Advertisment

கட்டுக்கடங்காத காட்டுத்தீக்கு காரணம் என்ன???

துணை முதல்வர் ஓ.பி.எஸ். குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு மூங்கில் மரங்கள் உரசிக்கொண்டதுதான் காரணம் என கூறினார். ஆனால் காட்டுத்தீக்கு அதுமட்டுமா காரணம்?

Advertisment

wildfire

ஒரு விஷயம் மிக வேகமாக பரவினால் அதை ஊரில் இருப்பவர்கள் "விஷயம் காட்டுத்தீ மாதிரி பரவிருச்சு" என்று கூறுவார்கள். அதற்கு காரணமும் உண்டு. ஏனென்றால் காட்டுத்தீ என்பது அவ்வளவு வேகமாக பரவக்கூடியது. காட்டுத்தீ ஏற்பட்டுவிட்டால் அதை அவ்வளவு சீக்கிரம் அணைத்துவிடவும்முடியாது.

காட்டுத்தீகாற்று வீசும் திசையில்தான் பயணிக்கும் என்பதால்அது ஒரு திசையைநோக்கி மட்டும்பயணிக்காது. காற்றடிக்கும் திசை சிறிது மாறினாலும் ஒட்டுமொத்த காட்டுத்தீயுமே திசை மாறிவிடும். இது அண்டார்டிக்கா தவிர அனைத்து கண்டங்களிலும் காலம்,காலமாக நடந்துகொண்டு இருக்கிறது.

  • மின்னல் காட்டை தாக்கும்போதுஅங்கிருக்கும்காய்ந்த சருகுகள், மரக்கட்டைகள், மரங்கள் எரிந்து அதுபெரிதாகி காட்டுத்தீயாக மாறிவிடுகிறது.
  • காய்ந்த மரங்கள் ஒன்றோடொன்றுஉரசும்போதுஉராய்வின் காரணமாக தீ பிடிக்கும்.
  • கோடை காலங்களில் ஏற்படும் வெப்பம் காரணமாகவும், எரிமலை வெடிப்பு ஆகியவற்றாலும் கூட காட்டுத்தீ ஏற்படும். பாறை விழும்போது ஏற்படும் உராய்வாலும் காட்டுத்தீ ஏற்படும்.
  • இயற்கையாக ஏற்படுவதை காட்டிலும் செயற்கையாக ஏற்படும் காட்டுத்தீக்கள்தான் அதிகம்.காட்டிற்கு செல்லும் மனிதர்கள் அங்குதீக்குச்சிகள், தீக்கங்குகளைசரியாக அணைக்காமல் விட்டுவிடுவதால் அவைகாய்ந்த பொருட்களின் மீதுபடும்போது அங்கு தீ உருவாகிறது. அது அப்படியே பரவி காட்டுத்தீ ஆகிவிடுகிறது.
  • மதுபாட்டில்கள் அல்லது கண்ணாடி பாட்டில்களை காட்டில் விட்டு,விட்டு சென்றுவிடுகின்றனர். அந்த பாட்டில்கள்மீது சூரியஒளி விழும்போது ஒளி ஓரிடத்தில்குவிக்கப்படுகிறது.அங்குஇருக்கும் பேப்பர்கள், சருகுகள் போன்றவை எரிய ஆரம்பித்து அது காட்டுத்தீயாக பரவும்.
Advertisment

காட்டுத்தீயின் திசையை காற்று மட்டுமே தீர்மானிப்பதால் அதுவாக அணைந்தால் மட்டுமே சாத்தியம். மலைகள் என்பதால் தீயணைப்பு படைகளின் கடும்முயற்சிகள்கூட பலனளிக்காமல் போவதுண்டு. காட்டுத்தீ ஏற்படுவதால் நிலத்தில் உள்ள கார்பன் அளவு அதிகரிக்கும், தொடர்ந்து நீண்ட நாட்கள் எரிந்தால்சுற்றுசூழல் கடுமையாகபாதிக்கப்படும். மழை மேகங்களையும் கூட இவை நச்சாக மாற்றிவிடும்.

wildfire
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe