Skip to main content

கட்டுக்கடங்காத காட்டுத்தீக்கு காரணம் என்ன???

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

துணை முதல்வர் ஓ.பி.எஸ். குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு மூங்கில் மரங்கள் உரசிக்கொண்டதுதான் காரணம் என கூறினார். ஆனால் காட்டுத்தீக்கு அதுமட்டுமா காரணம்? 
 

wildfire



ஒரு விஷயம் மிக வேகமாக பரவினால் அதை ஊரில் இருப்பவர்கள் "விஷயம் காட்டுத்தீ மாதிரி பரவிருச்சு" என்று கூறுவார்கள். அதற்கு காரணமும் உண்டு. ஏனென்றால் காட்டுத்தீ என்பது அவ்வளவு வேகமாக பரவக்கூடியது. காட்டுத்தீ ஏற்பட்டுவிட்டால் அதை அவ்வளவு சீக்கிரம் அணைத்துவிடவும் முடியாது.
காட்டுத்தீ காற்று வீசும் திசையில்தான் பயணிக்கும் என்பதால் அது ஒரு திசையை நோக்கி மட்டும் பயணிக்காது. காற்றடிக்கும் திசை சிறிது மாறினாலும் ஒட்டுமொத்த காட்டுத்தீயுமே திசை மாறிவிடும். இது அண்டார்டிக்கா தவிர அனைத்து கண்டங்களிலும் காலம்,காலமாக நடந்துகொண்டு இருக்கிறது.

  • மின்னல் காட்டை தாக்கும்போது அங்கிருக்கும் காய்ந்த சருகுகள், மரக்கட்டைகள், மரங்கள் எரிந்து அது பெரிதாகி காட்டுத்தீயாக மாறிவிடுகிறது. 
  • காய்ந்த மரங்கள் ஒன்றோடொன்று உரசும்போது உராய்வின் காரணமாக தீ பிடிக்கும்.
  • கோடை காலங்களில் ஏற்படும் வெப்பம் காரணமாகவும், எரிமலை வெடிப்பு ஆகியவற்றாலும் கூட காட்டுத்தீ ஏற்படும். பாறை விழும்போது ஏற்படும் உராய்வாலும் காட்டுத்தீ ஏற்படும்.
  • இயற்கையாக ஏற்படுவதை காட்டிலும் செயற்கையாக ஏற்படும் காட்டுத்தீக்கள்தான் அதிகம். காட்டிற்கு செல்லும் மனிதர்கள் அங்கு தீக்குச்சிகள், தீக்கங்குகளை சரியாக அணைக்காமல் விட்டுவிடுவதால் அவை காய்ந்த பொருட்களின் மீது படும்போது அங்கு தீ உருவாகிறது. அது அப்படியே பரவி காட்டுத்தீ ஆகிவிடுகிறது.
  • மதுபாட்டில்கள் அல்லது கண்ணாடி பாட்டில்களை காட்டில் விட்டு,விட்டு சென்றுவிடுகின்றனர். அந்த பாட்டில்கள்மீது சூரியஒளி விழும்போது  ஒளி ஓரிடத்தில் குவிக்கப்படுகிறது. அங்கு இருக்கும் பேப்பர்கள், சருகுகள் போன்றவை எரிய ஆரம்பித்து அது காட்டுத்தீயாக பரவும்.

காட்டுத்தீயின் திசையை காற்று மட்டுமே தீர்மானிப்பதால் அதுவாக அணைந்தால் மட்டுமே சாத்தியம். மலைகள் என்பதால் தீயணைப்பு படைகளின் கடும் முயற்சிகள்கூட பலனளிக்காமல் போவதுண்டு. காட்டுத்தீ ஏற்படுவதால் நிலத்தில் உள்ள கார்பன் அளவு அதிகரிக்கும், தொடர்ந்து நீண்ட நாட்கள் எரிந்தால் சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கப்படும். மழை மேகங்களையும் கூட இவை நச்சாக மாற்றிவிடும். 

Next Story

2,500 காண்டாமிருக கொம்புகளை பொதுவெளியில் எரித்த அரசு! - காரணம் இதுதான்?

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Government burns 2,500 rhino horns in public!

 

ஆண்டுதோறும் செப். 22ஆம் தேதி உலகம் முழுவதும் காண்டாமிருக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக அளவில் வேட்டையாடப்படும் விலங்குகளில் ஒன்று காண்டாமிருகம். காண்டாமிருகத்தின் கொம்புகள் மருத்துவ குணம் கொண்டவை என்ற தவறான புரிதல் காரணமாக தொடர்ச்சியாக கொடூரமாக காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுகிறது.

 

Government burns 2,500 rhino horns in public!

 

இந்நிலையில், நேற்று (22.09.2021) அசாம் மாநிலத்தில் சுமார் 2,500 காண்டாமிருக கொம்புகள் ஒன்றாக வைத்து கொளுத்தப்பட்டது. காண்டாமிருகத்தின் கொம்புகளில் மருத்துவக் குணம் இல்லை, காண்டாமிருகங்களை வேட்டையாடுவது காட்டுமிராண்டித்தனமானது என்பதை உணர்த்துவதற்காக காண்டாமிருக கொம்புகளை எரிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்ததாக அசாம் அரசு தெரிவித்துள்ளது. போகோகட் பகுதியில் பொதுவெளியில் வைத்து அரசின் வசம் இருந்த சுமார் 2,500 காண்டாமிருக கொம்புகள் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் எரியூட்டப்பட்டன. 

 

 

Next Story

கருணை காட்டிய மழை.... படிப்படியாக அணையும் காட்டுத்தீ!

Published on 17/01/2020 | Edited on 17/01/2020

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வகையில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயில் இதுவரை 3000 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாயின. காடுகளில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மிருகங்கள் பலியாகின. வனங்களில் உள்ள மருத்து குணம் கொண்ட பல்வேறு வகையான தாவரங்கள், மரங்கள் ஆகியவை கூண்டோடு அழிந்தன. இந்த காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த கங்காரு ஒன்றின் புகைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் பார்ப்பவர்களின் மனதை உறைய வைக்கும் வகையில் அமைத்திருந்தது. 



நேற்று அதிகாலை முதல் காட்டுத்தீ அதிகமாக உள்ள இடங்களில் பலத்த மழை பெய்து வருவதாக அந்நாட்டு அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் காட்டுத்தீயை விரைவில் முழுவதுமாக அணைத்து விடலாம் என்று ஆஸ்திரேலிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. தொடர் நெருக்கடியால் செய்வதறியாது திகைத்த அந்நாட்டு மக்களுக்கு மழை கருணை காட்டியுள்ளது.