Skip to main content

பால்கே விருதும் ராம்கோபால் வர்மாவின் கீழ்த்தரமான பார்வையும்

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

 

இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் என்பதால் இந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்பட்டு வருகிறார் தாதா சாகெப் பால்கே.   இவரின் நினைவாகத்தான் இந்திய திரைப்படத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசால் ஆண்டுதோறும் தாதாசாகெப் பால்கே  விருது வழங்கப்பட்டு வருகிறது.

 

r


1969ம் ஆண்டிலிருந்து இயக்குநர்கள் சத்யஜித்ரே, எல்.வி.பிரசாத், வி.என்.ரெட்டி, அடூர் கோபாலகிருஷ்ணன், மிருணாள் சென், சியாம் பெனகல், கே.விஸ்வநாத், கே.பாலசந்தர், யாஷ் சோப்ரா, டி.ராமாநாயுடு, நடிகர்கள் பிரித்விராஜ் கபூர், ராஜ்கபூர், திலிப்குமார், நாகேஷ்வரராவ், சிவாஜி கணேசன், தயாரிப்பாளர்கள் வி.சாந்தாராம், பி.நாகிரெட்டி, டி.ராமாநாயுடு, இசையமைப்பாளர்கள் நௌஷத், பாடகர்கள் லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, பாடலாசிரியர் குல்சார் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.   2018ம் ஆண்டிற்கான விருதுக்காக நடிகர் அமிதாப்பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  

 

r

 

தாதா சாகேப் விருதுக்கு தேர்வுபெற்ற அமிதாப்பிற்கு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள்  வாழ்த்துகள் சொல்லிவரும் நிலையில், வழக்கம்போல தனது சர்ச்சையை ஆரம்பித்துள்ளார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.  1913ம் ஆண்டில் பால்கே இயக்கம், தயாரிப்பில் வெளிவந்த ‘ராஜா அரிச்சந்திரா’ படம்தான் இந்தியாவின் முதல் மவுனப்படம்.   ’’பலமுறை முயற்சி செய்தும் இப்படத்தை 10 நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை. ஆனால், அமிதாப்பச்சன் நடித்த பல படங்களை  10 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன்.  அமிதாப்பச்சனுக்கு பால்கே விருது தருவதை விட, பால்கேவுக்குத்தான் அமிதாப்பச்சன் விருது தரவேண்டும்’’ என்று இன்ஸ்டாகிராமில் கிண்டலடித்துள்ளார்.

 

முன்னோர் நடந்து சென்ற ஒத்தையடிப்பாதைகள்தான் இன்று தார்ச்சாலைகளாக பளபளக்கின்றன. காலமாற்றங்களின் வளர்ச்சியையும், முன்னோடிகளையும் உணராத ராம்கோபால் வர்மாவுக்கு பலரும் கணடனங்களை தெரிவித்துள்ளனர்.

 

Next Story

“இதுதான் எனது கனவு” - இயக்குநர் ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

ramgopal varma talk about ponnu movie

 

இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படத்தை பொண்ணு என்ற பெயரில் உருவாக்கியுள்ளார். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பூஜா பலேகர் சண்டைக் காட்சிகளில் அசத்தியுள்ளார். இப்படத்தை  ARTSEE MEDIA PRODUCTION மற்றும் INDO / CHINESE CO PRODUCTION  நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

 

அதில் பேசிய இயக்குநர் ராம்கோபால் வர்மா, "இந்தப்படம் எனக்கு மிகவும் சவாலான மனதிற்கு பிடித்த படம். கல்லூரி நாட்களிலிருந்தே புரூஸ்லி என் இதயத்திற்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். அவர் படங்களை நான் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். அவரின் படங்கள் போல் இந்தியாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் வந்ததில்லை. நான் இயக்குநராக வந்த பிறகு மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது தள்ளிப்போனது. இறுதியாக இந்தப்படம் எடுக்க நினைத்த போது புரூஸ்லீயின் உருவம் என் மனதில் வந்து போனது. அவர் மிக ஒல்லியான உருவம் கொண்டவர் ஆனால் திரையில் அவர் தரும் மேஜிக் அற்புதமானது. அதே நேரம் ஒரு பெண்ணை வைத்து எடுத்தால் என்ன என எனக்கு தோன்றியது. பலரைத் தேடி கடைசியாக பூஜா பலேகர் குறித்து கேள்விப்பட்டுச் சந்தித்தேன். அவரின் திறமைகள் பார்த்து வியந்தேன். 

 

அவரின் வீடியோவை மார்ஷியல் ஆர்ட்ஸ் பிறப்பிடமான சைனாவின் ஒரு கம்பெனியிடம் காட்டினேன். அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். பிறகு இந்தப் படத்தை அவர்களுடன் இணைந்து தயாரித்தேன். கோவிட் காரணங்களால் இந்தப்படம் தாமதமாகிவிட்டது. அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தை ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும் எனத் திட்டமிட்டோம். ஹைதராபாத்தில் புரூஸ் லீயின் 'என்டர் தி டிராகன்' திரைப்படம் பார்க்க என்னிடம் பணம் இல்லை ஆனால் இப்போது என்னுடைய மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் அதே தியேட்டரில் வெளியாகவுள்ளது மகிழ்ச்சி. இதுதான் எனது  கனவு, இப்போது நனவாகி இருப்பது சந்தோஷம்" என நெகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டார். 

 

 

 

Next Story

"படத்தை வெளியிட மறுக்கிறார்கள்" - ராம்கோபால் வர்மா குற்றச்சாட்டு

Published on 08/04/2022 | Edited on 08/04/2022

 

ram gopal varma Dangerous movie postponed

 

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி இயக்குநராக இருக்கும் ராம் கோபால் வர்மா சூர்யா நடிப்பில் வெளியான ரத்த சரித்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார். இவர் தற்போது காதல் காதல்தான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அப்சரா, நைனா கங்குலி இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லெஸ்பியன் ஜோடி பற்றி த்ரில்லர் கதை படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாக இருந்தது. ஆனால் இப்படம் இன்று வெளியாகவில்லை. 

 

 

இது குறித்து படத்தின் இயக்குநர் ராம் கோபால் வர்மா  கூறுகையில், "சில திரையரங்குகள் இப்படத்தை லெஸ்பியன் படம் என்று கூறி திரையிட மறுத்துள்ளன. இந்திய துறையில் ஆணும் பெண்ணும் காதலிப்பதாக நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகிறது. அதே போலதான் நான் பெண்ணும் பெண்ணும் காதலிப்பது போன்றுதான் படம் எடுத்தான். ஓரின திருமணம் குறித்து உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. ஆணும் பெண்ணும் முத்தமிடுவது எப்படி சகஜமோ அப்படித்தானே பெண்ணும் பெண்ணும் முத்தமிடுவதும். அதனால் என் படத்தின் முத்தக்காட்சிகளை வைத்தேன். இதை செக்ஸ் சினிமா என்று கூறி வெளியிட மறுக்கிறார்கள். இதனால் படத்திற்கு போதிய திரையரையரங்குகள் கிடைக்காததால், படத்தை வெளியிட முடியவில்லை. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும்" என கூறியுள்ளார்.