற்சாலைகளை திறப்பதும் ,தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதும்  கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கப் போராடும் சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிரானது. 
 

இதனால்,கரோனா பரவல் அதிகமானால் யார் பொறுப்பேற்பது? நாடே நெருக்கடியாகியிருக்கும் முக்கியப் பிரச்சனையில் அமைச்சர்கள்  பணி செய்ய முடியவில்லை.ஒட்டு மொத்த அதிகாரமும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அவர்கள் உங்களைத் தவறாக வழி நடத்துகிறார்கள் ' எனக் கொந்தளித்ததுடன், 'அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பும் இல்லை ' என்றெல்லாம் கோபம் காட்டியிருக்கிறார்கள். இந்தச் சூழலில்,முதல்வர்   எடப்பாடியைத் தொடர்புகொண்டு,இந்த அரசாணைக்கு எதிராக சில பிரச்சனைகளைத் தெரிவித்திருக்கிறார்கள் தொழிலாளர் நலத்துறையின் அதிகாரிகள். இதனையடுத்து சர்ச்சைக்குரிய  அந்த அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட்டார் எடப்பாடி " என விவரிக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“பிரதமர் மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில்களுக்கு பேரழிவு” - ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Jairam Ramesh alleges Damage for small and micro businesses under Prime Minister Modi's rule

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பா.ஜ.க மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட 10 லட்சத்திற்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) என்ற செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பைப் பெருமைப்படுத்தியது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மற்றும் திட்டமிடப்படாத கொரோனா கால ஊரடங்கு ஆகிய மும்முனை தாக்குதலால் MSME சுற்றுச்சூழல் அமைப்பை அழித்தது.

இதனை, ராகுல் காந்தி கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறார். மேலும், ஏப்ரல் 12 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்தியப் பேரணியின் மெகா பேரணியின் போது அவர் மீண்டும் வலியுறுத்தியது போல், மாநிலத்தின் தொழில்துறை மையமான கோவை பகுதியில் உள்ள எம்எஸ்எம்இ என்னும் மையத்தின் தவறான நிர்வாகத்தால் தத்தளிக்கின்றன. பணப்புழக்கத்தை அதிகம் நம்பியிருக்கும் கொங்குநாட்டின் MSMEகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. திருப்பூரில் ஏற்பட்ட திடீர் பொருளாதார சீர்குலைவைத் தாங்க முடியாமல் 1,000 சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள  எம்.எஸ்.எம்.இ.களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் கொடுத்த இரண்டாவது அடி ஜி.எஸ்.டி ஆகும். மிக சிக்கலான வரி விதிப்பு முறை அவசரமாக கொண்டு வரப்பட்டது. பெரிய நிறுவனங்கள் அவற்றின் பயனுள்ள வரி விகிதத்தை 27% லிருந்து 28% ஆகக் கண்டாலும், MSMEகள் அவற்றின் பயனுள்ள வரி விகிதத்தை முந்தைய ஆட்சியை விட இரு மடங்காகக் கண்டன. 2019 ஆம் ஆண்டளவில், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 50,000 தொழில் நிறுவனங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2017-18ல் மட்டும் 5.19 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர். 

மோடி அரசின் மோசமான நிர்வாகத்தினால் கொங்கு வட்டாரத்தில் இன்னும் சிறு, குறு தொழில்கள் பாதிப்பில் இருந்து மீளவில்லை. மோடி என்ற தனிமனிதர் ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு என்ற பேரிழப்பால் பொருளாதார நடவடிக்கையே முடங்கிப் போய்விட்டது. தொழிலாளர்களுக்கு சிறு, குறு தொழில் நிறுவனங்களால் ஊதியம் வழங்க முடியாத நிலையால் பொருள் நுகர்வும் முடங்கிப் போனது. நடைமுறை மூலதனத்தை நம்பியே செயல்படும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.