Skip to main content

உண்மையான கதாநாயகர்கள் நீங்கள் தான்! மின்வாரிய ஊழியர்களுக்கு குவியும் பாராட்டு...

Published on 24/11/2018 | Edited on 24/11/2018
electricity board workers



 

electricity board workers



 

electricity board workers



 

electricity board workers


 

electricity board workers




கஜா புயலின் கோரத்தாண்வத்தினால் டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள் சரிந்துள்ளன. பெரும்பாலான மின்கம்பங்கள் வயல்களில் விழுந்துள்ளன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மின் ஊழியர்கள் அவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

உணவு அருந்தக்கூட நேரம் இல்லாமல் அவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மாவட்டங்களில் தொடர்ந்து அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையிலும் மின்வாரிய பணியாளர்கள் சாலையில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கும் மேல் மிகுந்த சிரமத்திற்கு இடையில் மின்கம்பங்களை எடுத்துச்சென்று குழிபறித்து ஒவ்வொரு மின்கம்பமாக நட்டு வருகின்றார்கள்.

 

electricity board workers


 

electricity board workers


 

electricity board workers



நாகப்பட்டிணத்திலல் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர், சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் மின்கம்பத்தின் மேலே உட்கார்ந்தப்படியே உணவருந்தினார். இந்தக் காட்சி இணையத்தில் தீயாக பரவி பலரையும் மெய்சிலிக்க வைத்துள்ளது. மின்வாரிய ஊழியர்களை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டியுள்ளனர். சமூக வலைதலங்களிலும் அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

 

மழை தூறல்களுக்கு மத்தியில் காலை முதலே, கஜா புயல் பாதித்த கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்க வயலில், சேற்றில், தண்ணீரில் இறங்கி, உயிரை பணயம் வைத்து சேவையாற்றிய மின்சார ஊழியர்களை இன்று காலை நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி சந்தித்து நலம் விசாரித்தார். 


 

eb



அவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்து, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்களை, கஜா புயலின் பாதிப்பை நிவர்த்தி செய்யும், கதாநாயகர்கள் நீங்கள் தான் என பாராட்டி உற்சாகப்படுத்தினார். 

 

நாங்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே இருப்பதாகவும், தங்களை பணி நிரந்தரம் செய்ய சட்டமன்றத்தில் பேசுங்கள் எனவும் மின் ஊழியர்கள் தமிமுன் அன்சாரியிடம் கோரிக்கை வைத்தனர். எங்கள் பகுதி மக்களுக்காக அயராது பாடுபடும் உங்களுக்காக, நிச்சயமாக  குரல் கொடுப்பேன் என அவர்களிடம் தெரிவித்தார். 

 

இதனிடையே கடந்த 16ஆம் தேதி நாகையை சேர்ந்த வயர்மேன் சண்முகம் என்பவர் சீரமைப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 20ஆம் தேதி புதுக்கோட்டையில் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல்லைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்த நிலையில் அவர் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 

இதுதொடர்பாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சீரமைப்பு பணியின்போது உயிரிழந்த சண்முகம், முருகேசன் ஆகியோர் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக தலா ரூபாய் 15 லட்சம் வழங்கப்படும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், ஈ டெண்டர் முறையில் அவுட்சோர்சிங் விடுவதை ரத்து செய்திட வேண்டும், கேங்மேன் ஊழியர்களுக்கான சலுகைகள் வழங்கிட வேண்டும், மின்சார துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்  என வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு மத்திய சென்னை கிளை சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் பின்புறம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
 

Next Story

தேங்காய் சிரட்டை மாலையுடன் போராடிய தேமுதிக

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

dmdk who fought wearing a garland of coconuts

 

கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

 

இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.